Sunday, December 28, 2003

Mythology of Inuits - 2



இதுவரை எழுதியது: 1, 2, 3

இனுயிட் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றி இன்னும் கொஞ்சம்...

இனுயிட் மக்கள் வானத்திலும், பூமிக்குக் கீழேயும் நிலம்/வாழுமிடங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். வானத்தில் இருக்கும் இடத்தையும், பூமிக்குக் கீழே இருக்கும் நிலத்தையும் அவ்வவிடங்களில் உலவும் சூட்சும வாயு நிர்ணயிக்கிறது என்றும் சொல்கிறார்கள். முன்பே ஓரிடத்தில் சொன்னதுபோல பிராணிகளுக்கு ஆன்மா இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதனாலேயே, பிராணிகளுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள் இனுயிட். பிராணிகளின் ஆத்மாவை விட மனிதர்களின் ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் குழப்பம் தருவனவாகவே இருக்கின்றன (வெள்ளையருக்கு. நம்முடைய நம்பிக்கைகளுக்கும் இனுயிட்களின் நம்பிக்கைகளுக்கு சில ஒற்றுமைகள் இருப்பதாக எனக்குப் படுகிறது.)

மனிதர்களின் ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா. உதாரணத்து ஒரு விஷயத்தைப் பார்ப்போம். ஒரு இனுயிட் மனிதன் எப்படி இறந்துபோகிறான் என்பதைப்பொறுத்து, அவனுடைய ஆவியில் ஒரு பகுதி ஜென்மஜென்மத்துக்கு வானத்தில் இருக்கும் வாழுமிடத்தையோ, பூமிக்குக் கீழே இருக்கும் வாழுமிடத்தையோ அடைகிறது. அங்கிருந்து அந்த உயிரின் பகுதி வெளியேறவே வெளியேறாது. இறந்தவரின் ஆத்மாவில் மீதிப்பங்கு, இறந்தவரின் குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அடைகிறதாம். இதனாலேயே, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சமீபத்தில் இறந்துபோன உறவினரின் பெயரை வைக்கிறார்கள். இப்படிப் பெயர் வைத்தால், இறந்தவரின் நல்ல குணங்கள் குழந்தைக்கும் வரும் என்று நம்புகிறார்கள்.

இதுவரை கூறியதில் எதெல்லாம் நம்முடைய கலாச்சாரத்துக்கும் நம்பிக்கைகளோடும் ஒத்துப்போகிறது என்று சொல்லுங்கள். நான் அடுத்த பகுதியோடு வருகிறேன்.

Friday, December 26, 2003

படித்ததில் பிடித்தது!



நான்.... சுதந்திரம்

அலையாய் என்னுள் மாற
நான் குளமல்ல, அருவி

சிலையாய் எனைச் செதுக்க
நான் கல்லல்ல, சுயம்பு

மாலையாய் எனைச்சூட
நான் பூவல்ல, விண்மீன்

நிழலாய் என்னுள் ஒதுங்க
நான் மரமல்ல, சூரியன்

நினைத்தவுடன் கட்டிக்கொள்ள
நான் சேலையல்ல, தாலி

தொடரவும் தீண்டவும் உருமாற
நான் மேகமல்ல, வானம்

ஆசைப்பட்டவுடன் அணிந்து கொள்ள
சேராவிட்டாலும் திணித்துக் கொள்ள
உன் விரல் மோதிரமல்ல என் ஆசைகள்
வைத்துப் பூட்டவும்
வசதிப்பட்டால் செலவழிக்கவும்
நான் காந்தி சிரிக்கும் காகிதமல்ல, கன்னி

அள்ளி முடியவும்
அவிழ்த்துப் போடவும்
நான் உன் சாயம் போன மயிரல்ல, மனம்

என் சுதந்திரம் நீ ஒதுக்கும்
பட்ஜெட் தொகையல்ல
உன்னிடமிருந்து நான் பெற

சிகரம் ஏறவும், சிரித்து மகிழவும்
உன்னிடம் வேண்டுவது சுதந்திரமல்ல, காதல்.

- திலகபாமா

Thursday, December 25, 2003






Friday, December 19, 2003

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 2

எங்கள் பள்ளிவிடுதியில் நடுவே முற்றம் இருக்கும். சில செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தது. அதைச்சுற்றி இருக்கும் நடைபாதைவழியே சுற்றிப்போவதற்கு சோம்பல்பட்டு வார்டன் பார்க்காத சமயம் தாவித்துள்ளிக்குதித்து ஓடியிருக்கிறோம். சின்ன விஷயந்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எங்களுடைய வார்டன் கத்த ஆரம்பித்தால் நிறுத்தமாட்டார். (இந்தக்கட்டுரையை அப்ப எழுதி இருந்தால், இவ்வளவு மரியாதையெல்லாம் வார்டனுக்கு கிடைத்திருக்காது. )

டைனிங் ஹாலை அடுத்து விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியைகளும், வார்டனும் உணவருந்தும் அறை இருக்கிறது. அந்த அறைக்கு முன்னால் சின்ன கையலம்பும் இடம். மற்றப்பக்கத்தில் விடுதியின் சமையலறை இருக்கிறது. பெரிய பெரிய அண்டாக்களும் கரிச்சட்டிகளும் நிறைந்திருக்கும் பெரிய அறை. சில வேளைகளில் இரவில் மாணவிகள் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் கோழி முட்டைகளை, அடையாளமிட்டு அவிப்பதற்குக் கொடுப்பார்கள். அதற்கப்பாலிருக்கும் பூட்டியிருக்கும் அறைகளின் என்ன இருந்திருக்கும் என்றெல்லாம் அப்போது நான் யோசித்ததில்லை. அந்த நடைபாதையில் நடந்தால் நேரே பள்ளிக்குப்போகும் வாசல் இருக்கிறது. அடுத்த பக்கத்தில் sickroom. யாருக்காவது காய்ச்சல், வேறு உபாதைகள் வந்தால், இங்குதான் வந்து படுக்கவேண்டும். ஒரு முறை அனல் பறக்கும் காய்ச்சலோடு இங்கு படுத்துக்கொண்டு halucinate பண்ணியது லேசாக நினைவில் இருக்கிறது. அடுத்து இருக்கும் பெரிய அறையில் சில மாணவிகள் தங்கியிருப்பர். ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு பெயரும் எண்ணும் இருந்ததாக ஞாபகம். (வேம்படியில் விடுதியில் தங்கிப்படித்த யாரையாவது சந்தித்தால் கேட்கவேண்டும்.)

