'Grey Nuns' டு Concordia
மான்ரியலை "City of a Hundred Bells" என்று சொல்வார்கள். அது கொஞ்சமும் மிகையில்லை. இங்கே சந்திக்குச் சந்தி தேவாலயங்கள் இருக்கின்றன. மிகவும் அழகானவையும் கூட. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளாக மக்களுடைய மனோபாவம் மாறிக்கொண்டு வருவதை காலியாக இருக்கும் இந்த தேவாலயங்கள் நிரூபிக்கின்றன. சில தேவாலயங்களை, அவற்றின் நிலத்திற்காக வாங்குகிறார்கள். சிலவற்றை கிழக்கு ஐரோப்பியர்களும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்களும் வாங்குகிறார்கள். சமீபத்தில் ஒரு தேவாலயத்தை சீக்கிய இனத்தவர்கள் வாங்கி இருக்கிறார்கள். இன்றும் ஒரு தேவாலயமும், அதைச் சுற்றி சில கட்டடங்களும் மரஞ்செடி கொடி நிறைந்த நிலமும் விற்கப்பட்டது. விற்றது 'Grey Nuns' என்றழைக்கப்படும் 'The Sisters of Charity'. வாங்கியது Concordia பல்கலைக்கழகம். பதினெட்டு மில்லியன் கனேடியன் டாலர் கைமாறியது. 1737இல் Marguerite d'Youville என்ற விதவைப்பெண்மணியால் தொடங்கப்பட்ட இந்த 'Grey Nuns' பற்றி ஒரு சொலவடை இருக்கிறது. 'Seek out the Grey Nuns and they will refuse you nothing.' நகரின் மையப்பகுதியில் இருக்கும் இந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆயிரம் பேர் இருந்தார்கள். இப்பொழுது இருப்பதோ 250 பேர். அதிலும் பலர் அவர்களின் 80களில் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே, கொன்கோர்டியா பல்கலைக்கழகம் இன்னும் மூன்றாண்டுகளுக்கு எதுவும் செய்யாது. அதற்குப்பிறகும் படிப்படியாகவே வேலைகள் நடக்கும் என்று சொல்கிறார்கள். 2022இல் கொன்கோடியாவின் நுண்கலைப் பிரிவும், சினிமாத்துறையும் இங்கே இருந்து இயங்குமெனத் தெரிகிறது. வெளியே எந்தவித மாற்றமும் செய்யாமல், உள்ளே மட்டுமே மாற்றங்கள் செய்யப்படுமாம். நீங்கள் படத்தில் காண்பது, Grey Nunsஇன் தேவாலயம். இந்தக் கட்டடம், கண்காட்சிக்கூடமாகச் செயல்படுமென்று தெரிகிறது. அதற்கிடையில், Grey Nuns தேவாலயத்தில் இப்போது இருக்கும் St. Marguerite d'Youvillleஇன் crypt(தமிழில் எப்படிச் சொல்வது?)உம், தேவாலயத்தின் கீழே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் 245 nunகளும் வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். வேம்படியில், முன்பு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன என்று சொல்லி எல்லோரும் பயந்து, மற்றவர்களையும் பயமுறுத்தியதுதான் ஞாபகம் வருகிறது. |
Comments on "'Grey Nuns' டு Concordia "