Sunday, September 14, 2003

தமிழில் யூனிகோடு - ஓர் விளக்கம்



என்னமோ யூனிகோடுன்றாங்க. கத்தரிக்காய்! ஒரு எழவும் புரியலை. இதுக்கு கனகதாரா ஸ்தோத்திரத்தையே கத்துக்கிட்டு பாராயணம் பண்ணிடலாம்னு நினைக்கிறீங்களா? :D உங்களுக்காக 'மரத்தடி' நண்பர் கிருபாஷங்கர் நகைச்சுவை கலந்து அருமையான விளக்கம் தந்துள்ளார். படித்து முடித்ததும் உங்களின் மேலான கருத்துகளை அளியுங்கள்.

<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>


க்ருபா எப்பொழுதுமே சாது. யார் வம்புக்கும் போகாத, யாரையுமே கலாய்க்காத ஒரு 10.5 change gold (பத்தரை மாத்து தங்கம்). ஆனால் முகுந்தராஜைக் கலாய்க்க ஆரம்பித்த ஜெயசிறீயின் மடலைப் பார்த்ததும் நேரே ஜெயசிறீயின் வீட்டுக்கு டி.எஸ்.எல் கனெ‡ன் வேகத்துக்கு ஓடினான். நொடியில் ஜெயசிறீயின் வீட்டு வாசலில் பதிவிறக்கம் (download) ஆகிவிட்டான். உள்ளே "ஷங்கர்க்ருபா" என்ற நுழைவுச்சொல்லுடன் (username) ஜெயசிறீ ஒரு கையில் அருவாள்மனையுடனும் இன்னொரு கையில் கத்திரிக்காயுடணும் என்றார். எதுவும் பேசாமல் ஒரு கடவுச்சொல் (password) மட்டும் சொன்னான் க்ருபா. மறுத்துப் எதுவும் ஜெயசிறீ மும்முரமாக கனகாதார ஸ்தோத்ரத்தை முணுமுணுத்தார்.

"சம்பத்‡ராயீ சகலேந்த்ரியானந்தானி சம்ராஜ்யதானவிபாவானி...."

"நான் மொதல்ல பேசாமதான் இருந்தேன், தலைகள் இருக்க (முகுந்த் & சுரதா) வால்...இல்லை, தூசி எதுக்கு ஆடணும்னு. எப்போவுமே பெரியவங்க விஷயத்துல தலையிடாத ஒரு சாதுவைத் தட்டி எழுப்பிட்டீங்க. ஆனா பாருங்க, நீங்களே இந்த யூனிகோட் விஷயத்துல வாயைக் குடுத்து மாட்டிண்ட்டீங்க..." என்று ஏதேனும் பதிலை எதிர்பார்த்தான்.

ம்ஹ¥ம்... ஒன்றும் பதிலே இல்லை. அதற்காக க்ருபாவை ஜெயசிறீ வெளியிலும் தள்ளவில்லை. (முகுந்தராஜ் அனுப்பிய யூனிகோட் பிரதிநிதி என்பதால் இருக்கலாம்.)

ஒரு வழியாக பேச ஆரம்பித்தார் ஜெயசிறீ.

"வணக்கம். வந்து தொலைச்சுட்டயா.... வா வா.. என்ன வேணும்?"

"என்னமோ கத்தரிக்காய் கனகதார ஸ்தோத்ரம் மட்டும்தான் தெரியும்னு சொன்னீங்களாம்... யூனிகோட் எல்லாம் புரியாலையாமே உங்களுக்கு?"

"நன் ஆ·ப் யு'ர் பிஸ்னஸ்...ஷட் யுவர் மௌத்."

"சட்டிப்பானை கவுத். டேக் யுவர் குடுமி அண்ட் கெட் அவுட்." என்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பதிலளித்தான்.

அய்யோ.. பெரிய ஆங்கில வித்து போல என்று பயந்த ஜெயசிறீ தமிழுக்கே மாறினார்.

"சரி, சரி. எனக்கு அவ்வளவுதான் தெரியும். யார் புரியற மாதிரி சொல்வா? ஆனா நீ முகுந்தைவிட மோசம். நம்ப சுரதா இல்லாட்டி ராஜாகிட்ட கேட்டுக்கறேன்."

