Wednesday, March 31, 2004

கோழிக்கதை


A hen and five of her chicks march at the base of the stairs of the Historic County Building in Lihu'e on Kaua'i.



A hen and a pair of chicks wander in the parking lot at the state office building on Kaua'i. It is legal to catch chickens in residential areas, but not on state land, where chickens are considered wild birds.


"They strut around with ... the self-assured swagger of high-end fashion models," said Chris Welch, a Minneapolis Star-Tribune Reporter and recent Kaua'i visitor

நீங்க யாராவது கோழி அடை காத்து குஞ்சு பொரிக்கிறதைப் பார்த்திருக்கிறீங்களா? நான் பார்த்திருக்கிறன். இரண்டு மூண்டு தரம். கோழி முட்டை இட்டோடன, அதைப் பொறுக்கியும் இருக்கிறன். மாட்டுமாலிலதான் எங்கட வீட்டுக்கோழிகள் முட்டை இடுகிறது. சில விசர்க்கோழிகள் வீட்டுக்குள்ள வந்து அரிசி மூட்டைகளும் அப்பாவின்ற புத்தகங்களும் அடுக்கி இருக்கிற மூலை அறையில அரிசி மூட்டைக்குப் பக்கத்திலையும் முட்டை இடும். கோழி முட்டை ஈரமா இருக்கும் எண்டு முதலில் அருவருப்புப் பட்ட எனக்கு முட்டைக்கோது காய்ஞ்சு போயிருந்தது பெரிய ஆச்சரியமா இருந்தது.

எல்லாக்கோழியையும் அடை காக்க விட மாட்டீனம். கோழியை அடை காக்க வைக்கிறது எண்டு முடிவு செஞ்சிற்றா, ஒரு கடகத்திலை, வைக்கோல் கிடைச்சா அதை நிரப்புவினம். வைக்கோல் இல்லையெண்டா சாக்கைப் போடுவினம். அதுக்குப் பிறகு ஒரு பதினைஞ்சு இருவது கோழி முட்டைகளையும் அதில வைப்பினம். கூடுதலாய் அந்த மூலை அறைலதான் வைப்பினம். இதுக்காகவே காத்துக்கொண்டிருந்த கோழி தாவிப்போய் உக்காரும். கோழி அடைகாக்கேக்க, எங்கயாவது வெளில போகும். எப்பயாவதுதான். அப்ப பார்த்து முட்டையைத் தொடப்போவம். ஆனா, அம்மாம்மா நிப்பாட்டிப்போடுவா. கோழி அடைகாக்கேக்க முட்டையைத் தொடக்கூடாதாம். முட்டை கூழாகிப்போகுமாம்.

தொடர்ந்து படிக்க - http://groups.yahoo.com/group/Maraththadi/message/13695


Tuesday, March 30, 2004

Welcome to L.A.

Monday, March 29, 2004

படித்ததில் பிடித்தது - 'துணையெழுத்து' எஸ்.ராமகிருஷ்ணன்

இன்றைக்குப் படித்ததில் பிடித்தது, ஆனந்த விகடனில் 'துணையெழுத்து' தொடரில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருப்பது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நன்றி: விகடன், எஸ்.ராமகிருஷ்ணன்

சொல்லாத சொல்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிராகாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, வயதான பெண்மணி ஒருவர் தன்னோடு வந்திருந்த கணவரைத் திட்டிக்கொண்டிருந்தது கேட்டது.

‘‘உங்ககூடப் பேசிப்பேசி என் உதடே தேய்ஞ்சு போச்சு.வயசாயிருச்சின்னா பேச்சைக் குறைச்சிரணும். உங்களுக்கு அது முடியாது. சாப்பாட்டிலே உப்பைக் குறைக்கச் சொன்னது மாதிரி, டாக்டர்தான் உங்களுக்கெல்லாம் பேச்சையும் குறைக்கச் சொல்லணும். நான் சொன்னா ஏறுமா?’’

ஒரு குழந்தையைப் போல முதியவர் தலையாட்டிக் கொண்டிருந்தார். பிராகாரத்தில் பேசிக்கொண்டிருந்த சில வயதானவர்கள் சட்டென நிசப்தமானார்கள். வயதானபோது தான் பேசும் ஆசை அதிகமாகிறது போலும். பூங்காவில், ரயில்நிலைய பெஞ்சில், கடற்கரையில் என எல்லா இடங்களிலும் முதியவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். பேசிக்கொள்வதற்காகவே ஒருவரையருவர் சந்திக்கிறார்கள். பேசிக்கொள்ள யாருமற்ற நேரங்களில் தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கும் வயசாளிகளைக்கூட காண முடிகிறது.

