Thursday, June 03, 2004

என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க?



ஜூன் முதலாம் தேதியில் இருந்து டொராண்டோவில் பார்கள், காஸினோக்கள் ஆகிய இடங்களில் புகைபிடிக்ககூடாது என்ற சட்டம் அமுலுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. 2001ஆம் ஆண்டே உணவு விடுதிகள், பௌலிங் மையங்கள் ஆகிய இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்று சட்டமியற்றி இருக்கிறார்களாம். இங்கெ மான்ரியலிலும் அலுவலகங்கள், பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற சட்டமிருந்தாலும் Second hand smoke பலருக்கும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.


மனிடோபா
வில் அக்டோபர் 2004இல் இருந்து பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற சட்டம் வருவதுபோல, இங்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாருங்க இன்று படித்த ஒரு செய்தி, என்னப்பா நடக்குது என்று நினைக்க வைத்துவிட்டது. கனடா என்றாலே மேப்பிள் இலையோடு கூடிய இந்நாட்டுக்கொடி ஞாபகத்துக்கு வரும். மேப்பிள் சிரப் இங்கே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பான் கேக், சாக்கலேட் என்றெல்லாம் கோலோச்சிக்கொண்டிருந்த மேப்பிள் சிரப் ருசி, வருங்காலத்தில் சிகரெட்டிலும் வரும். சூயிங்கம்' என்ன ருசியில் வாங்கலாம் என்று பார்ப்பதுபோல சாக்கலேட்'ஆ, ஆல்கஹோல்'ஆ, மேப்பிள் சிரப்பா என்று பார்த்து வாங்குவார்கள். கனேடிய விஞ்ஞானிகள், அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க?

Comments on "என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க?"

 

post a comment