Friday, September 12, 2003

திரு.சுரதா அவர்களின் தமிழ் செயலிகள்



விண்டோஸ் 98'ல் யூனிகோடை பயன்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது. இது சரி செய்யப்படுமா என்று தெரியவில்லை. யூனிகோடு எழுத்துரு படிக்கமுடியாது, எழுத முடியாது என்று பல பிரச்சினைகள். இதற்குத்தான் டைனமிக் என்கோடிங் செய்யவேண்டும். இது பற்றி திரு.சுரதா அவர்கள் அவருடைய 'ஆயுதம் - தமிழ் செயலிகள் ஆயுத அணிவகுப்பு' வலைப்பதிவு மூலமும், அவருடைய இணையப்பக்கம் மூலமும் உதவுகிறார். http://www.jaffnalibrary.de/tools/

இன்று திரு.சுரதா செய்திருக்கும் செயலிகள்(tools) குறித்துப்பேசலாமா?

1. 'பொங்குதமிழ்' என்ற யூனிகோடுக்கு மாற்றக்கூடிய செயலியை செய்திருக்கிறார். இது வெப்உலகம், தினதந்தி, தினமணி, தினபூமி, முரசு அஞ்சல், வீரகேசரி, தினகரன், மயிலை, விகடன்-தாப், குமுதம்-தாம், பாமினி, திஸ்கி, ஆங்கில எழுத்துரு தமிழ், கோலோன் எழுத்துரு ஆகிய எழுத்துருக்களில் இருக்கும் செய்தியை யூனிகோடுக்கு மாற்றுகிறது.

இதன் பயன் என்ன? மேற்கூறிய இணையத்தளங்களுக்கு சென்று ஒவ்வொரு எழுத்துருவாக இறக்கமுடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இவற்றை இங்கே வெட்டி ஒட்டலாம். 'வலைப்பதிவுகள்' வைத்திருப்பவர்கள் திஸ்கியில் எழுதியதை யூனிகோடுக்கு மாற்றி பயனப்படுத்த முடியும்.
வலைப்பதிவுகளில் உங்கள் கருத்துகளை யூனிகோடில் தெரிவிக்க முடியும்.

2. விண்டோஸ் 98 வைத்திருப்பவர்கள் யூனிகோடில் நேரடியாக தட்டச்ச முடியாது. அவர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் யூனிகோடு தமிழில் கூகுள் தேடியந்திரத்தில் தேடிக்கண்டுபிடிக்கும் செயலி http://www.jaffnalibrary.com/tools/google.htm ஒன்றும் செய்திருக்கிறார்.

யூனிகோடுல் இருப்பதை திஸ்கி எழுத்துருவிற்கு மாற்றுவது, பாமினி எழுத்துருவில் இருந்து திஸ்கிக்கு மாறுவது என்று சில செயலிகளும் செய்திருக்கிறார். மற்றும்படி, மதுரைத்திட்டம், மன்றமையம், திஸ்கி தமிழுருவில் தேடுவது, பாமினி தமிழுருவில் தேடுவது என்றெல்லாம் http://www.jaffnalibrary.com/tools/google1.htm செய்திருக்கிறார். இவற்றை எல்லாம் அவருடைய 'ஆயுதம்' - வலைப்பதிவில் பெறமுடியும். கூடவே தமிழில் இயங்கும் சில மடலாடுகுழுக்கள், யூனிகோடு தமிழ் எழுத்துருக்கள் கிடைக்கும் இடம், தமிழில் இருக்கும் சில வலைப்பதிவுகள் என்று அமர்க்களமாய் இருக்கிறது.

அவருடைய http://www.jaffnalibrary.de/tools/ பக்கத்தில் வலது புறம் பாருங்கள். விண்டோஸ் 98 வைத்திருப்பவர்களின் கணினியில் யூனிகோடு தமிழ் தெளிவாக தெரியவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்று குறித்திருக்கிறார்.

இது தவிட http://www.suratha.com/ என்னும் ஒரு இணையப்பக்கத்தையும் சிறப்பாக நடாத்திவருகிறார்.

இந்த பதிவில் அவருடைய செயலிகள் பற்றி சிற்சில தகவல்களே கொடுத்திருக்கிறேன். தரப்பட்டுள்ள சுட்டிகளுக்கு (லிங்க்) சென்று பாருங்கள். ஏதேனும் ஐயமென்றால் அவருக்கு எழுதுங்கள். suratha(at)hotmail(dot)com

Comments on "திரு.சுரதா அவர்களின் தமிழ் செயலிகள்"

 

post a comment