Wednesday, March 24, 2004

நடந்தது என்ன? - 5

4.
அடுத்த அரைமணி நேரத்தில் திரு.இரா.மு.விடம் இருந்து பதில் வந்திருந்தது.

அச்சுப் பத்திரிகளையும் இணைய உலகையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்த திரு.இரா.மு., நாமெல்லோரும் இணையம் வழியாக தமிழை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வதில் மாற்றுக்கருத்து இல்லாதவர்கள் என்றார். தானும் திரு.பா.ராகவனும் கிளப்பிலும் மரத்தடியிலும் வெளிவந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு தொகுப்பு கொண்டுவர இருப்பதாகத் தெரிவித்தார். பிகேஎஸ்'ஸ¤க்கோ, மற்றவர்களுக்கோ கிளப் ஓனர்/மட்டுறுத்துனர்கள் யாரிடமாவது ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளுமாறு சொன்னார். தேவைப்பட்டால் கிளப் தம்மால் மட்டுமே ரெப்ரசெண்ட் பண்ணப்படும் என்றார்.

கட்டுரையைப் பொறுத்தவரை ஐம்பது உத்வேகமான கட்டுரையாளர்கள் இணையத்தில் இருப்பதாகவும் அவர்களை உற்சாகப் படுத்தவேண்டாமா என்றும் கேட்டவர், இன்னொரு சாமிநாத சர்மாவோ, தோழர் ஜீவாவோ, மு.மு.இஸ்மாயிலோ இந்தத் தலைமுறையில் இருந்து வரவேண்டாமா என்றார்

"விதிமுறைகள் உதவிகரமாக இருக்க வகுக்கப் பட்டவையே. அவை நம்மை constrain செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது" என்று சொன்னார் அவர். இது அவருக்கு ஒரு எழுத்தாளராக அல்லாமல் "seasoned project management professional" ஆகத் தெரியும் எனக்குறிப்பிட்டார் அவர்.

5.
ஐந்தாம் மடல் திரு.இரா.மு.விடம் இருந்து எனக்கு தனிமடலாக வந்தது. தான் திண்ணை அறிவிப்பைப் பார்த்ததாகவும். அவரைக் கலந்தாலோசித்து முடிவெடுத்திருக்கலாம் என்ற அவர், "நான் உசிரோட தானே இருக்கேன்?" என்றார்.

தொடர்ந்த அவர், "அது என்ன புதுக்கவிதை - புதுசு, மரபு எதுவானாலும் கவிதை கவிதைதானே" என்றார்.

நான் முன்னே சொன்னதுபோல பரிசு பெற்ற படைப்புகள் மரத்தடி மட்டுறுத்துனர் என்ற முறையில் என்னிடம் தெரிவிக்கப் பட்டுவிட்டு மற்ற இடங்களில் வெளியிடலாம் என்று சொல்லி இருந்தோம். அதைக்குறிப்பிட்ட திரு.இரா.மு., "பரிசு வாங்கின அப்புறம் எதுக்கு மதியோட அனுமதி வேறெங்கேயாவது பிரசுரிக்க? அது என்ன மதி அனுமதிப்பாங்களாம் இல்லை என்றால் மறுப்பார்களாம். படைப்பாளிக்கு கௌரவம் கொடுப்பதுபோல இல்லையே என்ற அவர், படைப்பாளி புத்தகம் போட நினைத்தால் காப்பி ரைட் இல்லையா" என்றார்.

விதிமுறைகளை ·பார்ம் பண்ணும்போது அனுபவஸ்தர்களைக் கேட்டிருக்கலாம் என்றவர், "நான் என்ன செத்.. வேணாம் விடுங்க.." என்றும் வாழ்த்துகள் என்றும் எழுதி இருந்தார்

6. நடுவர்களான திருமதி. காஞ்சனா தாமோதரன், திரு. கோபால் ராஜாராம் ஆகியோருக்கும் எனக்கும் அவருடைய தொலைபேசி (Land & mobile) எண்களைத் தந்து அழைக்குமாறு திரு.இரா.மு. எழுதி இருந்தார்


16.01.2004 (வெள்ளி)

7.

வெள்ளிக்கிழமை காலையில் மேலே சொன்ன ஆறு கடிதங்களையும் ஒன்றாகப் படித்தேன் நான். போட்டியை நடாத்த ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்த தெம்பில் என்பாட்டில் இருந்திருந்தேன் நான்.