நான்கு பக்கத்தையும் சுற்றிப்பார்த்தாயிற்று. சாப்பாட்டு அறைக்கு எதிரே கைகழுவ இருந்ததைப்போலவே, அதே அமைப்புடன் எதிர்ப்புறத்திலும் கட்டப்பட்டு இருந்தது. இந்த இடம், மாணவிகள் காலையில் எழுந்ததும் பல்தேய்த்து முகம் கழுவுவதற்குப் பயன்பட்டது. இந்த இரண்டு washroomகளுக்கு அருகே இருந்த மாடிப்படியில் ஏறி மேற்பக்கம் போகலாம். சில அறைகள் பூட்டி வைக்கப்பட்டன. சாலையை ஒட்டிய பக்கத்தில் முறையே பத்துப் பேர் தங்கக்கூடிய பெரிய அறை ஒன்று, மூன்று பேர் தங்கும் அறைகள் இரண்டு. விடுதியில் தங்கும் ஆசிரியையின் அறை. அடுத்து எங்களின் சிம்ம சொப்பன வார்டனின் அறை. அடுத்து இன்னுமொரு பெரிய அறை. அந்த அறைக்கு முன்னே ஆளுயர நிலைக்கண்ணாடி. பக்கவாட்டில் இருந்த பக்கத்தில் ஒரேயரு அறை மீண்டும் பத்துப்பேர் தங்கக்கூடிய அறை இருந்தது. அந்தப்பக்கத்தில் இருந்த மற்ற அறைகள் எல்லாம் பூட்டப்பட்டு இருந்தது. கூடவே கீழே விருந்தினர் கூடத்திற்கு செல்லக்கூடிய பெரிய வளைந்த அமைப்புடைய மாடிப்படி எல்லாம் இருந்தது. ஆனால், மாணவிகளுக்கு அந்தப்பக்கம் நடமாடுவதற்கு அனுமதி இல்லை.

எங்களைப்போன்ற வானரங்களுக்கு சொல்லவா வேண்டும். :) பூனைபோல நடந்துபோய் கீழே விருந்தினர் அறையில் தோழிகள் அவர்களின் குடும்பத்தாருடன் பேசிக்கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பது. அதுவும் யாராவது மாணவியின் சகோதரனோ, உறவு முறை ஆணோ வந்துவிட்டால், ஹாஸ்டல் திமிலோகப்படும். அந்த நேரத்தில்தான் வார்டனுக்கு தலைக்குப்பின்னுக்கும் கண் இருக்கிறதா என்று யோசிக்கத்தோன்றும். ஹாஸ்டலில் இருந்த இரண்டு வருடங்களும் நான் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் கற்று அறிவாளியாகாததால் *இந்தப் பிரச்சினையில்* வார்டனிடம் திட்டு வாங்கியதில்லை. வார்டன் திட்டுவதோடு நின்று விடமாட்டார், குடும்பத்தார் அடுத்த முறை வரும்போது மறக்காமல் குற்றப்பத்திரிகை வாசித்துவிடும். (விடாது என்று எழுத கை துடித்தாலும், எனது முதிர்ச்சியை காட்டவேண்டிய கட்டாயம். :) ) எங்க அம்மா, என்னமோ நான் பஞ்சமா பாதகத்தில் ஒன்றை செய்ததுபோல புலம்பி, தண்டனையும் வழங்குவார். நாய் வால் நிமிர்ந்திருக்கும் என்று எதிர்பார்த்தால், நீங்கள் ஏமாந்துபோவீர்கள். ஏதோ நான் குறும்பிலே பிறந்து குறும்பிலே வளர்ந்தது என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். ஏதோ, என்னாலான நல்ல காரியங்களை அவ்வப்போது தோழிகள் சகிதம் நடத்திக் கொண்டிருந்தேன்.

மேலே, சாலையோரம் இருக்கும் பக்கத்திலும், அதற்கு நேரெதிரான பக்கத்திலுந்தான் மாணவிகளின் அறைகள் இருந்தன. சமையலறைக்கு மேலே இருந்த அறைகள் எல்லாம் பூட்டப்பபட்டு இருந்தன. விருந்தினர் கூடத்திற்கு மேலே இருந்த பூட்டப்பட்ட அறைகளில் சில சன்னல் இடுக்குகள் வழியே எட்டிப்பார்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட அந்த அறைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போயிருக்கிறோம்.

(தொடரும்..)

Tuesday, December 16, 2003

வேம்படி மகளிர் கல்லூரி விடுதி - 1


நகரின் மையப்பகுதியில் அமைதியான சிறிய வீதியில் இரண்டு பக்கமும் மரங்கள் நிற்க, பழையதும் புதியதுமாக வீடுகள். அந்தத் தெருவில் நுழைந்து கொஞ்சத் தூரம் நடந்தால் உயரமான சுவர்களோடு ஒரு பெரிய கேற். கேற்றின் மேலே இரும்புக்கம்பிகள் கொண்டு நிர்மாணித்த வளைவில் அந்தப்பள்ளியின் பெயர். 'வேம்படி மகளிர் கல்லூரி'. பெயர்தான் கல்லூரியே தவிர, அது ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பெண்கள் படிக்கும் பள்ளியே. வெள்ளை நிற சீருடையும் மஞ்சளும் கரும்பச்சையுமாக (சரியான கலர்தானா?) எலாஸ்டிக் பாண்ட் வைத்த டை.

