சந்தர்ப்ப சூழ்நிலைகள்
இலங்கைக்காரர்களே கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நீர் ஏன் இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதுகிறீர்கள் என்று ஒருவர் இன்று ரமணிதரனைக் கேட்டதைப் படித்தேன்.
என்னைப்பொறுத்தமட்டில் இப்போது ரமணி செய்வது மிகவும் பயனுள்ள விஷயம். என்னால் இதுபோன்ற ஒரு விஷயத்தை செய்ய முடியாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட காரணங்கள் தவிர்த்து முக்கியமான ஒரு விஷயம். இந்தியாவில் மனித உரிமை என்பது சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பது. நான் நீட்டி முழக்கி எழுதி, அதனால் என் உற்றார் உறவினருக்கு பிரச்சினை வரக்கூடாது. வராது என்று இங்கு யாராலும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ரமணிக்கே, என் மீது வருத்தம் கோபம் இருக்கும். என்னடா, எல்லா விஷயமும் எழுதுகிறாளே. எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறாளே. இதில் மௌனசாமியாகி விடுகிறாளே என்று. நிலமை அப்படி ரமணி. என்ன செய்ய? சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரிவரும்போது பார்க்கலாம். அதுவரை, திரித்து வரும் செய்திகளைப் படிக்காமல் இருப்பதுதான், என்னால் முடிந்தது. |
Comments on "சந்தர்ப்ப சூழ்நிலைகள்"