நேரமோ நேரம் - 5
நாம நேரம் சொல்லுறது இருக்கட்டும். இந்தப்பூக்கள் எல்லாம் எப்படி நேரம் கண்டுபிடிக்குது எண்டு யாருக்காவது தெரியுமா? மாலையில் விரியத்தொடங்கும் மல்லிகை, முல்லைப்பூக்கள்தான் ஞாபகத்துக்கு வருகுது. செம்பருத்தியும் இரவில லேசா விரியத்தொடங்கும். காலமை வந்து பாத்தா நல்லா விரிஞ்சு இருக்கும். ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு நேரத்தில விரியும் எண்டு உங்களுக்கெல்லாம் தெரியும். இந்தப்பூக்களையெல்லாம் வச்சு ஒரு மணிக்கூடு செய்யோணுமெண்ட யோசனை ஸ்வீடன் நாட்டு Carl Linnaeusத்தான் முதலில் வந்ததாம். அவர் முதலில ஒவ்வொரு பூவும் பூக்கிற நேரத்தைக்குறிச்சேராம். பிறகு உள்ளூரில கிடைக்கக்கூடிய, மழை-குளிர் நாட்களில கூட பூக்கக்கூடிய பூச்செடிகளை தெரிவுசெஞ்சு மணிக்கூடு வடிவத்தில நட்டேராம். கார்ல் லின்னௌஸ்க்குப்பிறகு நிறையப்பேர் இந்தமாதிரி மணிக்கூடுகளை பூங்காக்களில செய்யத்தொடங்கிச்சினமாம். நான் இதுமாதிரியான மணிக்கூட்டைப்பார்த்ததில்லை. எனக்குத்தெரிஞ்சதெல்லாம், மணிக்கூடு வடிவத்தில் பூங்காக்களில் இருக்கிற பெரிய அளவு மணித்தியால, நிமிட முள்ளுகள்கொண்ட மணிக்கூடுதான். நான் தந்திருக்கும் படத்தில் உள்ள பூக்களின் விவரம் இதோ. 6 a.m. Spotted cat's ear (opens) 7 a.m. African marigold (opens) 8 a.m. Mouse-ear hawkweed (opens) 9 a.m. Prickly sow thistle (closes) 10 a.m. Common nipplewort (closes) 11 a.m. Star-of-Bethlehem (opens) Noon Passion flower (opens) 1 p.m. Childing pink (closes) 2 p.m. Scarlet pimpernel (closes) 3 p.m. Hawkbit (closes) 4 p.m. Small bindweed (closes) 5 p.m. White water lily (closes) 6 p.m. Evening primrose (opens) |
Comments on "நேரமோ நேரம் - 5"