மரங்களும் பழைய புதிய கட்டிடங்களுமாகத் தெரிகிறது. பள்ளிக்குள் இன்னொரு நாள் போவோம். இப்போது கேற்றின் வலதுறம் இருக்கும் கட்டிடத்துக்குள் நுழைவோம். வாசலில் பூச்செடிகள் இருக்கின்றன. உள்ளே நுழையும் முன்பே இருக்கும் சின்ன வெராண்டாவில் வலது ஓரம் ஒரு சின்ன அறை இருக்கிறது. மாணவிகளுக்கான பல் மருத்துவர் அங்குதான் இருக்கிறார். நேர் முன்னே, விருந்தினருக்கான அறை. இங்கொருவரும் அங்கொருவருமாக உறவினர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் மாணவிகள். அதோ, வாசலில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடியமாதிரி மேஜை நாற்காலி போட்டு கனகம்பீரமாக உட்கார்ந்து இருப்பது யார்? வார்டனா?

அந்த மேஜைக்குப்போய் பார்த்தால் இரண்டு புறமும் வெராண்டா விரிகிறது. மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி. வலப்புறம் திரும்பி நடந்தால், பெரிய டைனிங் ஹால். ஒவ்வொரு மேஜையிலும் சிறிய பூச்சாடிகள். பெரும்பாலான பூச்சாடிகளில் புற்களும், சில பூக்களும் தெரிகின்றன. ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு மேஜை. ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு ஆள் பூச்சாடியை அழகு படுத்தவேண்டும். மேஜையையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். காலை நேரத்தில் பனித்துளிகள் அலங்கரிக்க நிற்கும் புற்களையும், weedகளையும் கொண்டுவந்து அலங்கரிப்பது, இப்போது நினைத்துப்பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஒரு மேஜையில் தட்டுகள் இருக்கின்றன. என்னுடைய எவர்சில்வர் தட்டில் என்னுடைய பெயர் பொழிந்திருக்கிறது. மற்ற மேசையில் தேத்தண்ணிக்காக கப்புகள் இருக்கின்றன.

காலையில் தேத்தண்ணி கிடைக்கும். இரவே காலமைத் தேத்தண்ணிக்கு கப்பும் சாப்பாட்டிற்குப் பிளேட்டும் வைக்கோணும். காலமையும் இரவும் சாப்பிடுறதுக்கு முதல் தேவாரம் பாடோணும். என்ன மாதிரி சாப்பாடு எண்டு கேக்காதீங்க. புட்டு தர்ர நாட்களில் அதை கையில் வைத்து பிளேட்டின் அடிப்பக்கம் ஒட்டிக்கொண்டு சிலர் போய்விடுவார்கள். சில அம்பிட்டிருவினம். அம்பிட்டா, அங்கயே நிண்டு சாப்பிட்டு முடிக்கவேண்டும். ஒருக்கா அம்பிட்டபிறகு, தலைகீழா நிண்டாவது சாப்பிட்டு முடிச்சிருவன். சினேகிதிகள், யார் வீட்டில இருந்தாவது ஆக்கள் வந்தா இரவுக்கும் சாப்பாடு கொண்டு வருவினம்.

என்ர வகுப்பில இரண்டு கசின்கள் இருந்தவை. சுமதியின்ற அக்காவும் எங்களோட ஹொஸ்டலில் இருந்தவ. அதைவிட, மைதிலி எண்ட இன்னொரு அக்காவும். இந்த நாலு பேர் வீட்டில இருந்து யாராவது வந்தா, எங்களுக்கு கொண்டாட்டம். வார்டன் அம்மா வந்திர்ந்தா, நீட்டி முழக்கி 'சந்ந்ந்ந்ந்ந்திரமதீஈஈஈ' எண்டு கத்தேக்கையே மேசையில் இருக்கிற பிளேட்டை அலுமாரிக்கு எடுத்து வைக்க ஆள் போயிரும்.

(தொடரும்)

Saturday, December 13, 2003

சண்டியர் விருமாண்டி



sandi.jpg

இன்று சண்டியர் பாட்டுக்கேட்டேன். 'அன்பே சிவம்'குப் பிறகு இன்னொரு நல்ல படம் தரப்போறார்னு தோணுது. 'தேவர் மகன்'ஐ இந்த வாரக்கடைசியில் பார்ப்பேன் என்று நினைக்கிறேன். அப்படி ஆக்கிவிட்டது இந்த சண்டியர் இல்ல இல்ல விருமாண்டி படப்பாடல்கள்.

உங்களுக்காக விருமாண்டி. எனக்குப் பிடிச்சது 'மாடவிளக்கு' பாடல். உங்களுக்கு?

viru10.jpg



Thursday, December 11, 2003

Adieu Monsieur. Chretien




Thursday was his last full day in office, but Prime Minister Jean Chretien ended his career as he began it 10 years ago, on the run.

It was vintage Chretien. His brisk stride never faltered, he took the stairs two at a time. He wore a smile and kept a twinkle in his eye. And he even told the press gallery he'd miss them. He started his official day with a 7:40 a.m. call from the White House. President George W. Bush was on the phone to congratulate him on his long career and wish him well in retirement.

The two chatted for about 10 minutes on several topics.

By 9 a.m., Chretien was in a cavernous old drill hall a few blocks from Parliament Hill, waiting to greet visiting Chinese Premier Wen Jiabao.

