Thursday, September 18, 2003

தமிழில் Open Office 1.1



உங்களுக்கு Sun Microsystemத்தின் ஆதரவோடு வெளிவந்திருக்கும் Open Office பற்றித்தெரிந்திருக்கும். M.S.Office போன்ற, ஆனால் *இலவசமாக* கிடைக்கக்கூடியது இது. இதைப்பற்றி தெரிந்து கொள்ள, வலையிறக்கம் செய்து கொள்ள - http://www.openoffice.org/

சரி கணினியிலும் இணையத்திலும் கிடைக்கக்கூடிய தமிழ் செயலிகள் பற்றித்தானே இங்கே பேசுவதாக சொன்னேன். இப்போது ஏன் Open Office பற்றிப்பேசுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

தற்போது வெளிவந்துள்ள Open Office 1.1 தொகுப்பில் யூனிகோட் தமிழை சிறப்பாக உபயோகிக்கமுடிகிறது. Open Office 1.1 தொகுப்பை http://www.openoffice.org/ என்ற சுட்டியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி, இன்னும் விஷயம் இருக்கு. இந்த Open Office 1.1 உபயோகித்து Win98 கணினி வைத்திருப்பவர்கள்கூட யூனிகோடில் எழுதலாம். Open Office 1.1 உபயோகித்து தமிழில் எழுதுவதற்கு தேவை எ-கலப்பையும் - http://tamil.net/newtamil/ekalappai_1.html எ-கலப்பைக்கான யூனிகோடு டிரைவருந்தான். இதை ஈ-உதவி குழுவின் கோப்புகள்(Files) பகுதியிலிருந்தோ, http://thamizha.com/downloads/unicodetamil.zip இருந்தோ இறக்கிக்கொள்ளலாம்.

எ-கலப்பை + Open Office 1.1 கொண்டு விண்டோஸ்98 இயங்குதளங்களில் எளிமையாக தமிழ்யூனிகோட்'ஐ பாவித்து சொல் அவணங்கள் (word), விரிதாள்கள் (spreasheet), presentation material , html கோப்புகள் அனைத்தையும் யூனிகோட் தமிழில் எழுதலாம். இதே போல் முரசு + ஓப்பன் ஓ·பீஸ் 1.1 கொண்டும் விண்டோஸ் 98 இயங்குதளங்களில் தமிழ்யுனிகோட் எழுதமுடியும் என்றுm திரு.முத்து அவர்கள் தெரிவித்தாக எ-கலப்பை உருவாக்கிய குழுவின் முக்கிய உறுப்பினர் முகுந்த்ராஜ் தெரிவிக்கிறார்.

அப்புறம் என்ன இன்னும் யோசிக்கறீங்க.... இப்பவே யூனிகோடுக்கு மாறிடுங்க.. இல்லை...இல்லை... மாறிடலாம்.... :)

எ-கலப்பை, 'தமிழா' உலாவி, ஓபன் ஆ·பீஸ் 1.1 பயன்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், e-Uthavi@yahoogroups.comக்கு எழுதுங்கள். முகுந்த்க்கும் எழுதலாம்.


Comments on "தமிழில் Open Office 1.1"

 

post a comment