பேச்சின் மீது ஏன் இத்தனை பிடிப்பு? பேச்சைப் போல தீராத ருசியுடையது வேறு ஏதேனும் இருக்கிறதா என்ன?

பேச்சுதான் நட்பை, உறவை, காதலை, பகையை, குரோதத்தை அகந்தையை, அறிவை என யாவையும் உருவாக்குகிறது.

வற்றாத ஒரு ஜீவநதியைப் போல பேச்சு உலகமெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்றரை வயதில் குழந்தை பேசக் கற்றுக்கொள்ளத் துவங்குகிறது. அர்த்தமற்ற சத்தங்களாக மொழி அதனுள் சுரக்கிறது. அந்த நாட்களில் குழந்தை வாய் ஓயாமல் எதையாவது சத்தமிட்டபடியே இருக்கும். கவனித்திருக்கிறீர்களா?

ஒன்றரை வயதில் குழந்தை பேசத் துவங்குவது நமக்குத் தெரியும். எந்த வயதில் பேச்சைக் குறைத்துக் கொள்வது என்று ஏதேனும் வரையறையிருக்கிறதா என்ன? எழுதப்படாத ஒரு விதியைப் போல வயதானால் பேச்சைக் குறைந்துகொள்ள வேண்டும் என்று சகலரும் சொல்கிறார்கள். முதுமையானதும் தோற்றம் கனிவடைந்துவிடுகிறது. அதுபோல பேச்சும் கனிந்து ருசியாகி விடுமல்லவா.. பின் ஏன் பேச்சை குறைக்க வேண்டும்?

ஆனால், உலகின் நியதி அதற்கு மாறாக உள்ளது. அது வேறு காரணங்களைச் சொல்கிறது. குழந்தையிலிருந்து எப்படி ஒவ்வொரு சுவையாக, ருசிக்கக் கற்றுக்கொள் கிறோமோ.. அதுபோல மூப்படையத் துவங்கும்போது ஒவ்வொரு சுவையிலிருந்தும் விடுபட வேண்டியிருக் கிறது. இனிப்பு உப்பிலிருந்து விடுபடு வதற்கே தினந்தினம் வயதானவர்கள் போராடிக் கொண் டிருக்கும்போது, பேச்சை விடுவ தென்பது எளிதானதா என்ன?

பாஷை மனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு. தண்ணீர் எப்படி பனியாகவும், காற்றாகவும், தண்ணீராகவும் மூன்று நிலைகளில் இருக்கிறதோ அப்படியே பேச்சும் உறைந்தும், மௌனமாகியும்,சலசலத்து ஓடியும் மூன்று நிலையிலிருக்கிறது.

எனது வாசகர்களில் ஒருவரான சிவசுவின் ஊரான பாபநாசத்துக்கு ஒரு முறை போயிருந்தேன். அவரது குடும்பமே ஆசிரியர்கள். எதையும் குடும்பமே கூடிப் பேசி விவாதித்துத்தான் முடிவுசெய்வார்கள். அது சமையல் செய்வதாகயிருந்தாலும் சரி, திருமண விஷயமாகயிருந்தாலும் சரி. நான் சந்திக்கும் நாட்களில் பேச்சு இலக்கியத்தில் துவங்கி சினிமா, நாட்டுநடப்பு என எங்கெங்கோ சுற்றி முடிவடையும்போது இரவு கடந்து விடிகாலை பிறந்து கொண்டிருக்கும். சிவசுவின் வீட்டில் ஒரு முரணை காண முடிந்தது. அவனது அம்மாவும் அப்பாவும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். 'பேசி பத்து வருடத்துக்கும் மேலாகிவிட்டது' என்றார் சிவசு.

ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிற இருவர் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்வதில்லை என்பது வியப்பாக இருந்தது. ஆனால், வீட்டில் இருந்தவர்கள் அதை மிகவும் எளிதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களே. கடந்தகாலக் கதையை சிவசு நேற்று நடந்தது போல விவரித்தார். பத்து வருடத்தின் முன்புவரை அம்மாவைக் கேட்காமல் அப்பா ஒரு காரியம்கூட செய்யமாட்டார். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். ஆறேழு குழந்தைகள். பெரியவர்கள் சாப்பாட்டுக்கே பிரச்னை. கஷ்டஜீவனம். அம்மா எப்படியோ வருமானத்துக்குள்வீட்டை கொண்டு செலுத்திக் கொண்டிருந்தாள்.

