விண்டோஸ் 98 கணினியில் 'தமிழா' உலாவி
'தமிழா' உலாவியை இறக்கிய பிறகு அதில் பிரச்சினை இருக்கிறதே! தமிழ் எழுத்துகள் சரியாக தெரியமாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நண்பர்களே, நீங்கள் Win 98 வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நானுந்தான். 'தமிழா'வை இறக்கிவிட்டு, என்னடா இப்படித்தெரிகிறதே என்று யோசித்துக்கொண்டிருட்ந்தேன். அந்த நேரத்தில் 'அகத்தியர் யாகூ குழுவில்' ஆபத்பாந்தவராக ஒரு நண்பர் எழுதிய மடலை இங்கு வைக்கிறேன். **************************** நண்பர்களுக்கு, தமிழா! இணையச் செயலித் தொகுப்பை விண்டோஸ்(98ல் பயன்படுத்த நான் ஆலோசிக்கும் வழி, விண்டோஸின் Display properties (desktopல் right mouse click செய்து properties தட்டினால் கிடைக்குமே) க்குப் போய், Appearance tabன் கீழ் உள்ள அனைத்து எழுத்துருக்களையும் TSCu_Paranarக்கு (TSCu_Paranar உட்பட சில எழுத்துருக்கள் தமிழா! பொதியுடன் வருகின்றன) மாற்றிவிடுங்கள்.. குறைந்தது messagebox, menu இரண்டையுமாவது மாற்றியே ஆகவேண்டும். பிறகு அம்சமாய் உங்கள் இணையகாரியங்கள் தமிழாவுடன் நிறைவேறும். மடல் செயலியில் கூட, தலைப்புகள் அனுப்புவரது பெயர்கள் தமிழில் படிக்க சாத்தியமாகிறது.. (இதைநான் செய்தபோது, முரசு, கலப்பை போன்ற செயலிகள் ஏதும் ஓடிக்கொண்டிருக்கவில்லை. மாற்றம் செய்தபின் இரண்டையும் வைத்து சோதித்தபோது கூட எந்தப் பிரச்சினையும் இல்லை. தாராளமாக தமிழில் படிக்க முடிகிறது. நான் இங்கே தமிழ் என்று குறிப்பிடுவது TSCII மட்டுமே. இன்னும் விண்டோஸ் 98ல் யுனிகோடு சம்பந்தப்பட்டதைப் பார்ப்பதில் தடங்கல் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் செயலியை ஆங்கிலத்தையும் TSCII ஐயும் பயன்படுத்த எந்தத் தடையுமில்லை!) பயன்பெறுக. அன்புடன் பாண்டியன் |
Comments on "விண்டோஸ் 98 கணினியில் 'தமிழா' உலாவி"