Tuesday, May 04, 2004

நிமிர்வு

(சு.வில்வரத்தினம்)



விழித்திரு
இன்றையத் தியான அமர்வில்
எல்லையின்மை
தன்குரலை
ஓங்கிமுரசறையலாம்.



உயர்மலையின்
சமிக்ஞை வாங்கியாய்
அகம் திறந்திரு
பிரபஞ்சப் பேருணர்வின்
மீட்டல் நிகழலாம்.



எய்தும் பெரும்பிறப்பில்
சிறுமை கழன்று
உதிர
எழுந்துநில்
செயலாண்மை பொதியநட
நிமிர்வின்
செங்கோன்மை நினதாகலாம்.



இதோ
நிமிர்வின் தேவபாட்டையில்
உன்பின்னால்
ஆயிரம் காலடிகள் சப்திக்காமல்.



(குறிப்பு: தன்முயற்சியில் சற்றும் தளராமல் நடக்கும் என் நண்பனுக்காக இந்தக் கவிதையை இங்கிடுகிறேன்.)

Comments on "நிமிர்வு"

 

post a comment