Gunter Grass - 'Crab Walk'
இண்டைக்கு வாசகசாலைக்கு போனபோது குந்தர் கிராஸ் எழுதின 'Crab Walk' புத்தகம் எண்ட கண்ணில பட்டுது. இதுக்கு முதலே கிளப்பில் இரா.மு அவர்கள் அந்தப்புத்தகத்தகத்தைப்பற்றி சொன்னதால அதை எடுத்தன். ஜேர்மனில, ஜேர்மன்காரங்களின்ற கப்பலை ரஷியன் காரங்கள் குண்டுபோட்டு தகர்த்துப்போட்டாங்கள். அந்தத்தாக்குதலில தொள்ளாயிரம் பேர் செத்துப்போயிற்றினமாம். ஆனா, சின்ன படகுகளில போய் கொஞ்சப்பேர் தப்பிச்சிற்றினம். அதிலை ஒருத்திக்கு அங்கயே பிரசவவலி வந்து இந்தக்கதை சொல்லுற பத்திரிகையாளர் பிறந்தேராம். அவரின்ற அம்மாவுக்கு அண்டைல இருந்து என்ன நடந்தாலும் அந்த நிகழ்ச்சியோட சம்பந்தப்படுத்தியண்டே இருப்பா. பத்திரிகையாளரோ, அண்டையான் நிகழ்ச்சிகளை மறக்கப்பாக்கிறேர். அவரின்ற பதினைஞ்சு வயசு மகனுக்கு இண்டர்நெட் மூலமா, அண்டையான் நிகழ்ச்சிகளையும் அது சம்பந்தப்பட்ட விசயங்களையும் தெரிய விருப்பம். இந்தக்கதைக்கு ஏன் 'கிராப் வாக்' எண்டு பேர் வச்சதண்டு குந்தர் கிராஸ் ஒரிடத்தில சொல்லுறேர். நண்டு எப்படி போகும் எண்டு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். பின்னுக்கு போறமாதிரி ஒரு பக்கத்தாலை நடக்கும். அது நமக்குத்தான் பின்னுக்குப்போற மாதிரி இருக்குமே ஒழிய, நண்டு உண்மையா முன்னாலைதான் போகுது. அதுமாதிரி, இந்தக்கதையிலையையும் பழைய நாட்களை அசைபோட்டு, என்னடா பழைய கதை கதைச்சண்டு இருக்கிறேர் எண்டு நாம நினைக்கேக்க அவர் முன்னுக்குப்போய்க்கொண்டு இருக்கிறேராம். இதைப்படிச்சபிறகு மனம் அதிலையே உழலத்தொடங்கிற்றுது. எனக்குள்ளயே என்னமாதிரி பொருத்தமா பேர் வச்சிருக்கிறேர் எண்டு சிலாகிச்சுக்கொண்டன். எனக்குள்ளயே என்ன இருந்தாலும் நோபல் பரிசு வாங்கினவர் எண்டு பெயர் வைக்கிறதிலையே நமக்கு காட்டிப்போட்டேர் எண்டு நினைச்சன். நிறைய யோசனைகளும் மனதிலை வந்து போயிற்றுது. கொஞ்ச நேரம் இப்படியெல்லாம் இருந்திற்று கதையை தொடருவம் எண்டா முடியேல்ல. மனம் திரும்பத்திரும்ப அந்த 'நண்டு நடை'யிலதான் போய் நிண்டுது. இது வேலைக்காகாது எண்டு நினைச்சண்டு, சரி இங்க உங்களிட்ட பகிர்ந்து கொள்ளுவம் எண்டு வந்திருக்கிறன். இந்தப்புத்தகத்தின்ற ஜேர்மன் பேர் - Im Krebsgang. இதை கூகிளிண்ட மொழிபெயர்ப்பு பக்கத்தில கொடுத்து என்ன வருகுதெண்டு பார்த்தன். Im Krebsgang = In the cancer course Related links Link 1 Link 2 |
Comments on "Gunter Grass - 'Crab Walk'"