ஒருநாள் சாமிக்குக் காணிக்கையாக வைத்திருந்த பணத்தை யாரோ எடுத்து செலவழித்துவிட்டார்கள் என்று தாத்தா கத்தி கூப்பாடு போட்டார். யாரும் எடுக்கவில்லை என்றார்கள். விசாரணை நடந்தது. அம்மா அன்று வந்த புடவைக்காரனிடம் புதுப்புடவை வாங்கியிருக்கிறாள், புடவை பெட்டியிலிருந்து சாட்சியாக எடுக்கப்பட்டிருந்தது. அவளை விசாரிக்கச் சொல்லி தாத்தா கத்தினார். இத்தனை களேபரத்துக்கு இடையிலும் அம்மா அமைதியாக இருந்தாள். முடிவாக அப்பா அவளை பூஜையறைக்கு வரச்சொல்லி ஒரேயரு வார்த்தை கேட்டார்.

‘நீ பணத்தை எடுத்துப் புடவை வாங்கினாயா?’

அம்மாவால் அதைத் தாங்க முடியவேயில்லை. சட்டென எரிந்து கொண்டிருந்த விளக்கில் கையை நீட்டி சத்தியம் செய்தபடி 'புடவை வாங்கினது நிஜம். ஆனால், காணிக்கைப் பணத்தைப் பற்றி எனக்குத் தெரியாது' என்றாள். அப்பா ஆத்திரமாகி அவளுக்கு ஒரு அறை கொடுத்தார். அம்மா அழவேயில்லை. கையை விளக்கில்காட்டிக் கொண்டேயிருந்ததால் சூடுபட்டு கொப்பளமாகியது.

அன்றிரவு அந்தக் காணிக்கை பணத்தைத் தாத்தாவே குளியல் இடத்தில் கைமறந்து போட்டிருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அம்மா கடன் சொல்லிப் பாட்டியின் திவசத்துக்காகத்தான் புடவை வாங்கியிருக்கிறாள் என்பதை அப்பாவே கண்டுபிடித்து அவளிடம் மன்னிப்புகேட்டார். ஆனால், 'மனுஷாள் மேல நம்பிக்கை போனபிறகு எதுக்குப் பேச்சு?' என அம்மா அப்பாவோடு மட்டும் பேச மறுத்துவிட்டாள். 'நாங்களும் அது சரிதான்னுவிட்டுட்டோம்' என்றான்.

பேச்சை கற்றுக்கொள்வதைப் போல மௌனத்தை எளிதில் கற்றுக்கொண்டுவிட முடியாது. பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான் மௌனம்.

குளத்தில் மூழ்கிக்கிடக்கும் கற்களைப் போல சொற்கள் மனதில் அமிழ்ந்து கிடக்கின்றன. மௌனியாக இருந்தால் நீர்ப்பூச்சிகள் தண்ணீரில் நடந்து அலைவது போல உலகின் எல்லாக் காட்சிகளும் மனதின் மேல் தட்டில் ஊர்ந்து கடந்துவிடுகின்றன. மனம் சலனம் கொள்வதில்லை. அன்று சிவசுவின் வீட்டில் நான் மகாபாரதத்திலிருந்து இருவரைப் பற்றி சொன்னேன்.

மகாபாரதத்தில் விதுரன் வயதாகி துறவறம் மேற்கொள்கிறான். இமயமலையின் யாருமற்ற பிரதேசத்தில் நிர்வாணியாக மௌனமாகத் திரிந்தான். தன்னையறியாமல் நாவு அசைந்து பேச்சு பிறந்துவிடக்கூடும் என்பதற்காக நாவின் அடியில் கூழாங்கற்களை ஒதுக்கி வைத்திருந்தான். இதனால் நாவு அசையவே அசையாது. வாழ்நாள் முழுவதும் அரசகுடும்பத்துக்காக ஆயிரம் யோசனை சொன்ன விதுரனின் நாவுகூட என்றோ ஒரு நாளில் கூழாங்கற்களால் அடங்கிவிடுகிறது.

ஆனால், பிறந்தது முதல் தேசத்துக்காகப் பாடுபட்டு, நித்ய பிரம்மசாரியாக தனிமையில் மௌனமாக வாழ்ந்த பிதாமகர் பீஷ்மரோ யுத்தத்தில் காயம்பட்டு அம்புபடுக்கையில் படுத்த பிறகுஎதை எதையோ பேசிக் கொண்டேயிருக்கிறார். தன்னைச் சந்திக்கும் கர்ணன், ஸ்ரீகிருஷ்ணன், யுதிஷ்ட்ரன் என யாவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்லியபடியே இருக்கிறார். பீஷ்மரே வாழ்நாளின் கடைசியில் பேச்சைத்தான் துணைக்கு கொள்கிறார். உலகம் இப்படித்தானிருக்கிறது என்றேன்.

