Friday, June 04, 2004

C-Difficile

நம்ம ஊர்ல காய்ச்சல், இருமல் என்று மருத்துவரைப் பார்க்கப்போனால், கட்டாயம் ஆன்டிபையோடிக் மருந்து உட்கொள்ளுமாறு எழுதித் தருவார். நாமளும் வேளை தவறாம முழுங்குவோம். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதான், எப்ப பார்த்தாலும் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்று தெரிந்துகொண்டேன்.

போன வருடம் கனடா, குறிப்பிட்டுச் சொல்லப்போனால் டொராண்டோ நகரம் சார்ஸ் கிருமித் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தது. சார்ஸ் கிருமித் தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் Clostridium Difficile(C-Difficile) என்ற பாக்டீரியாவின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்திருக்கிறார்கள். மான்ரியல் நகரில் இருக்கும் பன்னிரண்டு மருத்துவமனைகளிலும் இந்த பாக்டீரியா தன் கைவரிசையைக் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. கடந்த வருடம் ராயல் விக்டோரியா மருத்துவமனையில் மட்டும் 51 பேர் இறந்துபோனார்கள்.

ஆன்டிபையோடிக் மருந்துகளை உட்கொள்ளும், மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளிகளை C-Difficile பாக்டீரியா தாக்குகிறது. முதலில் வயிற்றுப்போக்குடன் ஆரம்பித்து, ரத்தப்போக்கு ஆகி மரணத்தில் முடிவடைகிறதாம். நீண்ட காலம், உடலில் மேற்பகுதியில் வசிக்கக்கூடிய இந்த பக்டீரியா, பெரும்பாலான ஆன்டிபையோடிக் மருந்துகளுக்கு அடங்கவில்லை. இந்த C-Difficile பக்டீரியா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றக்கூடியது என்றும் சொல்கிறார்கள். படுக்கை வசதிகள் இல்லாதபடியால் இந்த பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் தனியறைகளில் பராமரிக்கப்படவில்லை. முடிந்தவரை, சிலர் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த உயிர்கொல்லி நோயிடம் இருந்து பிழைத்தாலும், கிருமியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றை நீக்கவேண்டி இருக்கிறதாம்.

மான்ரியல் மட்டுமல்ல, Calgary நகரிலும் இந்த பக்டீரியா கிருமி இருப்பதாக சந்தேகிக்கிறார்கள். ஆயினும், மான்ரியல் போல பாக்டீரியா மோசமான விளைவுகளைக் கொண்டு வரவில்லை என்று தெரிகிறது.

இன்னமும் இந்தக் கிருமி பற்றி பொதுமக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொசுறுச் செய்தி :
"There are several jurisdictions in the United States
that are actually either considering or have passed legislation that would
require hospitals to publicize their infection rates and their success rates for different kinds of surgery."

நன்றி:
1. CBC Montreal

2.Health Canada

Comments on "C-Difficile"

 

post a comment