Tuesday, September 16, 2003

கடந்த வாரம்...



கடந்த சிலதினங்களாக எனது வலைப்பதிவில் எழுதிய விஷயங்களை அசைபோடலாம் என்று நினைக்கிறேன். இணையத்தில் தமிழ் படிக்கமுடியும் என்று 1995 ஆண்டு நான் பணிபுரிந்த நிறுவனத்தில் அறிந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அப்போது நானும் இணையத்தில் தமிழில் எழுதி ஒரு வலைபதிவு வைத்திருப்பேன் என்றெல்லாம் நினைக்கவேயில்லை. கடந்த சிலமாதங்களாக எழுதி வருகிறோமே, அதுவும் யாகூ இணையக்குழுக்களில் சேர்ந்த பிறகு. அக்குழுக்களில் சேர்ந்தபிறகு, தொழில்நுட்பரீதியாகவும், தமிழை ஓரளவு பிழையின்றி எழுதுவதற்கும், அருமையான விஷயங்களை கற்றறிந்தோரிடமிருந்து அறிந்து கொள்ளவும், அந்த கற்றறிந்தோருடன் கடிதப்போக்குவரத்து வைத்துக்கொள்ளவும் முடிந்தது. சரி நமக்குத்தெரிந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளலாமென்று கடந்த வாரம் ஏற்பட்ட ஒரு உந்துதலின் விழைவாகவே சமீபத்தில் எனக்குதெரியவந்த சில தமிழ் இணைய தொழில்நுட்ப வளர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இதுவரை பகிர்ந்து கொண்டவை

1. 'தமிழா' உலாவி பற்றி - http://mathykandasamy.blogspot.com/2003_09_07_mathykandasamy_archive.html

2. 'தமிழா' உலாவி Win 98 வைத்திருப்பவர்கள் கணினியில் சரிவரத்தெரியாது. சரியாக தெரிய செய்யவேண்டிய சிறு மாறுதல்கள் - http://mathykandasamy.blogspot.com/2003_09_09_mathykandasamy_archive.html

3. Win 98 கணினியில் யூனிகோடு தமிழ் எழுத்துருவும் சரிவரத்தெரியாது. அதனால் எல்லாரும் 'உஜாலாவுக்கு மாறுங்கள்' என்று Win 2000க்கோ, Win XPக்கோ மாறிவிட முடியுமா? இல்லைத்தானே. பிரச்சினைகளை ஓரளவு சரிசெய்ய திரு.சுரதா அவர்கள் உருவாக்கி இருக்கும் சில செயலிகளைப்பற்றி எழுதினேன் - http://mathykandasamy.blogspot.com/2003_09_12_mathykandasamy_archive.html

4. நான் பாட்டுக்கு யூனிகோடு யூனிகோடு என்று பேசிக்கொண்டு போகிறேனே. அது என்னவென்று தெரியாதவர்களுக்கு 'மரத்தடி' நண்பர் கிருபா எழுதிய அருமையான விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் - http://mathykandasamy.blogspot.com/2003_09_14_mathykandasamy_archive.html

நாளையும் இங்கு சிலவிஷயங்கள் பகிர்ந்துகொள்ளப்படும். ஆகவே மறக்காமல் ஒரு நடை வந்து எட்டிப்பாருங்கள் நண்பர்களே!

Comments on "கடந்த வாரம்... "

 

post a comment