சட்டென சிவசுவின் அம்மா ஒரு பழமொழியைச் சொன்னார் ‘உதடு தேய்வதை விடவும் உள்ளங்கால் தேயலாம்.’ அதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்டதும் ஒவ்வொரு வேலை யையும் 'அடுத்தவரை வேலை செய்யச் சொல்லி ஏவிக்கொண்டே இருந்துஉதடு தேய்வதைவிடவும், தானே ஓடியாடி வேலை செய்து உள்ளங்கால் தேய்வது நல்லது' என்றார்.

ஒளவை மட்டுமே பெண்கவியல்ல, எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்நாளில் கண்டறிந்த உண்மையைத் தான் பழமொழியாக்கியிருக்கிறார்கள். ஊர் திரும்பும்போது சிவசுவிடம் அவனது அம்மா 'ஒரு யோகியை விடவும் பலமானவள்' என்று சொன்னேன். அவர் புரிந்தது போல தலையாட்டினார். ஒரு சொல் என்பது அஸ்திரத்தைவிடக் கடுமையானது என்று உணர்ந்திருக்கிறோமா? முறிந்த முள்ளைப் போல மனதில் புரையோடிக் கிடந்த சொற்கள் நினைவு வரத்துவங்கின. வீட்டை நெருங்கும்போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சொல்லின் வலி சொல்லால் வெளிப்படுத்தப்பட முடியாதது.

Wednesday, March 24, 2004

நடந்தது என்ன? - 7

என்னுடைய பதிவு:

போட்டி சம்பந்தப்பட்ட அறிவிப்பை பிகேஎஸ் மரத்தடியில் அறிவித்து அடுத்த இரண்டு நாட்களும் திரு.இரா.மு. விடம் இருந்து எந்த மடலும் வரவில்லை. போட்டியின் நடுவர்கள், மற்றும் பரிசுத்தொகை, பரிசுத்தொகை கூட்டப்பட்ட அறிவிப்பு ஆகியவை வந்த பிறகே திரு.இரா.மு எங்களைத் தொடர்பு கொண்டார். எங்களுக்கு போட்டி பற்றி எழுதுவதற்கு முன்பே கிளப்பில் மரத்தடியும் கிளப்பும் சேர்ந்து போட்டி நடத்தும் என்ற மடலையும் வெளியிட்டார்.

திரு.இரா.மு. என்னுடனும் பிகேஎஸ்'ஸ¤டனும் தொடர்பு கொண்டபோது நாங்களிருவரும் அவருக்கு நன்றி கூறியும், அவருடைய கருத்துகளை முடிந்த இடத்தில் பயன்படுத்திக்கொள்வதாகவும், போட்டி அனைவருக்கும் என்று நினைத்த அவருக்கு, போட்டி மரத்தடி உறுப்பினர்களுக்கு மட்டுமே என்பதையும் சொன்னோம். கூடவே திரு.இரா.மு. விவரித்தமாதிரி பெரிய அளவில் ராயர்காப்பிகிளப் போட்டி நடாத்துவதற்கு நாங்கள் முடிந்த அளவு உதவுகிறோம் என்றும் சொன்னேன். நானும் பிகேஎஸ்'ஸ¤ம் கிளப்புடன் சேர்ந்து போட்டியை நடாத்த பணிவுடன் மறுத்தபிறகுதான் போட்டியிலும் போட்டி விதிமுறைகளிலும் திரு.இரா.மு பிழை கண்டு பிடிக்கத் தொடங்கினார்.

ஒரு "seasoned project management professional" ஆக, விதிமுறைகள் உதவிகரமாக இருக்க வகுக்கப் பட்டவையே. அவை நம்மை constrain செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது" என்று சொன்னவர் என்ன செய்தார் என்பது நான் சொல்லத்தேவையில்லை.

முதலில் தன்னைக்கலந்தாலோசிக்காமல் போட்டியை அறிவித்தோம் என்று குறைப்பட்டவர். பிறகு என்னுடைய ஈழத்தமிழ் இலக்கிய தாகத்திற்கும் மரத்தடியில் மட்டுறுத்துனராக செயல்படுவதற்கும் முடிச்சுப்போட்டார்.

