Sunday, October 26, 2003

நேரமோ நேரம்!



என்னுடைய அம்மம்மா, பகலோ, இரவோ வானத்தைப்பார்த்து நேரத்தை ஓரளவு சரியாகச்சொல்லிவிடுவார். 'எப்படி இவ்வளவு சரியா சொல்லுறீங்க?' என்று வாயைப்பிளப்பது எங்கள் வேலையாக இருக்கும். இப்போது கையில் கட்டும் மணிக்கூட்டில் தொடங்கி எத்தனை எத்தனை இடங்களில் கடிகாரங்கள் இருக்கின்றன. கணினி, மைக்ரோவேவ், ரேடியோ கடிகாரம், வீடியோ கடிகாரம், செல்போன் கடிகாரம் இத்தியாதி இத்தியாதி. ஒரு வினாடி நேரத்தையும் பிரித்து சரியாக அளந்துகூறும் atomic clocks (தமிழில் எப்படி சொல்வது???) இருக்கும் இந்த நாளில் நேரத்தைப்பற்றி கொஞ்சம் விலாவாரியாக ஆராய்வோமா?



Comments on "நேரமோ நேரம்!"

 

post a comment
Statcounter