As he waited for his guest to arrive, Chretien waded into a crowd of schoolchildren gathered for the welcome.

"Bonjour, hello," he said over and over again to the shy faces.

Asked if he will miss this kind of thing, Chretien's voice became wistful: "Yes, a bit."

As Wen arrived, Chretien offered a big grin. He couldn't resist, even in the closing hours of office, to make a sales pitch for Canada.

"Our people come from all over the world," he told Wen, gesturing to the children. "That's the characteristic of Canada. They come from China, from Africa.

"We are probably the most diversified people in the world."

The two leaders went off for talks.

By 10:30, they were posing for cameras in the prime minister's office. The cramped room couldn't hold all the photographers and TV crews, so they came in three waves. Each time, Chretien pumped Wen's hand and smiled his trademark, crooked smile. As the second group came in, Chretien chuckled to Wen: "You're still welcome."

Less than an hour later, the two appeared for some ceremonial signings and some brief media questions.

He was asked about his last day and he gestured at Wen:

"I have a friend with me who came a long way to share that day with me."

He paused for a moment, as if thinking.

"It is nostalgic," he said. "It's 40 years of life here. It's 10 years as prime minister so you know I will miss many things.

"I will miss the press, believe it or not."

He said Friday would be a quiet day. He planned to hand in his resignation and go home.

And he said he'll leave Paul Martin alone to be prime minister.

"This is the most lonely job, so you do your best."

He said he'll just watch from the sidelines and won't offer public criticism or advice.

"I will say nothing, because it's not my business."

At 1 p.m., Chretien was at a business luncheon with Wen.

He recalled making six trips to China as prime minister and said he only went the first time because "I was the only one in my family that had not been in China.

"My grandchildren had been in China, but not the old man."

In mid-afternoon, he was back in the office. As he left about 4:30, he joked around in one last scrum with reporters, pretending to offer Senate appointments.

He spoke briefly about his final cabinet meeting Thursday, describing it as a goodbye to family.

"It's always a rather moving experience," he said.

He said he told his ministers: "We had a good kick at the can. It was a good run, be proud of what we have done collectively."

He skipped down the stairs to return to his official residence at 24 Sussex Dr., to dress for a dinner in honour of Wen at the Canadian Museum of Civilization.

One last black tie gala as prime minister. One last playing of O Canada for the nation's leader.

- JOHN WARD (நன்றி: Montreal Gazette)



அடுத்த மாதம் இதே நாள் எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் Jean Chretien அரசியலில் நுழைந்து நாற்பது வருடமாகப்போகிறது. அதில் கடைசி பத்தாண்டுகளைப் பிரதமராக செலவழித்திருக்கிறார். இந்த ஊர் அரசியல் இன்னமும் தெளிவாகப் பிடிபடவில்லையென்பதால் நிறையப்பேசமுடியாது. பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறார், அகதிகளை ஆதரவோடு ஏற்றுக்கொள்ளும் நாடு என்ற கனடாவைச் சொல்ல வைத்திருக்கிறார் என்று நிறைய இருந்தாலும்... இப்போதைக்கு *எனக்கு* சட்டென்று ஞாபகம் வருவது அமெரிக்கா கேட்டும், ஈராக் போரில் கலந்துகொள்ள மறுத்தது. அதுவும் பெரும் எதிர்ப்பிற்கிடையே. பில் கிளிண்டனுடன் இருந்த சுமூகமான நட்பு, ஜார்ஜ் புஷ்ஷ¤டன் அமையவில்லை. (கிரெட்டியெனுடைய அதிகாரிகளில் ஒருவர் புஷ்ஷை Moron என்று சொன்னதும் பிரச்சனையானது. :) )

அதையெல்லாம் விட இன்றும் நினைத்து நினைத்து வியக்கும் விஷயம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. முதன்முதலில் பார்த்தபோது அசந்துவிட்டேன். This Hour Has 22 Minutes என்ற அந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர்கள் தோன்றி, கிரெட்டியெனையும் மற்ற கனேடிய அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்வார்கள். கிண்டல் என்றால் அப்படியரு கிண்டல், உங்களூர் கிண்டல் எங்களூர்க் கிண்டல் இல்லை. பயங்கரக் கிண்டல். நம்ம ஊரில் கார்ட்டூன் போடுவதற்கே சிறையில் போடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால், என்ன செய்வார்களோ தெரியாது. கிரெட்டியெனுக்கு வாய் ஏனோ கொஞ்சம் கோணியே இருக்கும் சிறுவயதில் வந்த போலியோவினால் அப்படி ஏற்பட்டது. கூடவே இடது காதும் போலியோவினால் சரியாகக் கேட்காது. Little guy from Shawnigan என்று இவரைச் சொல்வார்கள். Shawnigan, Quebecஇல்தான் பிறந்தார் இவர்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். கிரெட்டியெனுடன் இருக்கும் பெண்மணி, This Hour has 22 Minutesஇல் வருபவர்.

Wednesday, December 10, 2003

Mythology of Inuits


இனுயிட் மக்களிடையே வழங்கும் நம்பிக்கைகளைப்பற்றி கொஞ்சம்.