> "மாலன், ஹரி, ராகவன், வெங்கடேஷ், என்று எத்தனை
> படைப்பாளிகள் உங்களின் ஈழத் தமிழ் இலக்கியத் தாகத்தை உணர்ந்து
> பாராட்டி, நேரில் சந்திக்காவிட்டாலும், படைப்பாளர் - வாசகர் என்ற
> வேற்றுமை எதுவும் இன்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார்கள். இவர்களில்
> யாரையாவது ஒருவரையாவது கலந்தாலோசித்து இப்படிப் பட்ட போட்டிகளை
> வடிவமைக்கவும், எல்லாரையும் பெருமைப்படுத்தி அழைக்கவும் முயன்றிருந்தால்
> எவ்வளவு நன்றாக இருக்கும்? "

முதலிலேயே நான் திரு.இரா.மு.விடம் போட்டி மரத்தடி குழுவினருக்கானது என்பதைத் தெளிவுபடுத்திவிட்டேன். மரத்தடி உறுப்பினரான திரு.பா.ராகவன் படைப்பாளி மட்டுறுத்துனரான என்னிடம் முன் அனுமதி கேட்பதான விதி நன்றாக இல்லை என்று மரத்தடியில் சொன்னார். அவரிடம் நானும் மரத்தடியிலேயே அந்த விதியை மாற்றி எழுதி இருப்பதாகவும், அது சரியா என்றும் கேட்டிருந்தேன். மிகவும் சரி என்று திரு.பாராவிடம் இருந்து பதிலும் வந்தது.

அத்தோடு 'உபயதாரர் என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்ட வார்த்தையையும் பின்வருமாறு சாடியிருந்தார். "அந்தப் படைப்பை உபயதார்களான (இந்த வார்த்தைப் பிரயோகமே தவறு. உபயதார் என்றால் கோவிலில் உண்டக்கட்டி, க்யூவில் நிற்க வைத்து நூறு மில்லி பால், இலவச வேட்டி சேலை வழங்குகிற வர்க்கம். பரிசு அளிப்பவர் என்று ஸ்பான்ஸரை மொழிபெயர்ப்பது> தான் எழுத்துக்குக் கவுரவம் அளிக்கும் செயல். நான் சொன்ன மற்றதைக்> கேட்காதபோது, இது மட்டும் கேட்கப்படுமா என்ன? அதனால் நானும் அந்தச்
> சொல்லைப் பயன்படுத்துகிறேன்)" 'உபயதாரர்' என்ற வார்த்தையை நாங்கள் எந்த அறிவிப்பிலும் உபயோகப்படுத்தவில்லை.


இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல திரு.இரா.மு. போட்டி நடுவர்களான திருமதி காஞ்சனா தாமோதரன், திரு.கோ.ராஜாராம் ஆகியோரைத் தொடர்புகொண்டார். திரு.இரா.முவின் மடலைக்கண்டதும் போட்டியின் நடுவர்களில் ஒருவர் அதை முன்னிட்டு, திரு.இரா.மு. எதைப்பற்றிப் பேசவிரும்புகிறார் என்று தெரியுமா எங்களிடம் கேட்டார். போட்டி ஒருங்கிணைப்பாளரை நன்கறிந்தவர்களானதலால் எந்தப் பிரச்சினையும் ஆகவில்லை. இதுவே வேறு யாரையாவது நாங்கள் நடுவர்களாக இருக்குமாறு அழைத்திருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

போட்டி விதிமுறைகள் பற்றி திரு.இரா.முவின் கருத்துகளைக் கேட்ட நடுவர்கள் அந்த விதிமுறைகளை மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களிடம் விதிமுறைகளை மாற்றியமைத்து எல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டோம். திரு.இரா.முருகன் நடுவர்களிடன் சொன்ன இன்னொரு விஷயம் - போட்டி அறிவிப்பில் இருக்கும் முதலாவது பத்தி "is a delibrate attack on Raayar Kaapi Klub, the primary literary group in the net which every netizen knows." என்றார். அதற்கு நடுவர்கள் தங்களுக்கு குழுக்களுடன் பரிச்சயம் இல்லையென்றும், அப்படி ஏதும் இருந்திருந்தால் அதை மாற்றியமைக்கும்படியும் எங்களைக் கேட்டுக்கொண்டனர். நாங்கள் இரண்டு நாட்கள் தொடர்ந்து மரத்தடி குழுவில் இருக்கும் நன்கு தமிழ் தெரிந்தவர்களிடமும், இன்னும் சில நண்பர்களிடமும் போட்டி அறிவிப்பைப் படித்து ஏதாவது பிழையாக இருக்கிறதா என்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டோம். அப்படி ஒன்றும் இல்லை என்று எல்லாரும் சொன்னதை நடுவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அந்த முதலாவது பத்தி இதோ:


மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாகூ குழுமமும் (http://groups.yahoo.com/group/maraththadi) திண்ணை வாசகர்கள் அறிந்ததே. திண்ணை இணையதளத்தில் மரத்தடி இணையதளத்திற்கான முகவரியை இட்டு எங்களை வாழ்த்திய திண்ணை ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள். வாழ்வின்பாலும், வாழ்கின்ற சமூகத்தின்பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் குழுமம் மரத்தடியாகும். மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓர் ஆரோக்கியமான இணையக் குடும்பமாக ஆனால் விதவிதமான வண்ணங்களைப் போன்ற எண்ணங்களுடன் நாங்கள் மரத்தடியில் வாழ்ந்து வருகிறோம்.