"ஐ... அது எப்படி. புரியலைன்னு சொன்னப்பறமும் புரியவிட்டுடுவேனா என்ன. அதுவும் கணினித்தமிழ் புரியவே இல்லைன்ன ஒடனே... புரிய வைக்கத்தான் வந்துருக்கேன்."

"ஓ.. சார், நீங்கதான் விளக்க போறீங்களாக்கும்?" என்றார் ஜெயசிறீ.

"இல்லை... முகுந்தான் சொல்லப்போறார்." என்றான்.

"நீதானே இந்த மடலை அனுப்பற? எப்படி முகுந்த் சொல்வார்?"

"நான் டைப் அடிச்ச முகுந்த் பேச முடியாதா என்ன?"

ஒன்றும் புரியாமல் விழித்த ஜெயசிறீயின் முன்னால் முகுந்த் ஈ-கலப்பயுடன் பரசுராமர் ஸ்டைலில் தோன்றி,

"பக்தையே... கனகாதாரா ஸ்தோத்ரம் கேட்டு மகிழ்ந்தோம். நீ வேண்டும் வரம் கேள்" என்றார்.

சரிதான்... மரத்தடியில் மொத்தம் ரெண்டு லூசுகள் என்று கணக்கு வைத்துக்கொண்ட ஜெயசிறீக்கு ஆச்சர்யம் திடீரென. அங்கெ ஜேபியும் கூடவே முகுந்தராஜின் பக்கத்தில் நின்றார். உடனே ஜெயசிறீக்கு கொஞ்சம் ஆச்சர்யம் வந்தது, கூடவே கொஞ்சம் நம்பிக்கையும்.

"வீக்கெண்ட்ல நானும் முகுந்தும் எப்பவும் சேர்ந்துதான் ஹோட்டல் போகறது, ரேடியோ கேக்கறது, சினிமா பாக்கறது எல்லாம். ஒரு விதாயாசமா இருக்கட்டுமேன்னு இங்க வந்தேன்." என்று விளக்கினார் ஜேபீ சான். பிறகு முகுந்தின் காலட்சேபம் தொடங்கியது.

"சரி, இந்த கூடைல பற்பல கத்திரிக்காய்கள் இருக்கே, இதே மாதிரிதான் மின்னொரு காலத்தில் தமிழ் எழுத்துருக்கள் பல தனித்தனியாக இருந்தன. எழுத்துருன்னா ·பாண்ட்-னு சொல்வோம்."

சமைக்கும்போதே முகுந்தராஜ் பேசுவதைக்கேட்டு ஜெயசிறீக்கு அலுவலக நினைவு வந்துவிட்டது, அதாவது கொட்டாவி வந்துவிட்டது. ஆனால் முகுந்த் விடுவதாக இல்லை.

"பல எழுத்துருக்கள் இருந்தாலும் ஒவ்வொரு எழுத்துருவும் தங்களுக்குல் விதவிதமான எழுத்து அமைப்பைக் கையாண்டன. அதாவது என்கோடிங்க். அதனால, ஒரு எழுத்துருவைப் பயன்படுத்தி எழுதியதை இன்னொரு
எழுத்துருவைக் கொண்டு படிக்க முடியாது."

"அது ஏன் அப்படி?" கடனே என்று கேட்டு வைத்தார் ஜெயசிறீ.

ஜேபிக்கு ஏன் இங்கே வந்தோம் என்று ஆகிவிட்டது. க்ருபா அறையை நோட்டம் விட ஆரம்பித்தான். டைனிங்க் டேபுள் முழுக்க ·பில்ட்டர் கா·ப் மயமாகவே இருந்தது. ஒரே ஒரு டம்ப்ளரில் மட்டும் தான் கொடுத்த கரும்பு ஜூஸ் அப்படியே இருந்தது. எப்படியும் இவர்களின் என்கௌண்டர் முடிந்ததும் யாரேனும் ஒருவருக்குத் தேவைப்படும் என்று க்ருபா அதை பத்திரமாக எடுத்து வைக்கப்போனான்.

