Thursday, June 10, 2004

சு.வில்வரத்தினம் குரல்பதிவுஓ! வண்டிக்காரா!


ஓ...ஓ...வண்டிக்காரா
ஓட்டு வண்டியை ஓட்டு
போவோம் புதிய நகரம் நோக்கி
பொழுது போம் முன்னோட்டு

ஓ...ஓ...வண்டிக்காரா

காவில் பூவில் கழனிகளெங்கும்
காதல் தோயும் பாட்டு
நாமும் நமது பயணம் தொலைய
நடந்து செல்வோம் கூட்டு.

ஓ...ஓ...வண்டிக்காரா

பனியின் விழிநீர்த் துயரத் திரையில்
பாதை மறையும் முன்னே
பிணியில் தோயும் நிலவின் நிழல் நம்
பின்னால் தொடரும் முன்னே...

ஓ...ஓ...வண்டிக்காரா

(நீலாவணன்)

மார்கழிக்குமரி

மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்
புனிநனை தென்றல் முனைபடத் தளிரின்
கனவுகள் அதிரும், காதலின் இறுக்கத்
தேவைகள் மலர்ந்து ஆசையில் நடுங்கத்
தாதினைத் தள்ளும் போதுகள் நடுவே
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

ஆழியின் அலைகள் கீழிழுத் தடங்க
தோளினில் சுமந்த பாயொடு கலங்கள்
ஊர்மனை நடுவே உறங்கிய வாவி
நீர்விடு மூச்சாய் நெளிதரு தரங்கம்
நாரைகள் கரையில் நாட்டிய தவமும்
சீரெனக் கொண்டு மார்கழிக் கோதாய்
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

ஏரொடு முன்னர் இயற்றிய புணர்வு
சூல்தர வயலில் வேல்முனைக் கதிர்கள்
அறுவடை புரியும் பறவைகள் திகில
வெருளிகள் புரியும் அபரித நடனம்
நுளம்புகள் மலிந்து வலம்புரி ஊத
புலன்சிறு உயிரும் வலம்வர மகிழ்ந்து
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

விளக்கிய முற்ற ஒளித்தரை மீதில்
பளிச்செனக் கோல வெளிச்சங்கள் தூய,
பாவையர் பாடும் "பாவையின" கீதம்
ஆலயமணியின் ஓசையில் தோய
வையகம் எங்கும் ஐயனின் பாதம்
கொய்மலர் என்றோ குனிந்தது சூட
மையிருள் அகற்றும் தைவழி நோக்கி
மார்கழிக் குமரி கார்முகச் செல்வி
ஊர்களி கொள்ள உலாவரு கின்றாய்!

- மு.பொன்னம்பலம்
(காலி லீலை, பங்குனி 1997)


தைப்பாவைப்பாடல்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

தைப்பாவாய் தைப்பாவாய்
வாசலில் வந்தாள் தமிழ்ப்பாவாய்
தீபங்கள் ஏந்திய கைப்பாவாய்
தென்றலென வந்தாள் தேன்பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

மார்கழிப் பெண்ணுக்கு இளம்பாவாய்
மாதங்கட்கெல்லாம் தலைப்பாவாய்
தேரினில் ஏறிய தென்பாவாய்
ஊர்வலம் வாராய் ஒளிப்பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

சூரியதேவன் சுடர்ப்பாவாய்
சுந்தரவதனச் செம்பாவாய்
ஏருழவர் கை உழைப்பாவாய்
ஏழை எளியவர்க்கு இன் பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

அன்பென்று கொட்டு முரசாவாய்
அனைவர்க்கும் வாழ்வு என்றறைவாய்
இன்புறப் புல்லாங் குழலிசைப்பாய்
இனிய தமிழ்க்காதல் யாழிசைப்பாய்


தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

பொன்யுக வாசல் திறந்ததென்று
கொம்பெடுத்தூதடி எம்பாவாய்
சங்கு முழங்கடி எம்பாவாய்
சங்கடம் தீர்ந்திட கைகோர்ப்பாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை


கூத்துப் போடடி பெண்பாவாய்
பறைகொட்டி முழங்கடி எம்பாவாய்
தக்கத் திமிதிமி தக்கத் திமியென
நர்த்தனம் ஆடடி பொற்பாவாய்


தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

போற்றி பாடடி பொன்பாவாய்
புதுயுகத்தின் பொங்கல் ப10ம்பாவாய்
ஆற்றுகலைகள் அத்தனையும் பொங்க
ஆனந்தக் கும்மி அடி பாவாய்

தைதைதை தகதிமி தைதைதை
தைதைதை தகதிமி தைதைதை

சு.வில்வரத்தினம்
தைப்பொங்கல் -2004


Wednesday, June 09, 2004

this is an audio post - click to play
this is an audio post - click to play
this is an audio post - click to play
this is an audio post - click to play
this is an audio post - click to play