மேலே எங்கேயாவது மரத்தடியை இலக்கியக் குழு என்று இருக்கிறதா? திரு.இரா.முருகனின் அடுத்த குற்றச்சாட்டு, மரத்தடி இலக்கியக்குழுவாக பிரகடனம் செய்திருக்கிறது என்று. அப்போதுதான் அவர், "ராயர் காப்பி கிளப் தான் இலக்கியத்தையும் கலையையும் தன் இலக்குகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு அந்தப் பாதையில் இரண்டு வருடமாக எந்த வழித்திரிவும் இல்லாமல் இயங்கி வரும் ஒரே இணைய இலக்கியக் குழு. மதி மன்னிக்க வேண்டும் - மரத்தடி, நண்பர்கள் குழுமிப் பல்வேறு விஷயங்களைப் பேசும் குழுவாகத் தானே இதுவரை அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது?அது எப்போதிலிருந்து 'இலக்கியக் குழு' ஆனது? மரத்தடி 'இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இலக்கியக் குழு' என்றால், தமிழின் முக்கியப் படைப்பாளிகள் இலக்கியத் தேடலையே பிரகடனமாக உரத்து வெளிப்படுத்தி அமைக்கப்பட்ட ராயர் காப்பி கிளப் முதியவர்களால், முதியவர்களுக்காக நடத்தப்படும் வேலையத்த குழுவா?" என்றார்.


நடந்ததனைத்தையும் இங்கே எழுதிவிட்டேன். இதுகுறித்து இனிமேல் விவாதங்களில் ஈடுபடவோ, மறுமொழிகளோ சொல்வதாக இல்லை. You can draw you own conclusions.


இந்த விஷயம் சம்பந்தமாக வலைபதிவு சுட்டிகள்.

http://sifyrayan.blogspot.com

http://mynose.blogspot.com

நடந்தது என்ன? - 6

8.

திரு.இரா.முருகன் என்னுடைய மடலுக்குப் பதில் அளித்திருந்தார்.

தான் என்னோடும், போட்டி நடுவர்களோடும் பேச விரும்புவதாகக் கூறினார். போட்டி விதிமுறை குறித்த தம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவே எங்களைத் தொலைபேசுமாறு கேட்டிருப்பதாகச் சொன்னார் அவர். மட்டுறுத்துனரிடம் முன் அனுமதி வாங்கியபிறகுதான் படைப்பாளி அவருடைய படைப்புகளை வெளியிட வேண்டும் என்ற obnoxious clause பற்றி தமக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாகவும், அதைச் சொல்லவேண்டும் என்றார்.

அவ்விதி, படைப்பாளியின் மீது குவிக்கப்படும் இன்சல்ட் என்ற அவர், வெறும் ஐயாயிரம் ரூபாய்க்காக படைப்பாளி தன்னுடைய சுயமரியாதையைப் பணயம் வைக்க முடியாது என்றார். பரவலாக அறியப்பட்ட படைப்பாளிகளான நடுவர்கள் இந்த விதிமுறையை ஒத்துக்கொண்டது எப்படி என்று தெரியவில்லை என்றார் அவர்.

மேலும் தொடர்ந்த அவர், திண்ணையில் வெளியாகிய அறிவிப்பு என்னால் எழுதப் படவில்லை என்பதைத் தாம் அறிவதாகவும். அந்த அறிவிப்பில் இருக்கும் முதலாவது பத்தி "is a delibrate attack on Raayar Kaapi Klub, the primary literary group in the net which every netizen knows." என்றார்.


9. அடுத்துவந்த மடல் நடுவர் ஒருவரிடம் இருந்து வந்தது. திரு.இரா.மு. பேசவேண்டும் என்று அனுப்பிய மடலில் என்னுடைய பெயரும் இருந்ததால் இப்போட்டி பற்றிப் பேச விரும்புகிறார் என்று புரிந்துகொண்டதாகவும். திரு.இரா.மு. எதைப்பற்றிப் பேச விரும்புகிறார் என்று எனக்குத் தெரியுமா என்று கேட்டிருந்தார். என்னுடைய மடல் கிடைத்தபிறகே அவர் தொலைபேசியில் அழைத்ததாக அறிந்தேன்.


