வசந்தகாலம்
இந்த ஒரு வாரத்தில் எத்தனை மாறுதல்கள். போன ஞாயிற்றுக்கிழமை சுள்ளித்தடி போல நிண்டண்டு இருந்த செடிகள் எல்லாம் துளிர்த்து ஏழெட்டு இலைகள் எண்டு வந்திற்றுது. எந்தப்பக்கம் திரும்பினாலும் எல்லாம் வெள்ளப்பச்சை நிறச் செடிகள் தெரியுது. உயிரே இல்லை எண்டதுபோல நிண்டண்டு இருந்த மரங்களில் எல்லாம் மொட்டந்தலையில் மயிர் வளருவதைப் போல பச்சை வண்ணங்கள். போன கிழமை இதே ஞாயிற்றுக்கிழமை சும்மா கிடந்த மண்தரையெல்லாம் பச்சைக்கம்பளம் விரிச்சது போல கிடக்கு. அதுவும் நூலகத்திற்குப் போற வழியில் மஞ்சள் வண்ண காட்டுப்பூக்கள். அதைப்பாக்கேக்க வர்ர சந்தோஷம் சொல்ல ஏலாது.
அடுத்த கிழமை பார்த்தா, மரமெல்லாம் பழையமாதிரி இருக்கும். எப்பிடி இந்த மரம், செடி கொடியெல்லாம் கடகட எண்டு வளருது எண்டு தெரியேல்லை. சூரிய வெளிச்சம் சில மாதங்களே இருக்கிறபடியா, அதைப் பயன்படுத்தோணும் எண்டு செடிகொடிகளுக்குத் தெரியுதா? சூரிய வெளிச்சத்தில மற்ற இடங்களைத்தவிர வேற ஏதாவது இருக்கா? என்ன மந்திரமாயமோ தெரியாது. ஆனா வடிவாயிருக்கு. |
Comments on "வசந்தகாலம்"