பாரதி
இன்று பாரதியின் பிறந்த தினம். இன்றைக்கு நான் எதையாவது எழுதுவதை விட 'ராயர்காப்பிகிளப்பில்' பாரதியை எல்லாவிடத்தும் காண்கின்ற, எல்லா உறவுமுறையிலும் அழைக்கின்ற கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன். நண்பர்களே, இவரின் எழுத்தை நீங்கள் முன்பு படித்திராவிட்டால் எழுதுங்கள். இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று சொல்லுகிறேன். குயில்சித்திரை வந்துவிட்டால் எப்படித்தான் தொ¢யுமோ - குயில் கூவத் தொடங்கிவிடுகிறது. இன்று காலை கண்விழித்தது குயிலின் கூவலைக் கேட்டுதான். சென்னை போன்ற மாநரகங்களிலும் (தட்டுப்பிழை - typo - இல்லை) குயில்கள் இன்னமும் கூவிக்கொண்டிருப்பது இனிமையான அனுபவம்தான். தருமன் நரகத்தில் நுழைந்தானாம். நாலாபுறங்களிலிருந்தும் குரல்கள் கேட்டனவாம். "தருமபுத்திரரே! புண்ணிய சீலரே! தங்கள் வரவால் நறுமணம் நிறைந்த குளிர்ந்த காற்று வீசுகிறது. ஒரு முகூர்த்தம் இங்கேயே நில்லும்" என்று கர்ணன், பீமன், நகுல சகதேவர்கள், பாஞ்சாலி முதலியோர் கூவினராம். குயில் கூவும் போது தர்மபுத்திரர் நுழைந்த நரகம் போல் உணர்கிறேன். ஆனால் எல்லாப் போதிலும் குயில் இனிமையாக மட்டும்தான் கூவுகிறது என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் அதட்டும். சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குக் கேட்கும் பொ¢ய குரலில் என்னதான் அதட்டுமோ தொ¢யாது. சில சமயங்களில் எங்கேயோ நெருப்புப் பிடித்துக்கொண்டுவிட்டாற்போல் பரபரப்பான குரலில் குயிகுயிகுயிகூகூகூ என்று மூன்று மூன்று ஒலிகளாகக் கத்தி சிக்குவி குவிகிவிகீஈக் என்று வினோதமாக முடிக்கும். எப்படித்தான் எண்ணிக்கை தொ¢யுமோ, எந்தத் தாளக்கட்டு அதன் இதயத்தை இயக்குகிறதோ! பொ¢யவருக்கு நல்ல உல்லாசமான மனநிலை இருந்தால் குஊ குஊ குஊவு என்று தாளம் தப்பாமல் சா¢யான இடைவெளிவிட்டு நிதானமாகக் கொஞ்சுவார். திடீரென்று ஒவ்வொரு குஊ-வுக்கும் சுருதியை ஏற்றுவார். அப்படிச் சுருதி ஏற ஏற, கூவிக் கூவி கரைந்து போய்விடுவாரோ என்னவோ, குரலில் நிறைய பிசிறு தட்டும். கரைந்து போவதற்குக் காரணம் இருக்கிறது. அப்படிப் பிசிறு தட்டும்படிக் கூவுவது இன்னும் இணை கிடைக்காத குயிலின் காதல் அழைப்பாம் (mating call). "கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழவேண்டும்" உன்னி கிரு?ணன் அனுபவித்துப் பாடிக்கொண்டிருந்தார். என் மனைவிக்குக் காலையில் சமையலறையில் ஒலிநாடா ஓடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் சாம்பா¡¢லே இனிப்பிருக்கும் ஒற்ர்ரப்பிருக்காது என்று அந்தக் கால பி. சுசீலா பாடியதுபோல ஆகிவிடும். மஹாபாவி. இந்த இழைப்பு இழைத்து இப்படி உருக்குகிறானே என்று ரசித்துக்கொண்டே எழுந்தேன். பொறி தட்டியது. கூவும் குயிலோசை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? கத்தும் குயிலோசை.... அதென்னது