(குறிப்பு: இதற்கிடையில் நானும் குழு நண்பர்களும் விவாதித்து குறிப்பிடப்பட்ட அறிவிப்பில் அந்த விதியை மாற்றியமைத்து 'பதிவுகள்', 'திண்ணை' இணைய இதழ்களுக்கும் அனுப்பி வைத்தோம். இதற்கு பல நண்பர்கள் மரத்தடியிலும் வெளியிலும் இருந்து உதவினார்கள்.)


10.

திரு.இரா.முருகனுடன் தொலைபேசியில் பேசிய நடுவர்கள் அவர் குறிப்பிட்ட விதியை மாற்றியமைக்கும் படி எழுதினார்கள். திரு.இரா.முருகன் குறிப்பிட்ட அவமதிப்பு பற்றி தமக்கு ஒன்றும் தெரியாது என்றும். அப்படி எதுவும் இருக்குமேயானால் அதை மரத்தடிக்குழுவினர் மாற்றியமைக்கும் படியும் நடுவர்களுள் ஒருவர் மடலிட்டார்

11.
என்னிடம் மடலனுப்பி திரு.இரா.முருகன் என்ன பேசவிரும்புகிறார் என்று கேட்ட நடுவர் அவருடன் தொலைபேசியபிறகு எழுதிய மடலில் திரு.இரா.முருகன் குறிப்பிட்ட விதியை மாற்றியமைத்து, அதை அறிவிக்குமாறு சொன்னார். அத்தோடு சீக்கிரமாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்து போட்டி சுமூகமான முறையில் நடைபெற வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.


(இதற்கிடையில் பல தொலைபேசி அழைப்புகளும், இன்னும் பல தனிப்பட்ட கடிதங்களும் பரிமாறப்பட்டன. அறிவிப்பின் முதல் பத்தியிலோ, வேறெங்குமோ எதுவும் தவறாகச் சொல்லப்படவில்லை என்று நிரூபித்தோம். அதற்கும் பல நண்பர்களை அழைத்து மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ந்து ஏதேனும் பிழையாக இருக்கிறதா என்று சொல்லும்படி கேட்டோம். தமிழில் புலமை வாய்ந்த நண்பர்களும் எதுவும் இல்லை என்று சொன்னார்கள். அதையும் போட்டியில் சம்பந்தப் பட்டவர்களுக்கு, நடுவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். இரண்டு நாட்கள் எடுத்தது, அனைவரும் 'எதுவும் தவறாக இல்லை' என்று ஒப்புக்கொள்ள...)



17.01.2004 (சனி - இரவு)

இந்தத் தனிமடல் திரு. இரா.முருகனால் திரு சி·பி வெங்கடேஷ், திரு.பா.ராகவன், திரு. இகாரஸ் பிரகாஷ் ஆகியோருக்கும் எனக்கும் அனுப்பபட்டது.

போட்டியைப் பற்றிய அறிவிப்பைப் பார்த்ததும் தான் மிகவும் சந்தோஷப்பட்டு அச்சு ஊடகத்தையும் இணையத்தையும் ஒருங்கிணைக்கும் எண்ணத்தை மரத்தடி மட்டுறுத்துனர்களிடமும் ஒருங்கிணைப்பாளரிடமும் மிகுந்த உற்சாகத்துடன் தெரிவித்ததாகவும். கட்டுரைகள் சேர்க்கப்படவேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்ததாகக் கூறினார்

பிகேசிவகுமாருக்கும் எனக்கும் அதை அவர் தனிமடலாக அனுப்பியிருந்தாகவும், பிகேசிவகுமாரிடம் இருந்து வந்த பதில் பிகேஎஸ்'ஸ¤டைய அன்பையும் நேயத்தையும் காட்டியதாக இருந்தாலும் அரசாங்க வாடை வீசியதாகவும், தனியஞ்சல்களில் தான் (இரா.மு) தோழமையையும் இரா.முருகன் என்ற தவிர்க்கவொண்ணாத படைப்பாளி தகுந்த மொழியாடலையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். தான் சிவகுமார் இளைஞர் என்பதால் அந்த அரசாங்க வாடையைக் கண்டுகொள்ளாமல் கட்டுரைப் போட்டியின் அவசியத்தை மறுபடியும் மட்டுறுத்துனர்களுக்கும் சிவகுமாருக்கும் தெரிவித்ததாக எழுதி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்த திரு.இரா.மு., தான் இதற்கிடையில் திண்ணை இணையத்தளத்திற்கு சென்ற போது அங்கிருந்த போட்டி அறிவிப்பைக் கண்டு என்னடா நான் இத்தனை பிரியமாக ஒரு முக்கிய விஷயத்தை விவாதித்துக்கொண்டிருக்கிறேனே இது முடிந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாமே என்று நினைத்ததாகச் சொல்கிறார்.

