Wednesday, March 24, 2004

நடந்தது என்ன? - 3

14.01.2004 (புதன்)

நடுவர்கள் யார் யார் என்ற தகவலோடு, பரிசுத்தொகை விவரமும் பிகேஎஸ்'ஸால் மரத்தடியில் கொடுக்கப்பட்டது.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/10391

பிகேஎஸ் அனுப்பிய மடலை (மேலே கொடுத்திருக்கிறேன்) பார்த்த நடுவர் காஞ்சனா தாமோதரன் பரிசுத்தொகையைக் கூட்டுமாறு சொல்லி தாம் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அத்தோடு, வருடத்தில் நான்கு முறை வரும் போட்டிகளுக்கான செலவையும் அவர் தனியாகவோ, ஒருங்கிணைப்பாளராக முன்வரும் மரத்தடி உறுப்பினருடனோ ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அதுகுறித்த பிகேஎஸ்'ஸின் மடல் - http://groups.yahoo.com/group/Maraththadi/message/10392




15.01.2004 (வியாழன்)

திண்ணையிலும், பதிவுகளிலும் போட்டி அறிவிப்பு வெளியாகியது.

(குறிப்பு: பொதுவாக இணையத்தில் ஒரு படைப்பு பல இடங்களில் பகிர்ந்துகொள்ளப் படுவதால், போட்டியில் வென்ற படைப்புகளை படைப்பாளி வேறெங்கும் அனுப்புவதற்கு முன்பு மரத்தடியின் மட்டுறுத்துனர் என்ற முறையில் என்னுடைய முன்-அனுமதி பெற வேண்டும் என்று எழுதி இருந்தோம்.)

(தனிப்பட்ட குறிப்பு: போட்டி சம்பந்தப் பட்ட மடல் பதிவுகளிலும் திண்ணையிலும் வந்திருப்பதைப் பார்த்துவிட்டுச் சென்ற நான் அதற்குப் பிறகு ஏறக்குறைய 24 மணி நேரம் கழித்தே இணையப் பக்கம் வந்தேன்)


போட்டி குறித்து திரு.இரா.மு ராயர்காப்பி கிளப்பில் அனுப்பிய மடல்


அந்த மடலைத் தொடர்ந்து என்னுடைய மடல் பெட்டியில் ஏறக்குறைய நான்கு மடல்கள் அவரிடமிருந்து வந்திருந்தது.

(குறிப்பு: திரு.இரா.முருகன் மரத்தடியில் இருந்து டிசம்பர் 30ஆம் திகதி விலகினார். காரணம் - உகதியின் மடல். பல மாதங்களுக்குப் பிறகு வந்த உகதி, மரத்தடியில் எத்தனை புதுமுகங்கள் என்று வியந்து, என்ன இருந்தாலும் முன்பிருந்ததுபோல ஒரு சிலரே தொடர்ந்து எழுதி வருகிறார்கள் என்று எழுதினார்.

quote உகதி


ஆஹா எத்தனை புதுமுகங்கள் இப்போது மரத்தடியில் (புதுமுகங்களாகத் தெரிவது எனக்கு மட்டும் தான் -- தற்போதைக்கு
நான் தான் அவர்களுக்குப் புதுமுகம்). முன்னைப் போலவே இப்போதும் ஒருசிலர் மட்டுமே தீவிரப் பங்களிப்பைச்
செய்கின்றனர். ஆஸாத், நாகூர் ரூமி, புள்ளி ராஜா ச்சே KVராஜா, சுந்தர், ஐகாரஸ் பிரகாஷ், பாஸ்டன் பாலாஜி, வக்கீல் பிரபு, இராமு, பாரா, ஜெயஸ்ரீ, அணு அண்ட அறிவியலார் ரமேஷ், ஹரி கிருஷ்ணன், பிரசன்னா, உஷா, குமார், மதி, பிரியா மற்றும் ஷைலஜா ஆகியோர் இதில் முக்கியமானோர்.


unquote உகதி

இம்மடலைப்படித்ததும் திரு.இரா.மு. மரத்தடியை விட்டு விலகினார். மரததடியில் இருந்து விலகுபவர்களுக்கு ஒரு மடல் செல்லும். அம்மடலில் அவர்கள் விலகுவதற்கு ஏதேனும் பிரத்தியேக காரணங்கள் இருக்கிறதா என்று கேட்டிருப்போம். அந்த மடலை எனக்கு முன்னிட்டு இரா.மு அவர்கள் இம்மாதிரியான impecile களுடன் இருப்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி, தான் பத்து புத்தகங்கள் வெளி
யிட்ட எழுத்தாளர் என்பது தெரியாதவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி வெளியேறிவிட்டார்.

நான் பிரபுவுடன் தொடர்புகொண்டு, பூனாவில் இருக்கும் உகதியுடன் ஏற்கனவே தொடர்பு வைத்திருந்ததால் அவருடன் பேசி இரா.மு அவர்களைப் பற்றிச் சொல்லச் சொன்னேன். பிரபு அதற்கு, தனக்கே குழுவிற்கு வந்த பிறகுதான் இரா.மு. பற்றித்தெரி
யும். உகதி ஏதும் தவறாக எழுதவில்லையே என்றால். சரி விடுங்கள். நீங்கள் உகதியிடம் இரா.மு கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் என்று சொல்லுங்கள் என்றேன். என்னுடைய வேண்டுகோளாஇயும், பிரபுவின் வேண்டுகோளையும் ஏற்று உகதி இரா.மு அவர்களிடன் ஒரு மன்னிப்பு மடல் எழுதினார். தனக்கு இலக்கிய சம்பந்தம் குறைச்சல் என்றெல்லாம் உகதி எழுதினார்.

impecile என்பதற்கு அர்த்தத்தையும் இங்கே இடுகிறேன்.

A stupid or silly person; a dolt.
A person whose mental acumen is well below par.

A person of moderate to severe mental retardation having a mental age
of from three to seven years and generally being capable of some
degree of communication and performance of simple tasks under
supervision. The term belongs to a classification system no longer in
use and is now considered offensive.

Comments on "நடந்தது என்ன? - 3"

 

post a comment