Wednesday, March 24, 2004

நடந்தது என்ன? - 7

என்னுடைய பதிவு:

போட்டி சம்பந்தப்பட்ட அறிவிப்பை பிகேஎஸ் மரத்தடியில் அறிவித்து அடுத்த இரண்டு நாட்களும் திரு.இரா.மு. விடம் இருந்து எந்த மடலும் வரவில்லை. போட்டியின் நடுவர்கள், மற்றும் பரிசுத்தொகை, பரிசுத்தொகை கூட்டப்பட்ட அறிவிப்பு ஆகியவை வந்த பிறகே திரு.இரா.மு எங்களைத் தொடர்பு கொண்டார். எங்களுக்கு போட்டி பற்றி எழுதுவதற்கு முன்பே கிளப்பில் மரத்தடியும் கிளப்பும் சேர்ந்து போட்டி நடத்தும் என்ற மடலையும் வெளியிட்டார்.

திரு.இரா.மு. என்னுடனும் பிகேஎஸ்'ஸ¤டனும் தொடர்பு கொண்டபோது நாங்களிருவரும் அவருக்கு நன்றி கூறியும், அவருடைய கருத்துகளை முடிந்த இடத்தில் பயன்படுத்திக்கொள்வதாகவும், போட்டி அனைவருக்கும் என்று நினைத்த அவருக்கு, போட்டி மரத்தடி உறுப்பினர்களுக்கு மட்டுமே என்பதையும் சொன்னோம். கூடவே திரு.இரா.மு. விவரித்தமாதிரி பெரிய அளவில் ராயர்காப்பிகிளப் போட்டி நடாத்துவதற்கு நாங்கள் முடிந்த அளவு உதவுகிறோம் என்றும் சொன்னேன். நானும் பிகேஎஸ்'ஸ¤ம் கிளப்புடன் சேர்ந்து போட்டியை நடாத்த பணிவுடன் மறுத்தபிறகுதான் போட்டியிலும் போட்டி விதிமுறைகளிலும் திரு.இரா.மு பிழை கண்டு பிடிக்கத் தொடங்கினார்.

ஒரு "seasoned project management professional" ஆக, விதிமுறைகள் உதவிகரமாக இருக்க வகுக்கப் பட்டவையே. அவை நம்மை constrain செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது" என்று சொன்னவர் என்ன செய்தார் என்பது நான் சொல்லத்தேவையில்லை.

முதலில் தன்னைக்கலந்தாலோசிக்காமல் போட்டியை அறிவித்தோம் என்று குறைப்பட்டவர். பிறகு என்னுடைய ஈழத்தமிழ் இலக்கிய தாகத்திற்கும் மரத்தடியில் மட்டுறுத்துனராக செயல்படுவதற்கும் முடிச்சுப்போட்டார்.

> "மாலன், ஹரி, ராகவன், வெங்கடேஷ், என்று எத்தனை
> படைப்பாளிகள் உங்களின் ஈழத் தமிழ் இலக்கியத் தாகத்தை உணர்ந்து
> பாராட்டி, நேரில் சந்திக்காவிட்டாலும், படைப்பாளர் - வாசகர் என்ற
> வேற்றுமை எதுவும் இன்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார்கள். இவர்களில்
> யாரையாவது ஒருவரையாவது கலந்தாலோசித்து இப்படிப் பட்ட போட்டிகளை
> வடிவமைக்கவும், எல்லாரையும் பெருமைப்படுத்தி அழைக்கவும் முயன்றிருந்தால்
> எவ்வளவு நன்றாக இருக்கும்? "

முதலிலேயே நான் திரு.இரா.மு.விடம் போட்டி மரத்தடி குழுவினருக்கானது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டேன். மரத்தடி உறுப்பினரான திரு.பா.ராகவன் படைப்பாளி மட்டுறுத்துனரான என்னிடம் முன் அனுமதி கேட்பதான விதி நன்றாக இல்லை என்று மரத்தடியில் சொன்னார். அவரிடம் நானும் மரத்தடியிலேயே அந்த விதியை மாற்றி எழுதி இருப்பதாகவும், அது சரியா என்றும் கேட்டிருந்தேன். மிகவும் சரி என்று திரு.பாராவிடம் இருந்து பதிலும் வந்தது.

அத்தோடு 'உபயதாரர் என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்ட வார்த்தையையும் பின்வருமாறு சாடியிருந்தார். "அந்தப் படைப்பை உபயதார்களான (இந்த வார்த்தைப் பிரயோகமே தவறு. உபயதார் என்றால் கோவிலில் உண்டக்கட்டி, க்யூவில் நிற்க வைத்து நூறு மில்லி பால், இலவச வேட்டி சேலை வழங்குகிற வர்க்கம். பரிசு அளிப்பவர் என்று ஸ்பான்ஸரை மொழிபெயர்ப்பது> தான் எழுத்துக்குக் கவுரவம் அளிக்கும் செயல். நான் சொன்ன மற்றதைக்> கேட்காதபோது, இது மட்டும் கேட்கப்படுமா என்ன? அதனால் நானும் அந்தச்
> சொல்லைப் பயன்படுத்துகிறேன்)" 'உபயதாரர்' என்ற வார்த்தையை நாங்கள் எந்த அறிவிப்பிலும் உபயோகப்படுத்தவில்லை.


இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல திரு.இரா.மு. போட்டி நடுவர்களான திருமதி காஞ்சனா தாமோதரன், திரு.கோ.ராஜாராம் ஆகியோரைத் தொடர்புகொண்டார். திரு.இரா.முவின் மடலைக்கண்டதும் போட்டியின் நடுவர்களில் ஒருவர் அதை முன்னிட்டு, திரு.இரா.மு. எதைப்பற்றிப் பேசவிரும்புகிறார் என்று தெரியுமா எங்களிடம் கேட்டார். போட்டி ஒருங்கிணைப்பாளரை நன்கறிந்தவர்களானதலால் எந்தப் பிரச்சினையும் ஆகவில்லை. இதுவே வேறு யாரையாவது நாங்கள் நடுவர்களாக இருக்குமாறு அழைத்திருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

போட்டி விதிமுறைகள் பற்றி திரு.இரா.முவின் கருத்துகளைக் கேட்ட நடுவர்கள் அந்த விதிமுறைகளை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களிடம் விதிமுறைகளை மாற்றியமைத்து எல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டோம். திரு.இரா.முருகன் நடுவர்களிடன் சொன்ன இன்னொரு விஷயம் - போட்டி அறிவிப்பில் இருக்கும் முதலாவது பத்தி "is a delibrate attack on Raayar Kaapi Klub, the primary literary group in the net which every netizen knows." என்றார். அதற்கு நடுவர்கள் தங்களுக்கு குழுக்களுடன் பரிச்சயம் இல்லையென்றும், அப்படி ஏதும் இருந்திருந்தால் அதை மாற்றியமைக்கும்படியும் எங்களைக் கேட்டுக்கொண்டனர். நாங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து மரத்தடி குழுவில் இருக்கும் நன்கு தமிழ் தெரிந்தவர்களிடமும், இன்னும் சில நண்பர்களிடமும் போட்டி அறிவிப்பைப் படித்து ஏதாவது பிழையாக இருக்கிறதா என்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டோம். அப்படி ஒன்றும் இல்லை என்று எல்லாரும் சொன்னதை நடுவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அந்த முதலாவது பத்தி இதோ:


மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாகூ குழுமமும் (http://groups.yahoo.com/group/maraththadi) திண்ணை வாசகர்கள் அறிந்ததே. திண்ணை இணையதளத்தில் மரத்தடி இணையதளத்திற்கான முகவரியை இட்டு எங்களை வாழ்த்திய திண்ணை ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள். வாழ்வின்பாலும், வாழ்கின்ற சமூகத்தின்பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் குழுமம் மரத்தடியாகும். மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓர் ஆரோக்கியமான இணையக் குடும்பமாக ஆனால் விதவிதமான வண்ணங்களைப் போன்ற எண்ணங்களுடன் நாங்கள் மரத்தடியில் வாழ்ந்து வருகிறோம்.


மேலே எங்கேயாவது மரத்தடியை இலக்கியக் குழு என்று இருக்கிறதா? திரு.இரா.முருகனின் அடுத்த குற்றச்சாட்டு, மரத்தடி இலக்கியக்குழுவாக பிரகடனம் செய்திருக்கிறது என்று. அப்போதுதான் அவர், "ராயர் காப்பி கிளப் தான் இலக்கியத்தையும் கலையையும் தன் இலக்குகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு அந்தப் பாதையில் இரண்டு வருடமாக எந்த வழித்திரிவும் இல்லாமல் இயங்கி வரும் ஒரே இணைய இலக்கியக் குழு. மதி மன்னிக்க வேண்டும் - மரத்தடி, நண்பர்கள் குழுமிப் பல்வேறு விஷயங்களைப் பேசும் குழுவாகத் தானே இதுவரை அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது?அது எப்போதிலிருந்து 'இலக்கியக் குழு' ஆனது? மரத்தடி 'இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இலக்கியக் குழு' என்றால், தமிழின் முக்கியப் படைப்பாளிகள் இலக்கியத் தேடலையே பிரகடனமாக உரத்து வெளிப்படுத்தி அமைக்கப்பட்ட ராயர் காப்பி கிளப் முதியவர்களால், முதியவர்களுக்காக நடத்தப்படும் வேலையத்த குழுவா?" என்றார்.


நடந்ததனைத்தையும் இங்கே எழுதிவிட்டேன். இதுகுறித்து இனிமேல் விவாதங்களில் ஈடுபடவோ, மறுமொழிகளோ சொல்வதாக இல்லை. You can draw you own conclusions.


இந்த விஷயம் சம்பந்தமாக வலைபதிவு சுட்டிகள்.

http://sifyrayan.blogspot.com

http://mynose.blogspot.com

Comments on "நடந்தது என்ன? - 7"

 

post a comment