முகுந்த் தொடர்ந்தார்...

"என்ன பிரசன்னான்ன, சாரி... என்ன ப்ரச்சனைன்னா, ஒரு எழுத்துருல 'a' அப்டீன்னு அடிச்சா 'க' அப்டீன்னு வெளியீடு (output) திரைல வரும். இன்னொரு எழுத்துருல அதே 'a'வை அடிச்சா, 'ய'னு வெளியீடு வரும். உதாரணத்துக்கு, இப்போ 'புத்தி
சாலி' அப்டீன்னு ஒரு எழுத்துருல அடிச்சுட்டு, இன்னொரு எழுத்துருவைக் கொண்டு அதைப் பாத்தா 'முட்டாள்'னு வெளியீடு கிடைக்கும்."

"ஓ.. அதாவது க்ருபா-வோட பேரு...சரியா?" என்று க்ருபாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் ஜெயசிறீ.

அதற்குள் அருகிலிருந்த ஜேபீ குறுக்கிட்டார்.

"கரக்ட்... க்ருபா பேரை ஒரு ·பாண்ட்-ல அடிச்சா, உங்க பேரு இன்னொரு ·பாண்ட்-ல தெரியும்."

நன்றியுடன் ஜேபீ-யைப் பார்த்தான் க்ருபா.

"நீங்க வெச்ச ரசம் வண்டல் தங்கி கொழம்பு மாதிரி இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும்? இப்படி ஒரு ப்ரச்சனைல இருந்துது தமிழோட நிலைமை." என்றார் முகுந்த்.

அதற்குள் ஜெயசிறீ கத்தரிக்காயை நறுக்கி முடித்துவிட்டு, ரசமும் கத்தரிக்காய்க்கறியும் சமைக்க ஆரம்பித்திருந்தார். இவர்கள் சொல்லியது உள்ளுக்குள் ஏதோ பொறி தட்டியது. 'சீ, சீ... அப்படியெல்லாம் இருக்காது' என்று எதையோ நினைத்து சமாதானமும் சொல்லிக்கொண்டார். முகுந்த் மெதுவாக சிரித்துவிட்டுத் தொடர்ந்தார்.

"a, b, c, d, போன்ற எழுத்துக்கள் இருந்த இடத்தில் தமிழ் எழுத்துக்களை வெச்சதால வந்த பிரச்சனை அது. அதனால மக்கள் யோசிச்சாங்க. ஒரு ஐடியா பண்ணினாங்க. ஆங்கில எழுத்து a to z, அப்பறம், A to Z, அப்பறம், #, @, ! மாதிரி ஸ்பெஷல் கேரக்டர்ஸ் மாதிரி எல்லா எழுத்துக்குமே கொடுத்த இடம் போக மிச்சம் கொஞ்சம் எடம் இருந்துது. அந்த இடங்களை எல்லாரும் ஒரே மாதிரி தமிழுக்காக பயன் படுத்திக்கலாம்னு ஒரு முடிவெடுத்தாங்க."

"அய்யோ... சுத்தம், சுத்தம். ஏதோ புரியற மாதிரி இருந்துது. இப்போ எல்லாம் போச்!" என்று சொல்லி இவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்று எஸ்கேப் ஆகப்பார்த்தார் ஜெயசிறீ.

"இல்லங்க ஜெயசிறீ. கொஞ்சம் விளக்கமா சொல்ல ட்ரை பண்றேன். ASCII-னு ஒரு என்கோடிங்க் ஸ்கீம் இருக்கு.. எல்லாரும் இப்போ அதைதான் பயன்படுத்தறோம். அமெரிக்க பல காலமும், பணமும் செலவழிச்சு இந்த என்கோடிங்கை அடைஞ்சுருக்காங்க. இதன்படி, A என்ற எழுத்தின் மதிப்பு 95, Bயின் மதிப்பு 96, Cயின் மதிப்பு 97... இப்படி போய்க்கொண்டே இருக்கும். அப்பறம் a-யின் மதிப்பு 65, b-யின் மதிப்பு 66, etc. இதே மாதிரி. ஆக, ஆங்கில எழுத்துக்களுக்கு ஒதுக்கின எடம் போக ஒரு 128, 129க்கு அப்பறம் எல்லா எடமும் ·ப்ரீதான். அதைப் நம்ப தமிழுக்கு
பயன்படுத்திக்கற ஒரு ஐடியா தோனிச்சு.."