ஆட்களில்லாத தனிமை கோலோச்சும் பனிப்பிரதேசம். இந்த வெற்றுவெளியில் விவசாயம் பற்றி நினைத்தே பார்க்கமுடியாது. உணவு மிருகங்களிடமிருந்தே வரவேண்டும். அந்த மிருகங்களே இவர்களின் mythologyஇல் இடம் பெறுகின்றன. இனுயிட்களின் கதைகளில் சில சமயம் உதவி செய்யும், சிலநேரம் ஏய்த்துவிடும் அந்த மிருகங்கள் உணர்வுள்ள ஜீவன்களாகப்பார்க்கப் படுகின்றன. வேட்டையாடும்போது தான் கொன்ற மிருகத்திடம் மன்னிப்பு கேட்கிறான் இனுயிட் மனிதன். ஒரு மிருகத்தை மனிதன் வேட்டையாடுவதில்லை. அந்த மிருகம், வேட்டையாடுபவன் வந்து பிடித்துக்கொள்ள அனுமதிக்கிறது என்று நம்புகிறார்கள் இனுயிட். அதனால்தான் சில இனுயிட் மனிதர்கள், சீல் மிருகத்தை வேட்டையாடி விட்டு, அதனுடைய குடலை கடலுக்குள் திருப்பிப் போடுகிறான். அந்த சீல் திரும்பவும் பிறந்து, அதனுடைய மறுபிறப்பில் இவனிடமே வந்து சிக்குமென்று நம்புகிறார்கள்.

Inuit hunting Seal

காலநிலை, சீதோஷணம், மனிதர்களதும் மிருகங்களதும் ஷேமம் & இனப்பெருக்கம் எல்லாம் ஆவியுலகத்திலிருந்து ஆட்டுவிக்கப்படுவதாக இனுயிட் மக்கள் நம்புகிறார்கள். (இதைப்பற்றி இன்னமும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹவாய் மக்களும் ஆவிகளை ரொம்பவும் நம்புகிறார்கள். நம்மூரைப்போல இரவு பன்னிரண்டு மணிக்கு வெளியே போகக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். என்னைப்போன்ற சில பிரகஸ்பதிகளுக்கு, வீட்டிற்குப் பின்னுக்கு இருக்கும் 24 மணிநேர 'சே·ப்வே'க்கு அப்போதுதான் போகவேண்டும் என்று தோன்றும். :) தேர்வு, பேப்பர் கொடுக்கவேண்டிய நாட்களில் போய் ஏதாவது கொறிக்க வாங்கியுமிருக்கிறோம். தெருவில் ஒரு ஈ, காக்கை இருக்காது. :) ஏனைய பழங்குடி வாழ் மக்களைப் பற்றியும் தெரிந்துகொண்டபிறகு இந்த விஷயத்தில் கை வைக்க எண்ணம்.)

Extra photo'nga :)

கூட்டமாக வாழும் இனுயிட் மக்களுக்கு உதவி செய்து நல்லது நடக்க வைக்கவேண்டிய பொறுப்பு ஆவியுலப் பிரதிநிதிகளான Shamanகளில் விழுகிறது. பெரும்பாலும் ஆண்களே ஷாமன்களாக/பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். மேளத்தை தாளகதி தப்பாமல் அடித்துக்கொண்டு, ஒரு வித மயக்கநிலையில் ஆழ்ந்து ஆவிகளுடன் பேசுகிறார்கள் இந்தப் பூசாரிகள். அப்படிப்பட்ட மோன நிலையில் இருக்கும்போது பூசாரியுடைய ஆவி/உயிர் வெளியே ஆவியுலக வாசிகளோடு (Spirits) சுற்றுகிறதாம். அப்படிச்சுற்றி, எங்கே உணவு கிடைக்கும், தொலைந்து போன மான் எங்கே நிற்கிறது, எந்த ஆவி நோயாளியின் உடல்நிலையைப் பாதிக்கிறது?, நோயாளியின் திருட்டுப்போன உயிரை மீட்பது - அதன் மூலமாக ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்றெல்லாம் இருக்கிறது என்கிறார்கள்.

இனுயிட் பூசாரிகள், நோயாளியிடம் எண்ணிடங்காத கேள்விகள் கேட்டு, அதன்மூலம் எந்த ஆவி அவமதிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். அந்த நோயாளி உடைக்கக்கூடாத மாமிச எலும்பை உடைத்திருக்கலாம், நோயாளிக்கு ஒத்துவராத மாமிசத்தை உண்டிருக்கலாம், இல்லை அவர் புகைக்கக்கூடாத பைப்பைப் புகைத்திருக்கலாம். பெண்ணாக இருக்கும்பட்சத்தில், குழந்தைப்பிறப்பிற்கு அப்புறம் *உடனே* தலைவாரியிருக்கலாம். பூசாரி இதுபோன்று பல கேள்விகளைக் கேட்டு ஆராய்கிறார்.

Monday, December 08, 2003

Justin Trudeau's Eulogy to his father


எனக்கு மிகவும் பிடித்த கனேடிய பிரதமர்.... அரசியல்வாதி ப்பியெர் எலியெட் ட்ரூடோ Pierre Eliot Trudeau (1919-2000). ஏன் பிடிக்கும் எதற்குப்பிடிக்கும் என்பதெல்லாம் இன்னொரு நாள். Trudeau இறந்தபிறகு தேவாலயத்தில் அவருடைய மகன் பேசிய பேச்சை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இனுயிட் மக்களைப்பற்றி எனக்குத் தெரிந்ததை இந்தவாரம் பகிர்ந்துகொண்டபோது Justin Trudeauவின் இந்தப்பேச்சும் ஞாபகம் வந்தது.

Pierre Eliot Trudeau

Friends, Romans, countrymen . . .

I was about six years old when I went on my first official trip. I was going with my father and my grandpa Sinclair up to the North Pole.

It was a very glamorous destination. But the best thing about it is that I was going to be spending lots of time with my dad because in Ottawa he just worked so hard.

One day, we were in Alert, Canada's northernmost point, a scientific military installation that seemed to consist entirely of low shed-like buildings and warehouses.

Let's be honest. I was six. There were no brothers around to play with and I was getting a little bored because dad still somehow had a lot of work to do.

I remember a frozen, windswept Arctic afternoon when I was bundled up into a Jeep and hustled out on a special top-secret mission. I figured I was finally going to be let in on the reason of this high-security Arctic base.

