Tarqeq - Moon Spirit
தார்கெக் - நிலவின் ஆவி (Moon Spirit), இனுயிட் மக்கள் நம்பும் தேவதை (?). வம்சவிருத்தி, ஒழுக்கம், மிருகங்களை கட்டுப்படுத்தி நடத்துவது ஆகியவற்றை தார்கெக் பார்த்துக்கொள்வதாக இனுயிட் மக்கள் நம்புகிறார்கள். நம்மூர் கவிஞர்கள் இன்னமும் நிலவைப் பெண்ணாக உருவகித்துக் கவிபாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இனுயிட் மக்களுக்கோ தார்கெக் ஆண் வடிவம். சிறந்த வேட்டைக்காரனாகிய தார்கெக் வானத்தில் இருக்கும் நிலத்தில் வசிப்பதாக நம்புகிறார்கள். இந்தப் படத்தில் தார்கெக்கின் முகம் தெரிகிறது. முகத்தைச் சுற்றிக்காணப்படும் வெண்பரப்பு காற்றையும், அதற்கப்பால் தெரியும் வளைந்த கம்புகள் அண்டவெளி (cosmos)இன் எண்ணிக்கைகளையும், நீட்டிக்கொண்டிருக்கும் இறகுகள் வான்நட்சத்திரங்களையும் சுட்டுகிறதாம். இன்னும் நிறைய இனுயிட்கள் பற்றித்தெரிந்துகொள்ள இருக்கிறது. என்னால் ஏதாவது எழுதமுடியும் என்று வரும்போது அல்லது இனுயிட் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று உட்தூண்டல் வரும்போது மறுபடியும் எழுதுகிறேன். இப்போது தாற்காலிகமாக இனுயிட் படலம் முற்றிற்று. :) -12.29.03 ----------- அமெரிக்கப் பழங்குடியினரைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது அவர்கள் சைபீரியாவில் இருந்து, பனிக்காலத்தில் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தவர்கள் என்பது. National Geographicஇல் பார்த்துப் படித்த இவர்களைப் பற்றிய விஷயங்கள் இவர்களின் மீது ஆர்வத்தை அதிகமாக்கியது. வாசன் அவர்கள் அமெரிக்கப் பழங்குடியினர்களின் பிராந்தியத்தில் பல ஆண்டுகள் வசித்ததைக் கேள்விப்பட்டதும், நச்சரித்து எடுத்தேன். என்னுடைய அரிப்புத் தாங்காமல், ஒரு நாள் எழுதுகிறேன் என்று சொன்னார். அந்த ஒரு நாள் வந்துவிட்டது. :) அமெரிக்கப் பழங்குடியினர் பற்றித் தெரிந்துகொள்ள கொள்ளிடம் செல்வோமா? |
Comments on "Tarqeq - Moon Spirit"