Tuesday, January 27, 2004

சீனத் தமிழ் வானொலி

இன்று தெரிந்துகொண்ட ஒரு சுவாரசியமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழுலகம் யாகூ குழுமத்தில் 'எழில் நிலா' மகேன் சீனத் தமிழ் வானொலி நிலையம் பற்றித் தனக்கு வந்த ஒரு கடிதத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழில் யூனிகோடு எழுத்துரு பயன்படுத்தி சீனத் தமிழ் வானொலி நிலையம் இணையத்தளம் ஒன்றை நிர்வகித்து வருகிறது - http://ta.chinabroadcast.cn/

இது தவிர, இணையத்திலேயே சீனத்தமிழ்வானொலியை நீங்கள் கேட்கலாம். அதில் ஒரு சிறுபகுதியை, உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இங்கு இட்டிருக்கிறேன். சீனர்கள் நம்மூர் அறிவிப்பாளர்களைவிட அருமையாக பேசுவதைக் கேளுங்கள். :)



Comments on "சீனத் தமிழ் வானொலி"

 

post a comment