I was exactly right.

We drove slowly through and past the buildings, all of them very grey and windy. We rounded a corner and came upon a red one. We stopped. I got out of the Jeep and started to crunch across towards the front door. I was told, no, to the window.

So I clamboured over the snowbank, was boosted up to the window, rubbed my sleeve against the frosty glass to see inside and as my eyes adjusted to the gloom, I saw a figure, hunched over one of many worktables that seemed very cluttered. He was wearing a red suit with that furry white trim.

And that's when I understood just how powerful and wonderful my father was.

Pierre Elliott Trudeau. The very words convey so many things to so many people. Statesman, intellectual, professor, adversary, outdoorsman, lawyer, journalist, author, prime minister.

But more than anything, to me, he was dad.

And what a dad. He loved us with the passion and the devotion that encompassed his life. He taught us to believe in ourselves, to stand up for ourselves, to know ourselves and to accept responsibility for ourselves.

We knew we were the luckiest kids in the world. And we had done nothing to actually deserve it.

It was instead something that we would have to spend the rest of our lives to work very hard to live up to.

He gave us a lot of tools. We were taught to take nothing for granted. He doted on us but didn't indulge.

Many people say he didn't suffer fools gladly, but I'll have you know he had infinite patience with us.

He encouraged us to push ourselves, to test limits, to challenge anyone and anything.

There were certain basic principles that could never be compromised.

As I guess it is for most kids, in Grade 3, it was always a real treat to visit my dad at work.

As on previous visits this particular occasion included a lunch at the parliamentary restaurant which always seemed to be terribly important and full of serious people that I didn't recognize.

But at eight, I was becoming politically aware. And I recognized one whom I knew to be one of my father's chief rivals.

Thinking of pleasing my father, I told a joke about him -- a generic, silly little grade school thing.

My father looked at me sternly with that look I would learn to know so well, and said: `Justin, Never attack the individual. We can be in total disagreement with someone without denigrating them as a consequence.'

Saying that, he stood up and took me by the hand and brought me over to introduce me to this man. He was a nice man who was eating there with his daughter, a nice-looking blond girl a little younger than I was.

He spoke to me in a friendly manner for a bit and it was at that point that I understood that having opinions that are different from those of another does not preclude one being deserving of respect as an individual.

This simple tolerance and (recognition of) the real and profound dimensions of each human being, regardless of beliefs, origins, or values — that's what he expected of his children and that's what he expected of our country.

He demanded this with love, love of his sons, love of his country, and it's for this that we so love the letters, the flowers, the dignity of the crowds, and we say to him, farewell.

All that to thank him for having loved us so much.

My father's fundamental belief never came from a textbook. It stemmed from his deep love for and faith in all Canadians and over the past few days, with every card, every rose, every tear, every wave and every pirouette, you returned his love.

It means the world to Sacha and me.

Thank you.

We have gathered from coast to coast to coast, from one ocean to another, united in our grief, to say goodbye.

But this is not the end. He left politics in '84. But he came back for Meech. He came back for Charlottetown. He came back to remind us of who we are and what we're all capable of.

But he won't be coming back anymore. It's all up to us, all of us, now.

The woods are lovely, dark and deep. He has kept his promises and earned his sleep.

Je t'aime Papa

Justin Trudeau

Saturday, December 06, 2003

Inuit (இனுயிட்) - 2


இனுயிட் மக்கள் நான்காயிரம்-ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து வந்து, படிப்படியாக அமெரிக்கக்கண்டம் முழுவதும் பரவினார்கள் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இதுபற்றி நிறைய விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கே தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம் http://www.civilization.ca/cmc/archeo/oracles/eskimos/12.htm )

Inuit Path

வடதுருவம் போன்ற குளிர்ப்பிரதேசங்களில் கொல்லப்படும் மிருகங்கள் எளிதில் பழுதாவதில்லை. அதாவது, பக்டீரியாக்களும், ஆக்சிடேஷனும் நடப்பதில்லை - அப்படியே நடந்தாலும் மிகமிகக் குறைந்த அளவிலேயே நடக்கிறது. ஆக்சிடேஷன் என்று பெரிய ஆங்கில வார்த்தையெல்லாம் உபயோகித்தாலும், அர்த்தம் என்னவோ 'அழுகுதல்' என்பதுதான். அழுகுதல் இல்லாது இருந்தாலும், இனுயிட் மக்கள் தாங்கள் கொன்ற மிருகத்தை உடனேயே உண்ணுவதையே விரும்புகிறார்கள். அப்போதுதானாம், இறைச்சி மிகவும் ருசியாக இருக்குமாம். மீந்தது மிகக்குறைந்த நேரத்தில் உறைந்துவிடுகிறது. இப்படி உறைந்த இறைச்சியை Quaq என்று சொல்கிறார்கள் இனுயிட். உறைந்த இறைச்சியில் இருக்கும் நீரும், இரத்தமும் உறைந்து இறைச்சியை சப்பிச் சாப்பிடக்கூடியமாதிரி கொண்டுவருகிறது.

