நேரமோ நேரம்! - 2
அந்தக்காலத்தில் தமிழர்கள் எப்படி நேரத்தை துல்லியமாகக்கணித்தார்கள்? எனக்குத்தெரியாது. உங்களில் யாருக்காவது பஞ்சாங்கம் பார்க்கத்தெரியுமா? எனக்கு அதுவும் தெரியாது. என்னுடைய வயதொத்த சில உறவினர்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத்தெரியும். சரி நேரத்திற்கு வருகிறேன். நிச்சயம் நமக்கு நேரத்தை துல்லியமாகக்கணிக்கத்தெரிந்திருக்கவேண்டும். சோதிடர்களைப்பார்த்திருப்பீர்கள். எனக்குத்தெரிந்த நேரத்தைக்குறித்த தமிழ்வார்த்தைகள்:கால அளவு: ஒரு நாழிகை = 24 நிமிடம் இரண்டரை நாழிகை = ஒரு மணித்தியாலம் மூணேமுக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம் ஏழரை நாழிகை = இரண்டு முகூர்த்தம் ஏழரை நாழிகை = ஒரு ஜாமம் எட்டு ஜாமம் = ஒரு நாள் ஏழு நாள் = ஒரு வாரம் இரண்டு பட்சம் = ஒரு மாதம் இரண்டு மாதம் = ஒரு பருவம் மூன்று பருவம் = ஒரு ஆயனம் இரண்டு ஆயனம் = ஒரு வருடம் அட, உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கா என்று கேட்காதீர்கள். அகத்தியர் யாகூ குழுவில் ஜேபி சானிடம் இருந்து தெரிந்துகொண்டவை இவை. இதைவிட, கோழி கூவும் நேரமும் தமிழர்களுக்கு முக்கியமான நேரமாக இருந்திருக்கிறது. பலநாட்களுக்கு முன்பு, கோழி அதிகாலையில் கூவுவது குறித்தும், அதனுடைய body clock பற்றியும் நண்பர் திலக்கிடம் பேசிக்கொண்டிருந்தேன். திலக், கொஞ்சம் இதைப்பத்தி சொல்லிப்போடுங்கப்பா... கோழி கூவுறது பற்றிக்கதைச்சோடன எனக்கு ஊர் ஞாபகம் வந்திற்றுது பாருங்க. எனக்குத்தெரிஞ்சு எங்கட வீட்டில ஒரேயரு சேவல்தான் இருந்தது. நல்ல சிவப்பு நிறக்கொண்டையோட திரியும் அது. காலமை சூரியன் வெளிக்கிடுறதுக்குள்ள, இவர் கூவத்தொடங்கிருவேர். அப்பப்ப இரவிலயும் கச்சேரி வைப்பேர். ஊருக்குப்போன புதுசில, சேவல் கூவத்தொடங்கின உடன, அவரைப்பார்க்கிறதுக்கு எழும்பி ஓடிப்போறது ஞாபகம் வருகுது. சில வருடங்களுக்கு முன்பு, சென்னையில் இருந்தபோது, அம்மம்மாவிற்கு ஜேர்மனியில் இருந்து என்னுடைய சித்திபெண் தமிழில் தட்டுத்தடுமாறி எழுதிய கடிதத்தின் சாரம்சம் உங்களுக்காக. . "அம்மம்மா இப்ப இங்க நல்ல வெயில்காலம். பள்ளிக்கூடமும் லீவு. ஆனா, காலமை நல்லா நித்திரை கொள்ளலாமெண்டா அதுதான் ஏலாமக்கிடக்கு. பக்கத்தில இருக்கிற சேவல் ஒண்டு சூரியன் வந்த உடன கூவியண்டு திரியுது. ஒரு நாள், அதை குழம்பில கொதிக்கவிடுறது எண்டு இருக்கிறன்." |
Comments on "நேரமோ நேரம்! - 2"