பாயிண்ட வடிவத்தில் அதுவரை எழுப்பப் பட்டிருந்த ஐயங்களுக்கு விடையளித்தேன் நான்.


அன்புள்ள இரா.மு அண்ணா,

வணக்கம்!

Just came in braving -45 degree celcius temperature. I
cannot not call you until i go home. :( I am sorry
Era.Mu aNNa.


மரத்தடி குளிர் காலப்போட்டி குறித்த உங்கள் மடல்களையும், பிகேஎஸ்ஸின்
மடல்களையும் படித்தேன். மரத்தடியின் மட்டுறுத்துனர் என்ற முறையில் சில
வார்த்தைகள்.

1. இந்தப்போட்டி மரத்தடி உறுப்பினர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.

2. பரிசுத்தொகை எதிர்பாராத விதத்தில் கூட்டப்பட்டபின்னர்தான்,
மரத்தடிக்கு வெளியிலும் போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட முடிவு
செய்தோம். ஆனாலும், போட்டி மரத்தடி உறுப்பினர்களுக்கு மட்டுமே. கலந்து
கொள்ள விரும்புபவர்கள் மரத்தடியில் உறுப்பினராக வேண்டும்.

3. நாங்கள் முதன்முதலில் நடத்தும்போட்டி என்பதாலும், இதற்கு முன்பு
இம்மாதிரியான போட்டிகளை நடத்திய அனுபவம் இல்லாததாலும், இரண்டு
பிரிவுகளில் மட்டுமே போட்டி நடத்தப்படுகிறது. போட்டி நல்லபடியாக நடந்து
முடிந்தால், மறுபடியும் நடத்தலாம் என்ற தைரியம் வந்தால், அப்போது
உபயதாரரிடம் பேசி மரத்தடி மட்டுறுத்துனர்கள் முடிவெடுப்பார்கள். இதைத்தான்
நேற்றும் பேசிக்கொண்டோம்.

4. அகலக்கால் வைக்க நாங்கள் விரும்பவில்லை, இரா.மு அண்ணா. மரத்தடி
உறுப்பினர்களுக்கிடையேயான இந்தப்போட்டிக்கு வந்த கதைகளும் வெற்றி பெற்ற
கதை/கவிதைகளும் மரத்தடி இணையத்தளத்தில் உரிய அறிவிப்போடு வரும்.
வெற்றி பெற்ற கதைகள் மரத்தடி இணையத்தளத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என்று
விரும்புகிறேன் நான். போட்டிக்கு வந்த கதைகளை வேறெங்கும் அனுப்ப முதல்
என்னுடைய அனுமதி பெறவேண்டும் என்ற குறிப்பும் போட்டி விதிகளில்
இருக்கிறது.

5. புதிதாக எழுதுபவர்கள் அடங்கிய சிறிய குழுவான நாங்கள், சிறிய
அளவிலேயே இப்போட்டியை நடத்த விரும்புகிறோம். இந்தப்போட்டியில்
கிடைக்கும் அனுபவங்களை வைத்தே அடுத்த போட்டி பற்றிய முடிவுக்கு வர
இருக்கிறோம்.

6. நீங்கள் சொன்னபடி நடுவராக பத்மநாப ஐயர் அவர்களையும், மாலன்
அவர்களையும் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களையும் அடுத்த போட்டி
நடத்துவதாயிருந்தால் கேட்க எண்ணம்.

7. நீங்கள் சொன்னபடி, பெரிய அளவில் போட்டியை கிளப்பில், இலக்கிய
இதழ்கள் துணையோடும், கமர்ஷியல் ஸ்பார்சர்ஷிப்போடும் நடத்தினால் என்ன?
அம்மாதிரியான போட்டியில் உறுப்பினர், அல்லாதார், இணையம் சார்ந்தவர்,
சாராதவர் அனைவரும் பங்கு பெறலாம். என்ன நினைக்கிறீர்கள்.
அம்மாதிரியான போட்டியில் மரத்தடி உறுப்பினர்களும், நானும் கலந்து,
எங்களால் ஆன உதவியையும், போட்டிகளில் பங்களிப்பையும் தர ஆர்வமாக
இருக்கிறோம்.

அன்புடன்,
தங்கை
மதி

Comments on "நடந்தது என்ன? - 5"

 

post a comment