ஒரு வேளை அந்த விளக்கவும் மின்னஞ்சலை அனுப்பியே இருக்ககூடாதோ என்று ஜெயசிறீக்குத் தோன்றியது. வீட்டுக்குள் செருப்பு எல்லாம் போட்டுக்கொளும் பழக்கம் இல்லததால், கையாலேயே தலையில் அடித்துக்கொண்டார்.

"சரி.. அப்படி அந்த ·ப்ரீயான எடத்த பயன்படுத்திக்கற ஒரு என்கோடிங்க் ஸ்கீம்தான் டிஸ்கி (TSCII)." என்று முகுந்த் மேலும் தொடர்ந்தார்.

"ம்ம்.. சரி, சரி.. எனக்கு எல்லாமே இப்போ புரிஞ்சுது. போதும். நாளைக்கு நாம பாக்கலாமா? கொஞ்சம் ·ப்ரீயா பேசிக்கலாம்?" என்று கெஞ்சாத குறையாகக் கேட்டார் ஜெயசிறீ. முகுந்த் விடுவதாக இல்லை.

"சரி.. இப்படியாக, எடம் ரெடி பண்ணியாச்சு. அதன்படி, 171-வது எடம், தமிழ் எழுத்து 'அ'வுக்கு. 172-வது எடம், 'ஆ'வுக்கு. 173 'ஈ'க்கு. அப்படியே போகும்." ஜெயசிறீ டென்ஷன் ஆகிவிட்டார்.

"யோவ்.. என்னயா வளையாடற? எனக்கு தலைல பூ வெச்சுதான் பழக்கம். 173-னு நம்ப கம்பூட்டர்ல அடிச்சா, 'இ'னு வருமா? அப்போ '171'னு அடிச்சா 'அ'னு வருமா? போய்யா டுபாக்கூரு.. அப்போ உண்மைலயே '171'ங்கற நம்பரை அடிக்க என்ன பண்றதாம்?"

"அய்யோ. அப்படி இல்லை. நல்லா ஞாபகப்படுத்திப்பாருங்க... 65-லருந்துதான் ஆங்கில எழுத்து A ஆரம்பிக்கறது. 1-லிருந்து 9வரைக்கும் அதுக்கு முன்னாடி உள்ள எண்கள்தான். 49-ங்கற எடம், 1-ங்கற எண்ணுக்கு. 50-ன்னா, 2. 51-ன்னா மூணு."

"ஐயோ... தலை சுத்தர்தே எனக்கு....கடவுளே!!!!" என்று அலற ஆரம்பித்தார் ஜெயசிறீ.

முகுந்த் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

"சரி.. இப்போ 1-ல இருந்து 129, 130 இடங்கள் வரைக்கும் நம்ப விசைப்பலகைலயே வர வெச்சுடலாம்... A-ங்கற விசையை நீங்கள் அழுத்தினால், 65-ங்கற மதிப்பு உங்க கணிப்பொறி இயங்குதளத்துக்கு (operating system like Windows, Linux, etc) போய்சேரும். ஆக, 1-ங்கற விசையை நீங்க அழுதினா, 49-ங்கற மதிப்புதான் போய் சேரும்."

"சரி.. அப்போ 171-ங்கற மதிப்பு போய் சேந்து 'அ'ங்கற எழுத்து வரர்துக்கு என்ன பண்னனும்?"

"ஆஹா.. என் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது..." என்று முகுந்தராஜ் ஒரே குதியாக குதிதுவிட்டு தொடர்ந்தார்.

"இது கேள்வி.. நல்ல கேள்வி. அந்த மதிப்பை உள்ளீடு பண்றதுக்குதான் ஈகலப்பை, முரசு மாதிரி மென்பொருட்கள் எல்லாம். இது என்ன பண்ணும் தெரியுமோ?" என்று தூண்டில் போட்டார்.

