Burghers of Ceylon
இலங்கையில் முதலில் வந்து குடியேறிய ஐரோப்பியர்கள் போர்த்துக்கீசியர்கள். பதினாறாம் நூற்றாண்டில் வந்திறங்கிய இவர்கள், உள்நாட்டு மகளிரை மணம் செய்து தொடர்ந்த சந்ததியினரைக் கொண்டு இலங்கையில் பல பாகங்களைத் தம் வசம் வைத்திருந்தனர். ஏறக்குறைய அறுபதாண்டுகள் டச்சு நாட்டவர்களை காலூன்ற விடாமல் பார்த்துக்கொண்டனர் போர்த்துக்கீசியரின் சந்ததிகள். போர்த்துக்கீசியர்களை வென்று தம் ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கிய டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்), போர்த்துக்கீசியர்போலவே உள்ளூர் மகளிரை மணம் செய்து சந்ததியினை வளர்த்தனர். ஆனால், ஒரு சிறு மாற்றத்துடன். ஒல்லாந்தர்கள் திருமணம் செய்துகொண்டது உள்ளூர் போர்த்துக்கீசியப் பெண்களை. இந்த உறவுகளால் வந்த சந்ததியினரை பெர்கர் என்றழைத்தனர். காலபோக்கில் டச்சு பேர்கர் என்றும், போர்த்துக்கீசிய பேர்கர் என்றும் வழங்கலாயிற்று. டச்சு மொழியில் burgher என்றால் சிட்டிசன் என்று பொருள். போர்த்துக்கீசியர்களுக்கும் ஒல்லாந்தர்களுக்கும் பிறகு வந்து முழு இலங்கையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆங்கிலேயர்களுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டனர் டச்சு பெர்கர்கள். தம்முடைய டச்சு மொழி எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஆங்கிலம், ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்களுக்குத் தாவினர். இலங்கை சுதந்திரம் அடைந்தபிறகு பல பெர்கர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். மேலதிக விவரங்களுக்கு: http://www.geocities.com/Athens/Styx/6497/ceylonD.html http://www.travelsrilanka.com/essence/people/burghers.php |
Comments on "Burghers of Ceylon"