Wednesday, March 24, 2004

நடந்தது என்ன? - 6

8.

திரு.இரா.முருகன் என்னுடைய மடலுக்குப் பதில் அளித்திருந்தார்.

தான் என்னோடும், போட்டி நடுவர்களோடும் பேச விரும்புவதாகக் கூறினார். போட்டி விதிமுறை குறித்த தம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவே எங்களைத் தொலைபேசுமாறு கேட்டிருப்பதாகச் சொன்னார் அவர். மட்டுறுத்துனரிடம் முன் அனுமதி வாங்கியபிறகுதான் படைப்பாளி அவருடைய படைப்புகளை வெளியிட வேண்டும் என்ற obnoxious clause பற்றி தமக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாகவும், அதைச் சொல்லவேண்டும் என்றார்.

அவ்விதி, படைப்பாளியின் மீது குவிக்கப்படும் இன்சல்ட் என்ற அவர், வெறும் ஐயாயிரம் ரூபாய்க்காக படைப்பாளி தன்னுடைய சுயமரியாதையைப் பணயம் வைக்க முடியாது என்றார். பரவலாக அறியப்பட்ட படைப்பாளிகளான நடுவர்கள் இந்த விதிமுறையை ஒத்துக்கொண்டது எப்படி என்று தெரியவில்லை என்றார் அவர்.

மேலும் தொடர்ந்த அவர், திண்ணையில் வெளியாகிய அறிவிப்பு என்னால் எழுதப் படவில்லை என்பதைத் தாம் அறிவதாகவும். அந்த அறிவிப்பில் இருக்கும் முதலாவது பத்தி "is a delibrate attack on Raayar Kaapi Klub, the primary literary group in the net which every netizen knows." என்றார்.


9. அடுத்துவந்த மடல் நடுவர் ஒருவரிடம் இருந்து வந்தது. திரு.இரா.மு. பேசவேண்டும் என்று அனுப்பிய மடலில் என்னுடைய பெயரும் இருந்ததால் இப்போட்டி பற்றிப் பேச விரும்புகிறார் என்று புரிந்துகொண்டதாகவும். திரு.இரா.மு. எதைப்பற்றிப் பேச விரும்புகிறார் என்று எனக்குத் தெரியுமா என்று கேட்டிருந்தார். என்னுடைய மடல் கிடைத்தபிறகே அவர் தொலைபேசியில் அழைத்ததாக அறிந்தேன்.


(குறிப்பு: இதற்கிடையில் நானும் குழு நண்பர்களும் விவாதித்து குறிப்பிடப்பட்ட அறிவிப்பில் அந்த விதியை மாற்றியமைத்து 'பதிவுகள்', 'திண்ணை' இணைய இதழ்களுக்கும் அனுப்பி வைத்தோம். இதற்கு பல நண்பர்கள் மரத்தடியிலும் வெளியிலும் இருந்து உதவினார்கள்.)


10.

திரு.இரா.முருகனுடன் தொலைபேசியில் பேசிய நடுவர்கள் அவர் குறிப்பிட்ட விதியை மாற்றியமைக்கும் படி எழுதினார்கள். திரு.இரா.முருகன் குறிப்பிட்ட அவமதிப்பு பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என்றும். அப்படி எதுவும் இருக்குமேயானால் அதை மரத்தடிக்குழுவினர் மாற்றியமைக்கும் படியும் நடுவர்களுள் ஒருவர் மடலிட்டார்

11.
என்னிடம் மடலனுப்பி திரு.இரா.முருகன் என்ன பேசவிரும்புகிறார் என்று கேட்ட நடுவர் அவருடன் தொலைபேசியபிறகு எழுதிய மடலில் திரு.இரா.முருகன் குறிப்பிட்ட விதியை மாற்றியமைத்து, அதை அறிவிக்குமாறு சொன்னார். அத்தோடு சீக்கிரமாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்து போட்டி சுமூகமான முறையில் நடைபெற வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.


(இதற்கிடையில் பல தொலைபேசி அழைப்புகளும், இன்னும் பல தனிப்பட்ட கடிதங்களும் பரிமாறப்பட்டன. அறிவிப்பின் முதல் பத்தியிலோ, வேறெங்குமோ எதுவும் தவறாகச் சொல்லப்படவில்லை என்று நிரூபித்தோம். அதற்கும் பல நண்பர்களை அழைத்து மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ந்து ஏதேனும் பிழையாக இருக்கிறதா என்று சொல்லும்படி கேட்டோம். தமிழில் புலமை வாய்ந்த நண்பர்களும் எதுவும் இல்லை என்று சொன்னார்கள். அதையும் போட்டியில் சம்பந்தப் பட்டவர்களுக்கு, நடுவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். இரண்டு நாட்கள் எடுத்தது, அனைவரும் 'எதுவும் தவறாக இல்லை' என்று ஒப்புக்கொள்ள...)