அது? மனத்திற்குள் மன்றமைய (forumhum.com/tlit) புதுக்கவிதை நண்பர்கள் வந்து சி¡¢த்தார்கள். அதுதான். எகன மொகனயாப் பாடினா இப்படித்தான் ஆபத்து வரும். கீசுகீசென்று ஆனைச்சாத்தம் கலந்து பேசிய பேச்சொலியை அனுபவித்த ஆண்டாளைப்போல் இவனேனோ கத்தும் குயிலோசை என்று போட்டிருக்கிறானே. "கூவும் குயிலோசை காதில்வந்து கொஞ்சும் சுகம் வேண்டும்" என்றோ இல்லை இதைப்போல வேறு மாதி¡¢யோ எழுதத் தொ¢யாதவனில்லையே பாரதி. இதில் என்னவோ வைத்திருக்கிறான் என்று தோன்றியது. பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்னே வரவேணும் ..... அங்கு கத்தும் குயிலோசை - சற்றேவந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளம் தென்றல் வரவேணும். நிலா வெளிச்சம். கத்தும் குயிலோசை. தென்னங் கீற்று தரும் தென்றற் காற்று அதற்கப்புறம்? பாட்டுக் கலந்திடவே அங்கேயரு பத்தினிப் பெண் வேணும். அப்படிப் போடு. பாரதியும் இணை வேண்டும் என்றுதான் வரம் கேட்கிறான். இணை வேண்டிக் கத்திக் கரைந்துருகும் குயில்தானே அந்தச் சூழலுக்குப் பொருந்தும்? பிசிறு தட்டும் குரல் குயிலின் குரலாகவே இருந்தாலும் கத்தல்தானே? கவிக்குயிலும், காட்டுக் குயிலும் ஒரே மாதி¡¢ மனநிலையில் இருக்க வேண்டும் போலிருக்கிறது! என் ஆசி¡¢யர் அமரர் நாகநந்தி சொல்வது நினைவுக்கு வருகிறது. பாரதி மஹாரசிகன். அவனை இன்னும் நாம் சா¢யாகப் பு¡¢ந்து கொள்ளவில்லை. காணி நிலம் வேண்டும் என்று கேட்டால், ஏதோ கையகலம் நிலம் என்று நினைத்துக் கொள்கிறோம். இன்றைய நிலக்கணக்கிலே சொன்னால் கிட்டத்தட்ட 23 கிரவுன்ட் அந்த நிலத்திலே ஓர்மாளிகை கட்டித் தர வேண்டும் என்று கேட்டான். தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தனவாய். மாட மாளிகை வேண்டுமாம். சின்னதாய் ஒரு வீடு கேட்கவில்லை. (தொ¢யும். அதுதான் சின்னதாய் என்று வெகு ஜாக்கிரதையாகப் போட்டேன்.) எல்லாவற்றையும் விட நாம் பு¡¢ந்து கொள்ளும் அழகைப் பாருங்கள். கேணி ஒன்று வேண்டும் என்று கேட்டானே (கேணியருகினிலே தென்னைமரம் கீற்றும் இளநீரும்.....) கேணி என்றால் என்ன பொருள்? கிணறு என்றா? இந்தக் காட்சியைச் சித்திரமாகத் தீட்டி பாரதி நினைவகம் ஒன்றில் கிணறு வரைந்து, சகடை வரைந்து, கயிறு வரைந்து வைத்திருக்கிறார்கள். "உலகு இன்பக் கேணி" என்றெழுதின பாரதி, "துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் கேட்டிருப்பாய் காற்றே" என்று ·பிf¢த் தீவு கரும்புத் தோட்டத்திலே தமிழ்ப் பெண்கள் நிலையைப் பற்றி காற்றை விசா¡¢த்த பாரதி, கேணி என்றால் கிணறு என்ற பொருளிலா எழுதியிருப்பான்? திருவல்லிக்கேணி என்றால் என்ன பொருள்? திரு - அல்லிக் - கேணி. அல்லி நிறைந்த குளம் என்றல்லவா பொருள்? அவனுடைய மாளிகைக்குப் பக்கத்திலே ஒரு குளம் வேண்டும் என்றல்லவா கேட்டிருக்கிறான்? பொ¢தினும் பொ¢து