Inuit (இனுயிட்) - 2
இனுயிட் மக்கள் நான்காயிரம்-ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து வந்து, படிப்படியாக அமெரிக்கக்கண்டம் முழுவதும் பரவினார்கள் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இதுபற்றி நிறைய விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கே தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம் http://www.civilization.ca/cmc/archeo/oracles/eskimos/12.htm ) ![]() வடதுருவம் போன்ற குளிர்ப்பிரதேசங்களில் கொல்லப்படும் மிருகங்கள் எளிதில் பழுதாவதில்லை. அதாவது, பக்டீரியாக்களும், ஆக்சிடேஷனும் நடப்பதில்லை - அப்படியே நடந்தாலும் மிகமிகக் குறைந்த அளவிலேயே நடக்கிறது. ஆக்சிடேஷன் என்று பெரிய ஆங்கில வார்த்தையெல்லாம் உபயோகித்தாலும், அர்த்தம் என்னவோ 'அழுகுதல்' என்பதுதான். அழுகுதல் இல்லாது இருந்தாலும், இனுயிட் மக்கள் தாங்கள் கொன்ற மிருகத்தை உடனேயே உண்ணுவதையே விரும்புகிறார்கள். அப்போதுதானாம், இறைச்சி மிகவும் ருசியாக இருக்குமாம். மீந்தது மிகக்குறைந்த நேரத்தில் உறைந்துவிடுகிறது. இப்படி உறைந்த இறைச்சியை Quaq என்று சொல்கிறார்கள் இனுயிட். உறைந்த இறைச்சியில் இருக்கும் நீரும், இரத்தமும் உறைந்து இறைச்சியை சப்பிச் சாப்பிடக்கூடியமாதிரி கொண்டுவருகிறது. ஐரோப்பியர் வந்து குடியேறி, நாடுகள் மாறி, கலாச்சாரங்கள் மாறி, மக்கள் இடம்பெயர்ந்து அரசாங்கங்கள் உருவானபிறகு... அரசாங்கம், பலவருடங்களாக இனுயிட் மக்களின் உணவுப்பழக்கத்தை கவலையோடு கவனித்து வந்தது. ஒரு முடிவுக்கு வந்து அரசாங்கமே, பால் பவுடரையும், அரிசி, பருப்பு தானியவகைகளையும் அனுப்பியது. இதில் பால் இனுயிட் மக்களுக்கு ஒத்துவரவில்லை. Lactose intolerentஆக இருந்தார்கள் அவர்கள். (நம்மூரில் இந்த வார்த்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. உங்களுக்கு நம்மூரில் Lactose Intolerentஆக இருப்பவர்கள் யாரையேனும் தெரியுமா? இங்கே என்னுடைய பெங்காலி தோழியின் அண்ணன் Lactose Intolerent) அரசாங்கம் அனுப்பிய உணவு, இனுயிட் மக்களுக்கு ஒத்துவரவில்லை. சுகயீனம் மிகத்தொடங்கியதால், அவர்கள் Quaqயும், உடன்-இறைச்சியையுமே சாப்பிட்டார்கள். இது தவிர, இறைச்சியை சூப், Stew செய்தும் உண்டார்கள். பல வருடங்கள் கழித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபடி, இனுயிட் மக்கள் உண்டுவந்த உடன் இறைச்சியும், Quacஉம் அவர்களுக்குத் தேவையான விட்டமின்களையும் தாது உப்புகளையும் தந்ததாம். சமைக்கும்போது அழிந்துபோகும் சத்துகளெல்லாம் இனுயிட் மக்களுக்கு கிடைத்துவந்ததாக ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்தனர். இது-தவிர, Quac உண்பவர்களுக்கு, உடலெங்கும் நிறைய வெப்பம் உண்டாக்கியதாம். கூடவே, அவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்ததாம். ஏறக்குறைய குளுக்கோஸ் சாப்பிட்டதுபோல இருக்குமென்று நினைக்கிறேன். ![]() வடதுருவத்திலிருந்து பிழைப்பிற்காக தெற்குநோக்கி வரும் இனுயிட் மக்களுக்கு நம் உணவு ஒத்துவருவதில்லை. அவர்கள் மீன், Turkey போன்றவற்றை உண்டு சீவிக்கிறார்கள். அதே சமயம், அதே பிழைப்பிற்காக வட துருவத்திற்குப்போகும் மற்றவர்கள் சீக்கிரம் இனுயிட் மக்களின் உணவிற்கு அடிமைகளாகி விடுகின்றராம். அங்கே வாழும் கிறிஸ்தவ மதபோதகர்கள், தங்களின் உடல்நலனுக்கும் நீண்ட ஆயுளுக்கும் தாங்கள் பின்பற்றும் இனுயிட் மக்களின் உணவுப்பழக்கமே காரணம் என்று சொல்கிறார்கள். |
Comments on "Inuit (இனுயிட்) - 2"