Monday, June 07, 2004

குரல் வலைப்பதிவு வெள்ளோட்டம்

this is an audio post - click to play


Saturday, June 05, 2004

Tiananmen Square — June 5, 1989

The Unknown Rebel - By PICO IYER

Almost nobody knew his name. Nobody outside his immediate neighborhood had read his words or heard him speak. Nobody knows what happened to him even one hour after his moment in the world's living rooms. But the man who stood before a column of tanks near Tiananmen Square — June 5, 1989 — may have impressed his image on the global memory more vividly, more intimately than even Sun Yat-sen did. Almost certainly he was seen in his moment of self-transcendence by more people than ever laid eyes on Winston Churchill, Albert Einstein and James Joyce combined.

The meaning of his moment — it was no more than that — was instantly decipherable in any tongue, to any age: even the billions who cannot read and those who have never heard of Mao Zedong could follow what the "tank man" did. A small, unexceptional figure in slacks and white shirt, carrying what looks to be his shopping, posts himself before an approaching tank, with a line of 17 more tanks behind it. The tank swerves right; he, to
block it, moves left. The tank swerves left; he moves right. Then this anonymous bystander clambers up onto the vehicle of war and says something to its driver, which comes down to us as: "Why are you here? My city is in chaos because of you." One lone Everyman standing up to machinery, to force, to all the massed weight of the People's Republic — the largest nation in the world, comprising more than 1 billion people — while its all powerful leaders remain, as ever, in hiding somewhere within the bowels of the Great Hall of the People.


தொடர்ந்து வாசிக்க

Friday, June 04, 2004

C-Difficile

நம்ம ஊர்ல காய்ச்சல், இருமல் என்று மருத்துவரைப் பார்க்கப்போனால், கட்டாயம் ஆன்டிபையோடிக் மருந்து உட்கொள்ளுமாறு எழுதித் தருவார். நாமளும் வேளை தவறாம முழுங்குவோம். கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடிதான், எப்ப பார்த்தாலும் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளக்கூடாது என்று தெரிந்துகொண்டேன்.

போன வருடம் கனடா, குறிப்பிட்டுச் சொல்லப்போனால் டொராண்டோ நகரம் சார்ஸ் கிருமித் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தது. சார்ஸ் கிருமித் தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் Clostridium Difficile(C-Difficile) என்ற பாக்டீரியாவின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்திருக்கிறார்கள். மான்ரியல் நகரில் இருக்கும் பன்னிரண்டு மருத்துவமனைகளிலும் இந்த பாக்டீரியா தன் கைவரிசையைக் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. கடந்த வருடம் ராயல் விக்டோரியா மருத்துவமனையில் மட்டும் 51 பேர் இறந்துபோனார்கள்.

ஆன்டிபையோடிக் மருந்துகளை உட்கொள்ளும், மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளிகளை C-Difficile பாக்டீரியா தாக்குகிறது. முதலில் வயிற்றுப்போக்குடன் ஆரம்பித்து, ரத்தப்போக்கு ஆகி மரணத்தில் முடிவடைகிறதாம். நீண்ட காலம், உடலில் மேற்பகுதியில் வசிக்கக்கூடிய இந்த பக்டீரியா, பெரும்பாலான ஆன்டிபையோடிக் மருந்துகளுக்கு அடங்கவில்லை. இந்த C-Difficile பக்டீரியா ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றக்கூடியது என்றும் சொல்கிறார்கள். படுக்கை வசதிகள் இல்லாதபடியால் இந்த பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் தனியறைகளில் பராமரிக்கப்படவில்லை. முடிந்தவரை, சிலர் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த உயிர்கொல்லி நோயிடம் இருந்து பிழைத்தாலும், கிருமியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றை நீக்கவேண்டி இருக்கிறதாம்.

மான்ரியல் மட்டுமல்ல, Calgary நகரிலும் இந்த பக்டீரியா கிருமி இருப்பதாக சந்தேகிக்கிறார்கள். ஆயினும், மான்ரியல் போல பாக்டீரியா மோசமான விளைவுகளைக் கொண்டு வரவில்லை என்று தெரிகிறது.

இன்னமும் இந்தக் கிருமி பற்றி பொதுமக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொசுறுச் செய்தி :
"There are several jurisdictions in the United States
that are actually either considering or have passed legislation that would
require hospitals to publicize their infection rates and their success rates for different kinds of surgery."

நன்றி:
1. CBC Montreal

2.Health Canada

Thursday, June 03, 2004

என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க?ஜூன் முதலாம் தேதியில் இருந்து டொராண்டோவில் பார்கள், காஸினோக்கள் ஆகிய இடங்களில் புகைபிடிக்ககூடாது என்ற சட்டம் அமுலுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. 2001ஆம் ஆண்டே உணவு விடுதிகள், பௌலிங் மையங்கள் ஆகிய இடங்களில் புகைபிடிக்கக்கூடாது என்று சட்டமியற்றி இருக்கிறார்களாம். இங்கெ மான்ரியலிலும் அலுவலகங்கள், பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற சட்டமிருந்தாலும் Second hand smoke பலருக்கும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.


