படித்ததில் பிடித்தது!
நான்.... சுதந்திரம் அலையாய் என்னுள் மாற நான் குளமல்ல, அருவி சிலையாய் எனைச் செதுக்க நான் கல்லல்ல, சுயம்பு மாலையாய் எனைச்சூட நான் பூவல்ல, விண்மீன் நிழலாய் என்னுள் ஒதுங்க நான் மரமல்ல, சூரியன் நினைத்தவுடன் கட்டிக்கொள்ள நான் சேலையல்ல, தாலி தொடரவும் தீண்டவும் உருமாற நான் மேகமல்ல, வானம் ஆசைப்பட்டவுடன் அணிந்து கொள்ள சேராவிட்டாலும் திணித்துக் கொள்ள உன் விரல் மோதிரமல்ல என் ஆசைகள் வைத்துப் பூட்டவும் வசதிப்பட்டால் செலவழிக்கவும் நான் காந்தி சிரிக்கும் காகிதமல்ல, கன்னி அள்ளி முடியவும் அவிழ்த்துப் போடவும் நான் உன் சாயம் போன மயிரல்ல, மனம் என் சுதந்திரம் நீ ஒதுக்கும் பட்ஜெட் தொகையல்ல உன்னிடமிருந்து நான் பெற சிகரம் ஏறவும், சிரித்து மகிழவும் உன்னிடம் வேண்டுவது சுதந்திரமல்ல, காதல். - திலகபாமா |
Comments on "படித்ததில் பிடித்தது!"