மரத்தடி விழாவிற்கு வாரீர்!
கடந்த ஒரு வாரமாக இங்கே கவனம் செலுத்த முடியவில்லை. நானும் என்னுடைய நண்பர்களும் பங்கு பெறும் தமிழ்-இணையக்குழுவான மரத்தடி தொடங்கி வரும் புரட்டாதி நான்காம் தேதியோடு ஒரு வருடம் ஆகப்போகிறது. திடீரென்று நண்பர்களின் உற்சாகமான பங்களிப்புடன் கடந்த சனிக்கிழமையிலிருந்து ஊரில் கோயில் திருவிழா கொண்டாடுவது போல செய்யலாமே என்று கொண்டாட ஆரம்பித்துவிட்டோம். வெகுவிமர்சையாக, நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு திருவிழா களைகட்டி இருக்கிறது. நான்காம் தேதிக்கு இன்னமும் மூன்றே நாட்கள் இருக்கின்றன. இந்த மூன்று நாட்களும் மரத்தடி மக்கள் தங்கள் படைப்புகளை இட்டு திருவிழா கொண்டாடப்போகிறோம். நான்காம் தேதியை வித்தியாசமாக, அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் மரத்தடிக்காக பிரத்தியேகமாக படைப்புகளை தரச்சொல்லி மடலிட்டு விழாவை நிறைவு செய்ய இருக்கிறோம்.
இது நாள்வரை சுற்றிவர கிடுகு கட்டி, மறைப்பு வைத்து, பிரத்தியேகமாக தண்ணியிட்டு வளர்த்த மரத்தடியை இனி அனைவரின் பார்வைக்கும் வைத்திருக்கிறோம். நீங்களும் வந்து படித்து பங்கெடுக்க விரும்பினால், தயங்காது வாருங்கள். இந்தாருங்கள் முகவரி - http://groups.yahoo.com/group/maraththadi இல்லை எனக்கு படைப்புகளை மட்டுமே படிக்கவிருப்பம். அதற்கான மறுமொழிகளையும் விவாதங்களையும் படிக்க/பங்கெடுக்க விருப்பமில்லை/நேரமில்லை என்று சொல்லுகிறீர்களா? உங்களுக்காகவே http://www.maraththadi.com என்னும் இடத்தில் மரத்தடி நண்பர்களின் படைப்பை வலையேற்றி இருக்கிறோம். ஆண்டுவிழாக்கொண்டாட்டங்கள் எல்லாம் ஆண்டுவிழா கொண்டாட்டம் என்னும் பகுதியில் இடப்பட்டிருக்கின்றன. படித்து மகிழுங்கள் நண்பர்களே. உங்கள் மேலான கருத்துகளுக்கு காத்திருக்கிறோம். |
Comments on "மரத்தடி விழாவிற்கு வாரீர்!"