மனிடோபா
வில் அக்டோபர் 2004இல் இருந்து பொது இடங்களில் புகைப்பிடிக்கக்கூடாது என்ற சட்டம் வருவதுபோல, இங்கும் வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாருங்க இன்று படித்த ஒரு செய்தி, என்னப்பா நடக்குது என்று நினைக்க வைத்துவிட்டது. கனடா என்றாலே மேப்பிள் இலையோடு கூடிய இந்நாட்டுக்கொடி ஞாபகத்துக்கு வரும். மேப்பிள் சிரப் இங்கே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பான் கேக், சாக்கலேட் என்றெல்லாம் கோலோச்சிக்கொண்டிருந்த மேப்பிள் சிரப் ருசி, வருங்காலத்தில் சிகரெட்டிலும் வரும். சூயிங்கம்' என்ன ருசியில் வாங்கலாம் என்று பார்ப்பதுபோல சாக்கலேட்'ஆ, ஆல்கஹோல்'ஆ, மேப்பிள் சிரப்பா என்று பார்த்து வாங்குவார்கள். கனேடிய விஞ்ஞானிகள், அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

என்னங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க?

Tuesday, June 01, 2004

'Grey Nuns' டு Concordia

மான்ரியலை "City of a Hundred Bells" என்று சொல்வார்கள். அது கொஞ்சமும் மிகையில்லை. இங்கே சந்திக்குச் சந்தி தேவாலயங்கள் இருக்கின்றன. மிகவும் அழகானவையும் கூட. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளாக மக்களுடைய மனோபாவம் மாறிக்கொண்டு வருவதை காலியாக இருக்கும் இந்த தேவாலயங்கள் நிரூபிக்கின்றன. சில தேவாலயங்களை, அவற்றின் நிலத்திற்காக வாங்குகிறார்கள். சிலவற்றை கிழக்கு ஐரோப்பியர்களும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்களும் வாங்குகிறார்கள். சமீபத்தில் ஒரு தேவாலயத்தை சீக்கிய இனத்தவர்கள் வாங்கி இருக்கிறார்கள்.


இன்றும் ஒரு தேவாலயமும், அதைச் சுற்றி சில கட்டடங்களும் மரஞ்செடி கொடி நிறைந்த நிலமும் விற்கப்பட்டது. விற்றது 'Grey Nuns' என்றழைக்கப்படும் 'The Sisters of Charity'. வாங்கியது Concordia பல்கலைக்கழகம். பதினெட்டு மில்லியன் கனேடியன் டாலர் கைமாறியது. 1737இல் Marguerite d'Youville என்ற விதவைப்பெண்மணியால் தொடங்கப்பட்ட இந்த 'Grey Nuns' பற்றி ஒரு சொலவடை இருக்கிறது. 'Seek out the Grey Nuns and they will refuse you nothing.'


நகரின் மையப்பகுதியில் இருக்கும் இந்த இடத்தில் ஒரு காலத்தில் ஆயிரம் பேர் இருந்தார்கள். இப்பொழுது இருப்பதோ 250 பேர். அதிலும் பலர் அவர்களின் 80களில் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே, கொன்கோர்டியா பல்கலைக்கழகம் இன்னும் மூன்றாண்டுகளுக்கு எதுவும் செய்யாது. அதற்குப்பிறகும் படிப்படியாகவே வேலைகள் நடக்கும் என்று சொல்கிறார்கள். 2022இல் கொன்கோடியாவின் நுண்கலைப் பிரிவும், சினிமாத்துறையும் இங்கே இருந்து இயங்குமெனத் தெரிகிறது. வெளியே எந்தவித மாற்றமும் செய்யாமல், உள்ளே மட்டுமே மாற்றங்கள் செய்யப்படுமாம்.

concordia_nuns.jpg

நீங்கள் படத்தில் காண்பது, Grey Nunsஇன் தேவாலயம். இந்தக் கட்டடம், கண்காட்சிக்கூடமாகச் செயல்படுமென்று தெரிகிறது. அதற்கிடையில், Grey Nuns தேவாலயத்தில் இப்போது இருக்கும் St. Marguerite d'Youvillleஇன் crypt(தமிழில் எப்படிச் சொல்வது?)உம், தேவாலயத்தின் கீழே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் 245 nunகளும் வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். வேம்படியில், முன்பு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன என்று சொல்லி எல்லோரும் பயந்து, மற்றவர்களையும் பயமுறுத்தியதுதான் ஞாபகம் வருகிறது.