Mythology of Inuits - 2
இதுவரை எழுதியது: 1, 2, 3 இனுயிட் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றி இன்னும் கொஞ்சம்... இனுயிட் மக்கள் வானத்திலும், பூமிக்குக் கீழேயும் நிலம்/வாழுமிடங்கள் இருப்பதாக நம்புகிறார்கள். வானத்தில் இருக்கும் இடத்தையும், பூமிக்குக் கீழே இருக்கும் நிலத்தையும் அவ்வவிடங்களில் உலவும் சூட்சும வாயு நிர்ணயிக்கிறது என்றும் சொல்கிறார்கள். முன்பே ஓரிடத்தில் சொன்னதுபோல பிராணிகளுக்கு ஆன்மா இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதனாலேயே, பிராணிகளுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள் இனுயிட். பிராணிகளின் ஆத்மாவை விட மனிதர்களின் ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் குழப்பம் தருவனவாகவே இருக்கின்றன (வெள்ளையருக்கு. நம்முடைய நம்பிக்கைகளுக்கும் இனுயிட்களின் நம்பிக்கைகளுக்கு சில ஒற்றுமைகள் இருப்பதாக எனக்குப் படுகிறது.) மனிதர்களின் ஆத்மா சம்பந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என்று சொன்னேனில்லையா. உதாரணத்து ஒரு விஷயத்தைப் பார்ப்போம். ஒரு இனுயிட் மனிதன் எப்படி இறந்துபோகிறான் என்பதைப்பொறுத்து, அவனுடைய ஆவியில் ஒரு பகுதி ஜென்மஜென்மத்துக்கு வானத்தில் இருக்கும் வாழுமிடத்தையோ, பூமிக்குக் கீழே இருக்கும் வாழுமிடத்தையோ அடைகிறது. அங்கிருந்து அந்த உயிரின் பகுதி வெளியேறவே வெளியேறாது. இறந்தவரின் ஆத்மாவில் மீதிப்பங்கு, இறந்தவரின் குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அடைகிறதாம். இதனாலேயே, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சமீபத்தில் இறந்துபோன உறவினரின் பெயரை வைக்கிறார்கள். இப்படிப் பெயர் வைத்தால், இறந்தவரின் நல்ல குணங்கள் குழந்தைக்கும் வரும் என்று நம்புகிறார்கள். இதுவரை கூறியதில் எதெல்லாம் நம்முடைய கலாச்சாரத்துக்கும் நம்பிக்கைகளோடும் ஒத்துப்போகிறது என்று சொல்லுங்கள். நான் அடுத்த பகுதியோடு வருகிறேன். |
Comments on "Mythology of Inuits - 2"