Sunday, November 02, 2003

நேரமோ நேரம் - 3

கால அளவு (தொடர்ச்சி...)



தமிழில் புழங்கும் கிழமைகள்பற்றி நமக்குத்தெரியும். அதாங்க. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. திருஞானசம்பந்தரோட தேவாரம் உங்களில் பலருக்குத்தெரிந்திருக்கும்.


வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

தமிழர்கள் பயன்படுத்தும் திதிகள்:

பிரதமை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, தசமி, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி, சதுர்தசி, பௌர்ணமி, அமாவாசை.
நான் ஆரம்பத்தில் சொன்னபடி, எனக்கு தெரியாத விஷயங்கள் இவை. விஷயம் தெரிந்தவர்கள், விவரமாகக்கூறினால் உதவியாக இருக்கும்.

தமிழ் மாதங்கள்:

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி

பட்சங்கள்:

கிருஷ்ண பட்சம், சுக்ல பட்சம்.

பருவங்கள்:
இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம்.

அட, நீவேற ஏம்மா வயித்தெரிச்சலைக்கொட்டிக்கற. இப்போல்லாம் இதுமாதிரியா இருக்கு. வெயில் காலம், அதிகமான வெயில்காலம், மிகவும் அதிகமான வெயில்காலம், தாங்கமுடியாத வெயில்காலம் இதுதான் இருக்குன்னு சொல்லுறீங்களா? அதுவும் சரிதான்.

Comments on "நேரமோ நேரம் - 3"

 

post a comment