ஐரோப்பியர் வந்து குடியேறி, நாடுகள் மாறி, கலாச்சாரங்கள் மாறி, மக்கள் இடம்பெயர்ந்து அரசாங்கங்கள் உருவானபிறகு... அரசாங்கம், பலவருடங்களாக இனுயிட் மக்களின் உணவுப்பழக்கத்தை கவலையோடு கவனித்து வந்தது. ஒரு முடிவுக்கு வந்து அரசாங்கமே, பால் பவுடரையும், அரிசி, பருப்பு தானியவகைகளையும் அனுப்பியது. இதில் பால் இனுயிட் மக்களுக்கு ஒத்துவரவில்லை. Lactose intolerentஆக இருந்தார்கள் அவர்கள். (நம்மூரில் இந்த வார்த்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. உங்களுக்கு நம்மூரில் Lactose Intolerentஆக இருப்பவர்கள் யாரையேனும் தெரியுமா? இங்கே என்னுடைய பெங்காலி தோழியின் அண்ணன் Lactose Intolerent)

அரசாங்கம் அனுப்பிய உணவு, இனுயிட் மக்களுக்கு ஒத்துவரவில்லை. சுகயீனம் மிகத்தொடங்கியதால், அவர்கள் Quaqயும், உடன்-இறைச்சியையுமே சாப்பிட்டார்கள். இது தவிர, இறைச்சியை சூப், Stew செய்தும் உண்டார்கள்.

பல வருடங்கள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபடி, இனுயிட் மக்கள் உண்டுவந்த உடன் இறைச்சியும், Quacஉம் அவர்களுக்குத் தேவையான விட்டமின்களையும் தாது உப்புகளையும் தந்ததாம். சமைக்கும்போது அழிந்துபோகும் சத்துகளெல்லாம் இனுயிட் மக்களுக்கு கிடைத்துவந்ததாக ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்தனர். இது-தவிர, Quac உண்பவர்களுக்கு, உடலெங்கும் நிறைய வெப்பம் உண்டாக்கியதாம். கூடவே, அவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்ததாம். ஏறக்குறைய குளுக்கோஸ் சாப்பிட்டதுபோல இருக்குமென்று நினைக்கிறேன்.

சமீபத்தைய ஆய்வறிக்கைகளின்படி, காட்டு மிருங்களின் இறைச்சியில் இருக்கும் கொழுப்பு சக்தியாக மாற்றப்படும் அளவிற்கு வீட்டு/பண்ணை வளர் பிராணிகளின் இறைச்சியிலிருக்கும் கொழுப்பு மாற்றப்படுவதில்லை. அவற்றின் கொழுப்பு அப்படியே உண்பவர் உடம்பில் தேங்கிவிடுகிறது.

வடதுருவத்திலிருந்து பிழைப்பிற்காக தெற்குநோக்கி வரும் இனுயிட் மக்களுக்கு நம் உணவு ஒத்துவருவதில்லை. அவர்கள் மீன், Turkey போன்றவற்றை உண்டு சீவிக்கிறார்கள். அதே சமயம், அதே பிழைப்பிற்காக வட துருவத்திற்குப்போகும் மற்றவர்கள் சீக்கிரம் இனுயிட் மக்களின் உணவிற்கு அடிமைகளாகி விடுகின்றராம். அங்கே வாழும் கிறிஸ்தவ மதபோதகர்கள், தங்களின் உடல்நலனுக்கும் நீண்ட ஆயுளுக்கும் தாங்கள் பின்பற்றும் இனுயிட் மக்களின் உணவுப்பழக்கமே காரணம் என்று சொல்கிறார்கள்.

Thursday, December 04, 2003

Inuit (இனுயிட்)


'He can sell ice to Eskimos' என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவர் எந்தளவு பேச்சுவல்லமை மிக்கவர் என்று காட்டுவதற்கு இதைச்சொல்லுவார்கள். நமக்கு புவியியல் பாடத்தில் சொல்லிக்கொடுத்தபடி எஸ்கிமோக்கள் ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் மனிதர்கள். அவர்களின் வீட்டிற்குப்பெயர் Igloo.

Inuit Kid

ஆனால், அவர்களை 'எஸ்கிமோ' என்று இப்போதெல்லாம் யாரும் கூப்பிடுவதில்லை. எஸ்கிமோ என்ற பெயர் அவர்களுக்கு மற்றவர்களால் அதுவும் சமீபத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் வைக்கப்பட்டது. ஆர்டிக் பிரதேசத்தில் வசிப்பவர்களில் கனடாவைச்சார்ந்தவர்கள் இனுயிட் என்று அழைக்கப்படுகிறார்கள். 'இனுயிட்' என்றால் மனிதர்கள் என்று அர்த்தம். இனுக் (Inuk) என்பதன் பன்மையே இனுயிட். அலாஸ்காவை சேர்ந்தவர்கள் Inupiaq என்று அழைக்கபடும்வேளையில் சைபீரியாவைச் சேர்ந்தவர்கள் Yupik என்றழைக்கப்படுகிறார்கள். ஆனால் இனுயிட் ஆங்கிலத்தில் பிரபலமானதைப்போல மற்ற இரண்டு வார்த்தைகளும் பிரபலமாகவில்லை.

Inuit area in Red

'எஸ்கிமோ' என்ற வார்த்தை ஏன் விலக்கப்பட்டது என்று உங்களுக்குத்தெரியுமா? என்னுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட இரண்டு விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். ஒன்று: செவ்விந்தியர்களில் பல பிரிவுகள் இருப்பது உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். அபெனாக்கி (Abenaki) இந்தியர்கள் இவர்களை 'பச்சைமாமிசம் சாப்பிடுபவர்கள்' என்ற அர்த்தத்தில் 'எஸ்கிமோ' என்றழைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் நவீன மொழியியலாளர்கள் பனிச்சப்பாத்தை லேஸ் கொண்டு கட்டுவதையே 'எஸ்கிமோ' என்ற வார்த்தை சொல்கிறது என்கிறார்கள். ஆனால் இதற்கிடையில் ஆங்கிலம் பேசுபவர்கள் பலர் 'எஸ்கிமோ' அவர்களைக்குறைத்துச் சொல்லும் சொல் என்று நினைத்து 'இனுயிட்' என்று சொல்கிறார்களாம்.