கேள் என்று புதிய ஆத்திசூடி பாடியவன் பின்னே எப்படிக் கேட்பானாம்? அது போகட்டும். வேறெங்கோ வந்துவிட்டோம். குயில் என்று எழுதிய உடனேயே காலை இளம்பா¢தி வீசும் கதிர்களிலே நீலக்கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் என்று உங்கள் இரண்டு வயதுக் குழந்தையின் கண்களில் பொய்யழுகையின் போது கடகடவெனப் பொங்கும் புனல் போலப் பொங்கி நடக்கும் வா¢கள் நினைவுக்கு வந்திருக்குமே? (வேறு உவமையே கிடைக்கவில்லையா என்று கேட்பவர்கள் தம்மக்கள் பொய்யழுகை கேளாதார். வாழைக்கோடி வழிப்போக்கர் காலலம்பி என்ற தாலாட்டையும் கேளாதார்.) குயில் பாட்டைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு கீட்ஸின் Ode to a Nightingale நினைவில் வந்து போகும். பாரதிக்கு ஷெல்லிதாசன் என்று ஒரு புனைப்பெயரும் உண்டு. ஷெல்லியையும், கீட்¨.யும் அனுபவித்துப் படித்தவன் பாரதி. குயில் பாட்டுக்கும் நைட்டிங்கேல் பாட்டுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. குயிலின் மயக்கம் கலந்த பாட்டைக் கேட்டுக் கொண்டேதான் பாட்டை ஆரம்பிக்கிறான் கீட்ஸ். முடிக்கும் போது, பாரதியைப் போலவே கனவுகலைந்து திடுக்கிட்டு எழுகிறான். Forlorn! that very word sounds like a bell to toll me back to earth. Forlorn என்று சொல்லும் போதே டணாங் என்று மணிபோல் ஒலித்து பூமிக்கழைக்கிறதாம். அன்றுநான் கேட்ட தமரர்தாம் கேட்பாரோ என்று பாரதி சொன்னால், இன்று நான்கேட்பது என்றென்றோ கேட்கப்பட்டதன்றோ என்று கீட்ஸ் சொல்கிறான். The voice I hear this passing night was heard In ancient days by emperor and clown: குயில். கவிஞர்களை அந்தப் பாடு படுத்தியிருக்கிறது. நீ பறவையா அல்லது புதிதாக குரலால் மட்டுமே உணரத்தக்கதாய் இப்படி ஏதேனும் ஓர் இனம் தோன்றியிருக்கிறதா என்கிறான் ஷெல்லி. (Skylark) வேர்ட்ஸ்வர்த் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள புல் வெளியில் அமர்ந்திருக்கிறான். ஒரு மலையில் குயில் கூவுகிறது. குரல் இவனைத் தாண்டிப் போகிறது. எதிர் மலையில் பட்டு எதிரொலிக்கிறது. குரல் மறுபடியும் இவனைக் கடந்து போகிறது. குயில் மறுபடியும் கூவுகிறது. உன்னையரு பறவையென்பேனா உலவுகின்ற குரலென்பேனா (Shall I call thee a bird or but a wandering voice) என்று அதிசயிக்கிறான். குயிலால் ஈர்க்கப்படாதார் யார்? சிட்டிபாபுவின் குயில் மாயாஜாலத்தை வீணை வழிக்கேட்டுப் பரவசப்படாதார் யார்? எ¡¢க்கின்ற இந்தக் காலைப் போதுக்கும் இனிமை தரும் இந்த அதிசயக் குரல் கேட்டு மயங்காதார் யார்? எதிர்ச்சா¡¢ மரக்கிளையில் இரண்டு குயில்களின் கூவல் கேட்டது. நம்ப ஆளுக்கு அவங்க ஆளு கிடைத்தாகிவிட்டது. பக்கத்துக் காக்கை கூடுகளில் இன்னும் சில நாட்களில் மேலும் சில முட்டைகள் சேரும். ஹரி கிருஷ்ணன் |
Comments on "பாரதி"