17.01.2004 (சனி - இரவு)

இந்தத் தனிமடல் திரு. இரா.முருகனால் திரு சி·பி வெங்கடேஷ், திரு.பா.ராகவன், திரு. இகாரஸ் பிரகாஷ் ஆகியோருக்கும் எனக்கும் அனுப்பபட்டது.

போட்டியைப் பற்றிய அறிவிப்பைப் பார்த்ததும் தான் மிகவும் சந்தோஷப்பட்டு அச்சு ஊடகத்தையும் இணையத்தையும் ஒருங்கிணைக்கும் எண்ணத்தை மரத்தடி மட்டுறுத்துனர்களிடமும் ஒருங்கிணைப்பாளரிடமும் மிகுந்த உற்சாகத்துடன் தெரிவித்ததாகவும். கட்டுரைகள் சேர்க்கப்படவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்ததாகக் கூறினார்

பிகேசிவகுமாருக்கும் எனக்கும் அதை அவர் தனிமடலாக அனுப்பியிருந்தாகவும், பிகேசிவகுமாரிடம் இருந்து வந்த பதில் பிகேஎஸ்'ஸ¤டைய அன்பையும் நேயத்தையும் காட்டியதாக இருந்தாலும் அரசாங்க வாடை வீசியதாகவும், தனியஞ்சல்களில் தான் (இரா.மு) தோழமையையும் இரா.முருகன் என்ற தவிர்க்கவொண்ணாத படைப்பாளி தகுந்த மொழியாடலையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். தான் சிவகுமார் இளைஞர் என்பதால் அந்த அரசாங்க வாடையைக் கண்டுகொள்ளாமல் கட்டுரைப் போட்டியின் அவசியத்தை மறுபடியும் மட்டுறுத்துனர்களுக்கும் சிவகுமாருக்கும் தெரிவித்ததாக எழுதி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்த திரு.இரா.மு., தான் இதற்கிடையில் திண்ணை இணையத்தளத்திற்கு சென்ற போது அங்கிருந்த போட்டி அறிவிப்பைக் கண்டு என்னடா நான் இத்தனை பிரியமாக ஒரு முக்கிய விஷயத்தை விவாதித்துக்கொண்டிருக்கிறேனே இது முடிந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாமே என்று நினைத்ததாகச் சொல்கிறார்.

அடுத்து போட்டி அறிவிப்பைப் படிக்கத் தொடங்கியது பிளட் பிரஷர் ஏறத்தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

அவ்வறிவிப்பில் இருந்த 'மரத்தடி இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இணையக் குழு'. என்ற சொல்லாடல் யாரைக்குறித்தது என்று தான் சொல்லத்தேவையில்லை என்று கூறும் திரு.இரா.முருகன், "ராயர் காப்பி கிளப் தான் இலக்கியத்தையும் கலையையும் தன் இலக்குகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு அந்தப் பாதையில் இரண்டு வருடமாக எந்த வழித்திரிவும் இல்லாமல் இயங்கி வரும் ஒரே இணைய இலக்கியக் குழு. மதி மன்னிக்க வேண்டும் - மரத்தடி, நண்பர்கள் குழுமிப் பல்வேறு விஷயங்களைப் பேசும் குழுவாகத் தானே இதுவரை அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது?அது எப்போதிலிருந்து 'இலக்கியக் குழு' ஆனது? மரத்தடி 'இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இலக்கியக் குழு' என்றால், தமிழின் முக்கியப் படைப்பாளிகள் இலக்கியத் தேடலையே பிரகடனமாக உரத்து வெளிப்படுத்தி அமைக்கப்பட்ட ராயர் காப்பி கிளப் முதியவர்களால், முதியவர்களுக்காக நடத்தப்படும் வேலையத்த குழுவா?" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், தான் போட்டியின் சட்ட திட்டங்களைத் தொடர்ந்து படித்தாகவும், கவிதைப் போட்டி என்று குறிப்பிடாமல் புதுக்கவிதைப்போட்டி என்று குறிப்பிடப்பட்டிருந்தாகவும், மரபோ, புதுசோ கவிதை கவிதைதான். அது என்ன புதுக்கவிதைக்குப் போட்டி என்றவர், மரபுக் கவிதை எழுதும் திரு.இரா.மு.வின் அன்பான நண்பர்களோடு நடந்த மோதலே அந்த ஒருதலைபட்சமான அறிவிப்புக்குப் பின்புலம் என்று புரிந்துகொண்டதாகவும் நடுவர்களில் ஒருவர், மற்றும் மட்டுறுத்துனராகிய நான் அதை எப்படிக் கண்டு கொள்ளாமல் போனேன் என்றும் எழுதி இருக்கிறார். பிகேஎஸ்'ஸ¤க்கு கிளப்பில் இருப்பவர்களோடு ஏற்பட்ட பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கல் செய்திருக்கிறார் என்றார் திரு.இரா.மு.