இரண்டாவது: கனடாவிற்கு ஐயாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிங் கடல் வழியே அலாஸ்காவிற்கு வந்த இனுயிட், பிறகு ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டில் வந்த வைகிங் காரர்களுக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். அவர்களோடோ, பிறகோ வந்து சேர்ந்த மதபோதகர்கள்தான்(Missionaries) செவ்விந்தியர்களுடன் முதன்முதலில் பழகியவர்கள். அதில் Algonquin ("Algonkian") மொழி பேசும் இந்தியர்களிடம் இருந்து இனுயிட் மக்களைச் சுட்டும் சொல்லை கற்றுக்கொண்டார்கள். Eskimantsik - பச்சை மாமிசம் உண்பவர்கள் என்ற அர்த்தம் பொதிந்த சொல் அது. பிரெஞ்சு மதபோதகர்கள், அதை பிரெஞ்சாக்கிக்கொண்டனர். எப்படி? 'Esquimaux' - தமிழில் பிரெஞ்சுக்காரர்கள் பெரும்பானமையாக கடைசியில் வரும் சத்தத்தை விழுங்குவதுபோலச் சொன்னால் எஸ்கிமோ. நாளடைவில் ஆங்கிலம் பேசுபவர்களும் எஸ்கிமோ என்பதை Eskimo என்று பயன்படுத்தத்தொடங்கினார்கள்.

சரி... 'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள்' என்று அடிக்கடி சொல்கிறார்களே. அது என்னவென்று நாளைக்குப்பார்க்கலாமா.

Tuesday, December 02, 2003

Taarof


நாம யாராவது லேசாத்தெரிஞ்சவங்களை எங்கையாவது பார்த்த என்ன செய்வோம்? 'நீங்க ஒரு நாள் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும்'னு உபசாரமா சொல்லுவோம். அவங்களும் பதில் உபசாரமா, 'கட்டாயம்'னு' சொல்லுவாங்க.

ஒருத்தங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. 'வாங்க. வாங்க. வந்து சாப்பிடுங்க'னு சொல்லுவீங்க. அவங்களும் வேணாம்னு சொல்லி நீங்க, கொஞ்சம் அவங்ககிட்ட பேசி, அப்புறம் அவங்க சாப்பிட வருவாங்க. அப்படி சாப்பிட ஒக்காந்தவங்ககிட்ட, அவங்க வேணாம்னு சொன்னாலும் சாப்பாடு தட்டுல போட்டுக்கிட்டு இருப்போம். அவங்க ரொம்ப வற்புறுத்தி வேணாம்னு சொன்னாத்தான் விடுவோம்.

பக்கத்துவீட்டு அம்மா வந்து ஒங்ககிட்ட(/ஒங்க வீட்டம்மா கிட்ட), அவங்க புதுசா வாங்கியிருக்கிற பொடவை எப்படி இருக்கு. எங்கயோ போகணும். புடவை எப்படி இருக்கு அவங்களுக்கு'னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு. நீங்க சொல்றதை வச்சுத்தான் வேற உடுத்திக்கறதா இல்லையான்னு முடிவு செய்யப்போவதா சொல்லுறாங்க. அந்தம்மாவை உங்களுக்கு நல்லாத்தெரிஞ்சிருந்தா உங்களோட உண்மையான கருத்தைத் தெரிவிப்பீங்க. அவங்களை உங்களுக்கு அவ்வளவாத் தெரியலைன்னா என்ன சொல்லுவீங்க? நல்லா இருக்குன்னுதானே!

நாம மட்டும் இப்படி நடந்துக்கிறது இல்லை. பெரும்பாலான ஆசியர்களும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இப்போது வாசிக்கும் ஒரு புத்தகத்தில் கண்ட குறிப்பு:

Being polite is often better than telling the truth.

ஈரானியர்களிடையே இப்படி உபசாரமாகப்பேசுவது மிகவும் புழக்கத்தில் இருக்கிறது. ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்மணி, டெகரானுக்கு முதன்முறையா வருகிறார். வரும்வழியில் எகிப்தில் ஈரானில் அணிவதற்கென பிரத்தியேகமாக உடைகள் தைத்துக்கொண்டு வருகிறார். ஈரான் நாட்டுப்பெண்கள்கூட அப்படி உடை அணிவதில்லை. வந்து சில நாட்களிலேயே ஒரு விருந்தில் கலந்துகொண்டவரின் உடையை, இந்த எழுத்தாளரின் ஈரான் நாட்டுத்தோழி பாராட்டி இருக்கிறார். தானும் அப்படி ஒரு உடை தைத்துக்கொள்ளப்போவதாக சொல்லி இருக்கிறார். பிறகு நம்முடைய எழுத்தாளர் அவரிடம் விசாரித்தபோது, அப்படித்தான் உடுத்தப்போவதில்லை என்று பதில் வந்திருக்கிறது. கூடவே அது யாருக்கும் மனவருத்தம் கொடுக்கவில்லை. என்னுடைய அம்மா உயிரோடு இருந்திருந்தால், என்னைப்பாராட்டி இருப்பார். பொதுவாக நான் Taarof செய்வதில்லை. உண்மை பேசுகிறேன் என்று திட்டிக்கொண்டே இருப்பார் என்று பதில் வருகிறது.

நானும் அந்தப்பெண்மணி அவரின் அம்மாவிடம் திட்டு வாங்கியதுபோல வாங்கியிருக்கிறேன். அதுவும் வாங்கிய திட்டு, கொஞ்ச நாட்களிலேயே மறந்துபோய் மறுபடியும் என்னை யாராவது ஏதாவது அபிப்ராயம் சொல்லச் சொன்னால், உண்மை சொல்லி... சங்கிலித்தொடர்போல நிகழ்வுகள் தொடர்ந்திருக்கின்றன. அதே நேரத்தில் நானும் Taarof செய்திருக்கிறேன்.

நீங்கள்?