அதற்குள் அடுப்பில் கொதி வந்துவிட்டது. அடுப்பின் அருகே போய் ரசத்தை இறக்கி வைத்தார்.

முகுந்த் ஒரு தடவை சொடுக்கு போட்டார்...

"பாத்தீங்களா... இப்போ என்ன பண்ணினீங்க?"

"ரசத்தை இறக்கிவைத்தேன்...கொதி வந்ததால" என்றார் ஜெயசிறீ.

"அதாவது, எப்போ கொதி வரும்னு எதிர்பாத்து, கொதி வந்ததும் எறக்கிட்டீங்க.. இல்லையா?"

"ஆமாம்..."

"இதே மாதிரிதான் இ-கலப்பையும். நீங்க டைப் அடிக்கறதை கவனிச்சுப் பாக்கும்.. அது எதிர்பாக்கற எழுத்து காம்பினேஷன் வந்தா, ஒடனே அந்த குறிப்பிட்ட எழுத்தை திரையில் காமிக்கும்.. அதாவது அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கு 171, 172, 173, etc. மதிப்புக்களை அனுப்பும். நீங்க "a"னு அடிச்சா, "அ"னு திரைல தெரியும். அதுக்கு அர்த்தம் என்னன்ன, 171-ங்கற மதிப்பு அந்த செயலிக்கு அனுப்பப் பட்டு இருக்குன்னு புரிஞ்சுக்கணும்."

"அப்போ நெஜமாவே ஆங்கில a-னு அடிக்க நெனச்சா?"

"அதுக்குதான் இந்த ஹாட்-கீ. Alt-1 அழுத்தினா ஆங்கிலமும், Alt-2 விசைகளை அழுத்தினா தமிழ்-லயும் தொடரலாம். அதாவது, ஆங்கிலம் செயல் நிலைல இருக்கும்போது, நீங்க அடிக்கறது அப்படியே திரைக்கு வந்துடும். 171, 172, 173 மாதிரி எந்த மதிப்புக்கும் மாறாமல் நேரடியா போய்டும். Alt-2 விசை அழுத்தப்பட்டு தமிழ் இயக்கநிலைல இருக்கும்போது,
the-னு அடிச்சா, 'தெ'னு மாறி தமிழ்ல தெரியும்."

பிறகு சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு மறுபடியும் தொடர்ந்தார்.

"ஆக, நீங்க விரும்பற எழுத்து காம்பினேஷன்ல நீங்க விரும்பிய எழுத்தைத் திரைல தோன்ற வைக்கறதுதான் கீ-போர்ட் ட்ரைவர், அதாவது ஈகலப்பை, முரசு அஞ்சல் போன்ற செயலிகள். இந்த அடிப்படைல, 'a'னு அடிச்சு 'ய'ன்னு வரவழைக்கலாம். இது பழைய டைப்ரைட்டர் விசைப்பலகை முறை. 'a'னு அடிச்சு, 'அ'னும் வரவழைக்கலாம், இது அஞ்சல் விசைப்பலகை முறை. இப்படி பல விசைப்பலகை முறைகள் இருக்கு. ஆரம்பத்துக்கு ரொம்ப ஈசின்னா அது இந்த ·போனடிக் முறைதான்.
எதுவும் புரியலைனு சொல்லிடாதீங்க ப்ளீஸ்... அப்பாலிக்கா நான் துரியன் பழம் சாப்டாதான் மனசே ஆறும்..." என்று முகுந்த் கவலையுடன் சொன்னார்.

"ஹ¥ம்.. சரி, சரி.. மேல சொல்லுங்க.. எல்லாம் புரிஞ்சுது. அதான் டிஸ்கி இருக்கே, அப்பறம் யூனிகோட் வேற எதுக்கு?" என்று லுலுலுவாக்காட்டிக்கு சொல்லி சமாதானப்படுத்தினார் ஜெயசிறீ.

