Wednesday, December 10, 2003

Mythology of Inuits


இனுயிட் மக்களிடையே வழங்கும் நம்பிக்கைகளைப்பற்றி கொஞ்சம்.

ஆட்களில்லாத தனிமை கோலோச்சும் பனிப்பிரதேசம். இந்த வெற்றுவெளியில் விவசாயம் பற்றி நினைத்தே பார்க்கமுடியாது. உணவு மிருகங்களிடமிருந்தே வரவேண்டும். அந்த மிருகங்களே இவர்களின் mythologyஇல் இடம் பெறுகின்றன. இனுயிட்களின் கதைகளில் சில சமயம் உதவி செய்யும், சிலநேரம் ஏய்த்துவிடும் அந்த மிருகங்கள் உணர்வுள்ள ஜீவன்களாகப்பார்க்கப் படுகின்றன. வேட்டையாடும்போது தான் கொன்ற மிருகத்திடம் மன்னிப்பு கேட்கிறான் இனுயிட் மனிதன். ஒரு மிருகத்தை மனிதன் வேட்டையாடுவதில்லை. அந்த மிருகம், வேட்டையாடுபவன் வந்து பிடித்துக்கொள்ள அனுமதிக்கிறது என்று நம்புகிறார்கள் இனுயிட். அதனால்தான் சில இனுயிட் மனிதர்கள், சீல் மிருகத்தை வேட்டையாடி விட்டு, அதனுடைய குடலை கடலுக்குள் திருப்பிப் போடுகிறான். அந்த சீல் திரும்பவும் பிறந்து, அதனுடைய மறுபிறப்பில் இவனிடமே வந்து சிக்குமென்று நம்புகிறார்கள்.

Inuit hunting Seal

காலநிலை, சீதோஷணம், மனிதர்களதும் மிருகங்களதும் ஷேமம் & இனப்பெருக்கம் எல்லாம் ஆவியுலகத்திலிருந்து ஆட்டுவிக்கப்படுவதாக இனுயிட் மக்கள் நம்புகிறார்கள். (இதைப்பற்றி இன்னமும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹவாய் மக்களும் ஆவிகளை ரொம்பவும் நம்புகிறார்கள். நம்மூரைப்போல இரவு பன்னிரண்டு மணிக்கு வெளியே போகக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். என்னைப்போன்ற சில பிரகஸ்பதிகளுக்கு, வீட்டிற்குப் பின்னுக்கு இருக்கும் 24 மணிநேர 'சே·ப்வே'க்கு அப்போதுதான் போகவேண்டும் என்று தோன்றும். :) தேர்வு, பேப்பர் கொடுக்கவேண்டிய நாட்களில் போய் ஏதாவது கொறிக்க வாங்கியுமிருக்கிறோம். தெருவில் ஒரு ஈ, காக்கை இருக்காது. :) ஏனைய பழங்குடி வாழ் மக்களைப் பற்றியும் தெரிந்துகொண்டபிறகு இந்த விஷயத்தில் கை வைக்க எண்ணம்.)

Extra photo'nga :)

கூட்டமாக வாழும் இனுயிட் மக்களுக்கு உதவி செய்து நல்லது நடக்க வைக்கவேண்டிய பொறுப்பு ஆவியுலப் பிரதிநிதிகளான Shamanகளில் விழுகிறது. பெரும்பாலும் ஆண்களே ஷாமன்களாக/பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். மேளத்தை தாளகதி தப்பாமல் அடித்துக்கொண்டு, ஒரு வித மயக்கநிலையில் ஆழ்ந்து ஆவிகளுடன் பேசுகிறார்கள் இந்தப் பூசாரிகள். அப்படிப்பட்ட மோன நிலையில் இருக்கும்போது பூசாரியுடைய ஆவி/உயிர் வெளியே ஆவியுலக வாசிகளோடு (Spirits) சுற்றுகிறதாம். அப்படிச்சுற்றி, எங்கே உணவு கிடைக்கும், தொலைந்து போன மான் எங்கே நிற்கிறது, எந்த ஆவி நோயாளியின் உடல்நிலையைப் பாதிக்கிறது?, நோயாளியின் திருட்டுப்போன உயிரை மீட்பது - அதன் மூலமாக ஒரு உயிரைக் காப்பாற்றுவது என்றெல்லாம் இருக்கிறது என்கிறார்கள்.

இனுயிட் பூசாரிகள், நோயாளியிடம் எண்ணிடங்காத கேள்விகள் கேட்டு, அதன்மூலம் எந்த ஆவி அவமதிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். அந்த நோயாளி உடைக்கக்கூடாத மாமிச எலும்பை உடைத்திருக்கலாம், நோயாளிக்கு ஒத்துவராத மாமிசத்தை உண்டிருக்கலாம், இல்லை அவர் புகைக்கக்கூடாத பைப்பைப் புகைத்திருக்கலாம். பெண்ணாக இருக்கும்பட்சத்தில், குழந்தைப்பிறப்பிற்கு அப்புறம் *உடனே* தலைவாரியிருக்கலாம். பூசாரி இதுபோன்று பல கேள்விகளைக் கேட்டு ஆராய்கிறார்.

Comments on "Mythology of Inuits"

 

post a comment