அதற்கடுத்த விதியப் படித்ததும் இரண்டு பிளட் பிரஷர் மாத்திரைகளை சேர்த்து விழுங்கவேண்டி இருந்ததாகவும், போட்டிக்கு அனுப்பட்ட படைப்பை பரிசு வாங்கும்வரை வேறெங்கும் அனுப்பக்கூடாது என்றும், பரிசு பெற்ற படைப்புகளை மட்டுறுத்துனர் அனுமதி வாங்கி படைப்பாளி வேறெங்கும் வெளியிட வேண்டும் என்றும் இருந்தது என்றார். "இண்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ரைட் தெரிந்த யாரும், தன்மானமிக்க எந்தப் படைப்பாளியும் இதற்கு இசையமாட்டான். கேவலம் ஐயாயிரம் ரூபாய்க்காக அடிமைச் சாசனம் எழுதித் தரச் சொல்லிக் கேட்பது
என்ன நாகரீகம்?" என்று கேட்டிருக்கிறார். (மதியின் குறிப்பு - இக்கடிதம் எழுதப்பட்ட நேரத்தில் அவ்விதி மாற்றியமைக்கப்பட்டு திண்ணையிலும் பதிவுகளிலும் திருத்திய அறிவிப்பு வெளிவந்திருந்தது)

நடுவில் வேறு விஷயங்கள் பேசிய திரு.இரா.மு, தொடர்ந்து போட்டியைப் பற்றிப் பேசியபோது, அவர் குறிப்பிட்ட ஷரத்து மாற்றப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். ஆனால், முதல் பத்தியில் விஷமம் அப்படியே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பெங்களூர் செல்லும் தாம் பிழைத்துக்கிடந்தால், அவர் திரும்பியதும் ராயர் காப்பி கிளப் கோடை-கால இலக்கிய விழா - போட்டிகளை எப்படி நடத்தவேண்டுமோ அப்படி நடத்தும் என்றும், அச்சு ஊடகத்தையும் இணையத்தையும் இணைக்கும் முயற்சியாக அது இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்த அவர் எழுதியது " சகோதரி மதியிடம் நான் வேண்டுவதெல்லாம் இதுதான் - இரா.முருகன் தான் வேண்டாம். மாலன், ஹரி, ராகவன், வெங்கடேஷ், என்று எத்தனை படைப்பாளிகள் உங்களின் ஈழத் தமிழ் இலக்கியத் தாகத்தை உணர்ந்து பாராட்டி, நேரில் சந்திக்காவிட்டாலும், படைப்பாளர் - வாசகர் என்ற வேற்றுமை எதுவும் இன்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார்கள். இவர்களில்
> யாரையாவது ஒருவரையாவது கலந்தாலோசித்து இப்படிப் பட்ட போட்டிகளை வடிவமைக்கவும், எல்லாரையும் பெருமைப்படுத்தி அழைக்கவும் முயன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மதிக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் என்பதை அறிவேன். என்றாலும் ..."

கடைசியில் மாற்றப்பட்ட போட்டி அறிவிப்பும் படைப்பாளிக்குப் பெருமை தருவதாக இல்லை என்று சொல்லும் திரு.இரா.மு. "'பெரிய பத்திரிகைகள் அளவு சன்மானம் தருவதால் ஒரு மாசம் வேறே எங்கேயும் போடக்கூடாது' என்பது இப்போதைய மினி POTA. காசு
நிறையக் கொடுக்கறோமில்லே, வந்து ஊதுய்யா; அப்புறம் காலண்டரைப் பாத்துக்கிட்டு ஒரு மாசம் பொறுமையாக் காத்துட்டு எங்க வீட்டு வாசல்லே தேவுடு காத்துக்கிட. ' என்று காருகுறிச்சி அருணாசலத்தையோ, புல்லாங்குழல் மாலியையோ மிரட்டுவது போல் இருக்கிறது."

Comments on "நடந்தது என்ன? - 6"

 

post a comment