"சரி, ஏதாவது திங்கறதுக்கு இருக்கா?" என்று க்ருபா ஆவலுடன் ஜெயசிறீயிடம் கேட்டான். கையில் கரும்புச்சாறு இருந்தது. யாருமே எந்தவித சண்டையிலும் இன்னமும் ஈடுபாடாதது வேறு பெரும் வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டது க்ருபாவுக்கு.

ஹ¥ம்ம்... இது ஒன்னும் கதைக்கே ஆகாது என்று ஒரு முடிவுக்கு வந்தான். பளார் என்று யாருடைய
கன்னத்திலாவது அறைந்துவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு கரும்பு ஜூசைக் குடித்துவிடலாம் என்று முடிவு
செய்தான். அந்த வேளையில்....

வாசலில் சுந்தரின் காலடி ஓசை...

வந்ததும் சுந்தரின் கண்னில் முதலில் பட்டது ஜேபீதான். உடனே சுந்தருக்கு குஷி...

"ஹாய்டா மச்சி... எப்டி இருக்க?" என்றதை ஜேபீ பார்த்தார்... தன்னைத்தான் இவ்வளவு மரியாதையாக அழைக்கிறார் சுந்தர் என்று பெரும் அதிர்ச்சி உண்டாயிற்று...

"என்ன, என்ன.. என்னையா இப்டி கூப்ட்டீங்க?" என்று அதிர்ந்தார்.

"அட ஆமா நீங்கதான சொன்னீங்க.. சார், ஐயா-னு எல்லாம் யாரும் என்னைக் கூப்ட வேணாம்னு... அதான் ரொம்ப க்ளோஸா இப்டி கூப்ட்டேன்..."

"என்ன இருந்தாலும், நான் வயசுல ரொம்ப பெரியவன்...." என்று இழுத்தார்.

"இருக்கலாம். ஆனால் நாங்க எல்லாம் உங்களை மனதால் இளைஞர்களாவேதான் இன்னும் நினைக்கிறோம், எங்களில் ஒருவராக.."

இதற்கு மேலும் சுந்தரிடம் பேசுவது தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் டிச் என்று ஜெயசிறீ பக்கம் திரும்பி
விட்டார். பிறகு ஜெயசிறீயிடம் அவரே பேச ஆரம்பித்தார்.

"என்ன கேட்டீங்க ஜெயசிறீ... எதுக்கு யூனிகோட்னுதான? நானே சொல்றேன். இப்படி நாம 171=அ, 172=ஆ, 173=இ, etc. இப்டீன்னு நமக்கு ஒரு வழி பண்ணிண்ட்டோம், இல்லையா? இதே மாதிரி உலகிலுள்ள நறைய மொழிக்காரங்க அவங்கவங்க மொழிக்கு இதே மாதிரி பண்ணிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆக, மறுபடியும் back to square one. ஒவ்வொரு மொழி ·பாண்ட்லயும் ஒரு மாதிரி தெரியும். இதனால ஒரு ஒருங்கினைப்பு இருக்காது."

"சரி... அப்போ ஒவ்வொரு மொழிக்காரங்களுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட எழுத்துக்குக்கு இடம் எடுத்துண்டா? தமிழ்ல மொத்தம் 247 எழுத்து.. 171-ல இருந்து ஒரு 247 எழுத்து தமிழுக்கு, அப்பறம் கொஞ்சம் எழுத்து தெலுங்க்கு, அப்பறம் ஹிந்திக்கு, அப்பறம் ·ப்ரெஞ்சுக்கு, அப்பறம் ஜெர்மனிக்கு.. அப்படி பண்ணினா ஒரு ப்ரச்சனையுமே இருக்காது இல்ல?" என்றார் கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாக ஜெயசிறீ.

"இங்கதான் ஒரு ப்ரச்சனையே இருக்கு... மொத்தம் காலியா இருக்கற எடமே 255 வரைக்கும்தன். இன்னும் அதிகம் எடம் வேணும்னா அதுக்கு இந்த ASCII/TSCII என்கோடிங்க் எல்லாம் பத்தவே பத்தாது. இப்படி எல்லா மொழிக்கும் எடம் தரர்துக்கு ஒரு என்கோடிங்க் ஸ்கீம் இருக்கு. அதுக்கு பேருதான் யூனிகோட்." என்று மீண்டும் விளக்க ஆரம்பித்தார் முகுந்த்.

