Thursday, September 25, 2003

ஆழ்கடலில் ஓர் அதிசயம்


'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு' என்பது எல்லாருக்கும் பொருந்தும் இல்லையா? முக்கியமாக விஞ்ஞானிகளுக்கு. கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பது நமக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் புதிரே. அதுவும் ஆழ்கடலில் வாழும் உயினங்களைப்பற்றி அதிகம் தெரியாது. இந்நிலையில் கலிபோர்னியாவிற்கு அருகில் பசிபிக் சமுத்திரத்தில் ஆழ்கடலில் உயிரனங்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் ஒன்றை விஞ்ஞானிகள் எதிர்பாராத முறையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.

கலிபோர்னியா கடலோரத்தில் இருந்து ஏறக்குறைய நூறு மைல் தொலைவில் ஒரு மைல் ஆழத்தில் அதாவது ஏறக்குறைய ஆயிரத்து அறுநூறு மீட்டர் ஆழத்தில் இந்த வருங்கால சந்ததியினரை உருவாக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இடத்தில் மீன்களும் ஏனைய கடல்வாழ் உயிரங்களான ஆக்டோபஸ் ஆகியன ஏராளமாக முட்டைகளிட்டு, அவற்றிற்கு காவலிருக்கின்றன. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த இடத்தை சுற்றி அவ்வளவு கடல்வாழ் உயிரனங்கள் இல்லை என்பதே. நமக்குப்புரியும்படி சொல்லவேண்டும் என்றால் பொட்டல்காட்டில் அந்த மீன்களும் ஏனைய உயிரனங்களும் முட்டைகளை இட்டுவிட்டு, காவலுக்கு இருக்கின்றன.

ரிமோட் வழியே இயங்கும் ரோபோட்டை கீழே அனுப்பி இந்த உயிரினங்களையும் முட்டைகளை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இளம் ஊதா நிறத்தில் ஏராளமான முட்டைகள் சிறிய பாறைகளில் இருக்க, அருகில் இரண்டடி நீளமுள்ள blob sculpin, Psychrolutes phrictus என்னும் மீன் ஓய்வெடுக்கிறது. இந்த மாதிரி மீன்களுக்கு இடையே ஆங்காங்கே ஆக்டோபஸ்களும் முட்டையிட்டு பத்திரமாகப் பேணிவருகின்றன. இங்கு நண்டு, நட்சத்திரமீன் ஆகிய இன்னோரன்ன உயிரங்களும் சீவிக்கின்றன.

ஆழ்கடல் மீன்கள் தங்கள் உயிரினங்களைப்பாதுகாப்பதை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுபோல பலவிதமான உயிரினங்களும் ஒன்று கூடி தங்களின் குஞ்சு குளுமான்களை வளர்ப்பதும் இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கண்டிராத ஒன்று என்று, Monterey Bay Aquarium Research Institute (MBARI) in Californiaவைச்சேர்ந்த Jeffrey Drazen கூறுகிறார்.

பொதுவாக ஹாட் ஸ்பிரிங்க்ஸ் இருக்கும் இடங்களிலும், சேறாக இருக்கும் தரைப்பகுதியிலும்(கடலின்) கடல் உயிரினங்கள் இருக்கும். இந்த இடங்களில் காணப்படும் தாது உப்புகளே இவை அங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கக்காரணம். அதேபோல அதிக அளவில் மீனகளும் மற்ற உயிரினங்களும் காணப்படும் இடம், கடலில் மூழ்கியிருக்கும் மலைப்பகுதிகள். அலைகளினால் அடித்து வரப்படும் 'பிளாங்க்டனை' உண்ணுவதற்காக கடல் உயிரினங்கள் இங்கு சேரும். ஆனால், முதலில் கூறிய 'Gorda Escarpment'இல் வேறெங்கும் காணாத அளவு உயிரினங்கள் இருக்கின்றன. அதுவும் இவ்வுயிரினக்கள் எல்லாம் இங்கு குழுமியிருக்கும் காரணமும் விசேடமானது. இனப்பெருக்கம். மீனவர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்து இந்த இடம் காப்பாற்ற முயற்சி எடுத்துவருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி: நாஷனல் ஜியாகிரபிக்

Comments on "ஆழ்கடலில் ஓர் அதிசயம்"

 

post a comment