நட்பு - 1
வெள்ளை யூனி·பார்ம், பாப் தலை, காலில் கறுப்பு ஷ¥ இதுதான், நான் மூன்றாம் வகுப்புவரை படித்த 'பிஷப்ஸ் காண்வெண்டின்' சீருடை. அதற்குமுதல் வேறுமாதிரியான ('ப' வடிவமுள்ள கழுத்தும், வினோதமான பாட்ஜும்) சீருடை போட்டுக்கொண்டு வேறு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்திற்குப்போனது ஞாபகம் இருக்கிறது. இரண்டு-மூன்று நாட்களே போனதாக பிறகு சொல்லிச்சினம். பள்ளிக்கூடத்தில் காண்டீன் ஞாபகம் இருக்கு. முதலாம், இரண்டாம் வகுப்புப்பிள்ளைகளுக்கு காண்டீன்ல என்ன வேலையெண்டு கேக்காதீங்க. எனக்கும்தெரியாது. யோசிக்கிறன். வீட்டில, பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும்வரையில் கையில் காசு தரயில்லை. பியானோக்குப்பக்கத்தில நிண்டு ஏதோ இரைஞ்சது, ஏதாவது விழா எண்டா, வெக்கப்படாம ஆட்டம், பாட்டத்தில சேர்ரது, வித்தியாசமான முறையில் சுலபமாகப்புரிந்துகொள்ளும் முறையில் ஆங்கிலம் சொல்லித்தந்தது இதெல்லாம் ஞாபகம் இருக்கு. இதோட இன்னும் ஒண்டும் ஞாபகம் இருக்கு. ஆட்டம் பாட்டம் எல்லாத்திலையும் சேர்ரனான் எண்டு சொன்னனான்தானே. அதில, சில பிள்ளைகளின்ற அம்மாமார், உதவிக்கு வருவினம். இரண்டாம் வகுப்பிலயோ, மூண்டாம் வகுப்பிலயோ சிங்கள டான்ஸெல்லாம் ஆடினது லேசா ஏதோ ஒரு மூலையில் ஞாபகம் வருகுது. அந்த டான்ஸ¤க்கு முழுக்கமுழுக்க உதவியா இருந்தது 'சுனேகா' எண்ட ஒரு பிள்ளையிண்ட அம்மாதான். அவ, ஒவ்வொருத்தரிண்ட உடுப்பையும் எப்படிப்பிடிச்சு விட்டவ, எண்டெல்லாம் ஞாபகம் இருக்கண்டா பாருங்களன். அதுக்குப்பிறகு, அப்பா யேமனுக்குப்போக, ஹொஸ்டல்'ல இருக்கமாட்டனெண்டு அடம்பிடிச்சு, அழுதுகுழறி புங்குடுதீவுக்குப்போய் சேர்ந்திட்டன். அங்கயும், யேமனிலயும் இரண்டரை வருசம் இருந்தபிறகு, யாழ்ப்பாணம் 'வேம்படி மகளிர் கல்லூரியில்' ஆறாம் வகுப்பு, ஹொஸ்டலில் சேர்ந்தன். சேர்ந்து, ஆறுமாசத்தில பிரச்சினைவந்து, நிறையப்பிள்ளைகள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தவை. அதில கொஞ்சப்பேர் எங்கட வகுப்பிலயும் வந்தவை. அந்தப்பிள்ளைகளில ஒரு ஆளை எங்கயோ கண்டதுபோல இருந்துது. அவவும் என்னைப்பாத்தண்டே இருந்தா... சினிமாப்படங்களில வர்ர மாதிரி, பள்ளிக்கூடத்தில இருக்கிற ஒரு மரத்துக்குக்கீழதான், நாங்கள் கதைச்சம். 'நீர்.....' எண்டு அவ இழுக்க, நானும் முழிக்க. நல்ல ஜோக்! பிறகு, அவ என்னைப்பார்த்து, 'நீர் கொழும்பில் இருந்தனீரா?' எண்டு கேக்க, நான் ஓமெண்டு தலையாட்டீட்டு, நாங்க படிச்சபள்ளிக்கூடத்தின்ற பெயரைச்சொல்லிற்று அவவைப்பாத்தன். பிறகு அவதான், சுனேகா எண்டு எல்லாரிட்டயும் அறிமுகப்படுத்தி வச்சு, நான் இந்தியா வெளிக்கிடும்வரைக்கும் ஒண்டாத்திரிஞ்சம். பசுமை நிறைந்த நினைவுகளே Music India Online Cool Goose - mp3 |
Comments on "நட்பு - 1"