"சரி, இந்த யூனிகோட் பயன்படுத்தறதால என்ன நமக்கு நன்மை?" என்று சந்தேகத்துடன் கேட்டார் ஜெயசிறீ.

"அவலோகயமாம் அகின்சனானாம் ப்ரதமம் பாத்ரமக்ர்த்ரிமம் த்யாஹா-னு கனகதார ஸ்தோத்ரத்துல சொல்றோமே, இல்லையா? அவலோகயமாம் அகின்சனானாம் ப்ரதமம் பாத்ரமக்ர்த்ரிமம் த்யாஹா என்று உலக அரங்கில் கருணைப்பார்வை கேட்டு, யூனிகோடின் தயைக்கு பாத்திரம் ஆகும்படி ஏழைத்தமிழ் ஏங்கியது. யூனிகோடில் தமிழுக்கும் ஒரு இடம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன். இப்படி உலகோட ஒத்துவாழறதுனால நமக்கு பல நன்மைகள் இருக்கு." என்று ஜேபீ எடுத்து சொன்னார்.

க்ருபா எதாவது சீரியஸாக பேச எண்ணி,

"விண்டோஸ் 98'ல இந்த கீ-போர்ட் ட்ரைவரும் செயல்படாது. அதுக்கு நம்ப சுரதா ஸ்பெஷலா ஒரு செயலி பண்ணியிருக்கார். மற்ற இயங்கு தலத்துல இயங்க நம்ப முகுந்த் ஈகலப்பைல களாசி இருக்கார் கலாஸி.. ஆமாம்.... உங்க இயங்குதளம் எது? அந்த ரெண்டு செயலிகளின் இணைய முகவரி வேணுமா?" என்று க்ருபா கேட்டுப்பார்த்தான்.

"டேய் கஸ்மாலம். நீ இங்க வந்ததாலதாண்டா இத்தன ப்ரச்சனையுமே... இன்னா நென்சுனுக்கீற மன்சுல.... ஆங்? ஒரு மின்னஞல்.. ஒரே ஒரு மின்னஞ்சல். அதுக்காக இப்படி இவ்வளவு பெர்ர்ர்ரிய மடல்.... நீ நாசமா போக! ப்ளேடு தாங்க முடியலை....மவனே சகிக்கல... நீ கண்டி இனிமே என்னொட கண்ல படு, பட்ட கீசு தோல ஊர்கா போட்டுடுவேன் ஜாக்கரதை." என்று சென்னைத்தமிழில் சீறினார் ஜெயசிறீ.

யூனிகோட் புரியாவிட்டாலும், சென்னைதமிழாவது ஜெயசிறீக்கு வந்துவிட்டதே என்று மகிழ்வுடன் இடத்தைக் காலி செய்து உயிரைக்காப்பாற்றிக்க்கொண்டான் க்ருபா...இன்னுமும் முழுதாக யூனிகோட் பற்றி விளக்கமுடியாத குறையுடனேயே முகுந்தும் ஜேபீயும் அங்கிருந்து வெளியேறினர். சுந்தருடைய செல் ·போனில் ப்ரபா தொடர்புகொண்டு ஒரு கேள்வி கேட்டார்...

"சுந்தார், யூனிகோட்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணமுடியுமானு கொஞ்சம் யார்கிட்டயாவது கேட்டு சொல்றீங்களா?" என்று ஏக்கத்துடன் கேட்டார் சக்தி எனப்படும் ப்ரபா.


சு. க்ருபா ஷங்கர்


<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>*<>

யூனிகோடு எழுத்துருக்கள்


முரசு யூனிகோடு இணைமதி - முரசு செயலியோடுதான் செயல்படும்.

யூனிகோடு ஆவாரங்கால்

யூனிகோடு இளங்கோ எழுத்துரு

Code 2001 தமிழ் யூனிகோடு எழுத்துரு

தேனி யூனிகோடு எழுத்துரு

Comments on "தமிழில் யூனிகோடு - ஓர் விளக்கம்"

 

post a comment