Sunday, March 21, 2004

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......



நாம் தினசரி பலரைச் சந்திக்கிறோம். பழகுகிறோம். போகிறோம். வருகிறோம்.

சரியோ தவறோ நாம், மற்றவர்களை நல்லவர்களா கெட்டவர்களா என்று அளப்பதற்கு ஒரு அளவுகோல் வைத்திருக்கிறோம். வைத்திருப்பதற்கு நாம் தகுதியானவர்களா இல்லையா என்ற பிரச்சினையே இல்லாத படி எல்லாரும் வைத்திருக்கிறோம். எல்லாரையும் அளக்கிறோம். அதுலயும் நம்ம அளக்கிற விதம் சரியா தப்பா'னு நிறைய இருக்கு. அதெல்லாம் விட்டுவிடுவோம்.

என்னைப்போட்டுக் குடாயும் சந்தேகம் என்ன என்றால்...

நாம் அளக்குறோம் இல்லையா அவர்கள் சாதாரணர்களாக இல்லாமல் ஏதோ ஒரு விதத்தில் புகழ்பெற்றவர்களாய் இருந்தால், கலைஞர்களாய் இருந்தால், திரைப்பட நடிகர்களாய் இருந்தால், எழுத்தாளர்களாய் இருந்தால், தலைவர்களாய் இருந்தால் நான் என்ன செய்வது?

தருமரின் தேர் எப்போது அரை இஞ்ச் உயரத்தில் பறப்பதுபோல, சாதாரணர் அல்லாதார் எல்லோரும் கொஞ்சம் மேலே என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

நாம் சந்திக்கும் சாதாரணன் ஏதேனும் தவறிழைத்தால் அல்லது நம்மை இடைஞ்சல் செய்தால், நமக்கு ஏதேனும் கெடுதல் செய்தால் அல்லது முயற்சித்தால் சும்மா இருப்போமா? அளவுகோலால் அளக்காமல் விடுவோமா? சாதாரணர் அல்லாதார் ஏதேனும் மேலே சொன்னதுபோல செய்தால் நாம் என்ன செய்வது?



Comments on "வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......"

 

post a comment