அடுத்து போட்டி அறிவிப்பைப் படிக்கத் தொடங்கியது பிளட் பிரஷர் ஏறத்தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

அவ்வறிவிப்பில் இருந்த 'மரத்தடி இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இணையக் குழு'. என்ற சொல்லாடல் யாரைக்குறித்தது என்று தான் சொல்லத்தேவையில்லை என்று கூறும் திரு.இரா.முருகன், "ராயர் காப்பி கிளப் தான் இலக்கியத்தையும் கலையையும் தன் இலக்குகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு அந்தப் பாதையில் இரண்டு வருடமாக எந்த வழித்திரிவும் இல்லாமல் இயங்கி வரும் ஒரே இணைய இலக்கியக் குழு. மதி மன்னிக்க வேண்டும் - மரத்தடி, நண்பர்கள் குழுமிப் பல்வேறு விஷயங்களைப் பேசும் குழுவாகத் தானே இதுவரை அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது?அது எப்போதிலிருந்து 'இலக்கியக் குழு' ஆனது? மரத்தடி 'இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இலக்கியக் குழு' என்றால், தமிழின் முக்கியப் படைப்பாளிகள் இலக்கியத் தேடலையே பிரகடனமாக உரத்து வெளிப்படுத்தி அமைக்கப்பட்ட ராயர் காப்பி கிளப் முதியவர்களால், முதியவர்களுக்காக நடத்தப்படும் வேலையத்த குழுவா?" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், தான் போட்டியின் சட்ட திட்டங்களைத் தொடர்ந்து படித்தாகவும், கவிதைப் போட்டி என்று குறிப்பிடாமல் புதுக்கவிதைப்போட்டி என்று குறிப்பிடப்பட்டிருந்தாகவும், மரபோ, புதுசோ கவிதை கவிதைதான். அது என்ன புதுக்கவிதைக்குப் போட்டி என்றவர், மரபுக் கவிதை எழுதும் திரு.இரா.மு.வின் அன்பான நண்பர்களோடு நடந்த மோதலே அந்த ஒருதலைபட்சமான அறிவிப்புக்குப் பின்புலம் என்று புரிந்துகொண்டதாகவும் நடுவர்களில் ஒருவர், மற்றும் மட்டுறுத்துனராகிய நான் அதை எப்படிக் கண்டு கொள்ளாமல் போனேன் என்றும் எழுதி இருக்கிறார். பிகேஎஸ்'ஸ¤க்கு கிளப்பில் இருப்பவர்களோடு ஏற்பட்ட பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கல் செய்திருக்கிறார் என்றார் திரு.இரா.மு.

அதற்கடுத்த விதியப் படித்ததும் இரண்டு பிளட் பிரஷர் மாத்திரைகளை சேர்த்து விழுங்கவேண்டி இருந்ததாகவும், போட்டிக்கு அனுப்பட்ட படைப்பை பரிசு வாங்கும்வரை வேறெங்கும் அனுப்பக்கூடாது என்றும், பரிசு பெற்ற படைப்புகளை மட்டுறுத்துனர் அனுமதி வாங்கி படைப்பாளி வேறெங்கும் வெளியிட வேண்டும் என்றும் இருந்தது என்றார். "இண்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ரைட் தெரிந்த யாரும், தன்மானமிக்க எந்தப் படைப்பாளியும் இதற்கு இசையமாட்டான். கேவலம் ஐயாயிரம் ரூபாய்க்காக அடிமைச் சாசனம் எழுதித் தரச் சொல்லிக் கேட்பது
என்ன நாகரீகம்?" என்று கேட்டிருக்கிறார். (மதியின் குறிப்பு - இக்கடிதம் எழுதப்பட்ட நேரத்தில் அவ்விதி மாற்றியமைக்கப்பட்டு திண்ணையிலும் பதிவுகளிலும் திருத்திய அறிவிப்பு வெளிவந்திருந்தது)

நடுவில் வேறு விஷயங்கள் பேசிய திரு.இரா.மு, தொடர்ந்து போட்டியைப் பற்றிப் பேசியபோது, அவர் குறிப்பிட்ட ஷரத்து மாற்றப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். ஆனால், முதல் பத்தியில் விஷமம் அப்படியே இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

பெங்களூர் செல்லும் தாம் பிழைத்துக்கிடந்தால், அவர் திரும்பியதும் ராயர் காப்பி கிளப் கோடை-கால இலக்கிய விழா - போட்டிகளை எப்படி நடத்தவேண்டுமோ அப்படி நடத்தும் என்றும், அச்சு ஊடகத்தையும் இணையத்தையும் இணைக்கும் முயற்சியாக அது இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்த அவர் எழுதியது " சகோதரி மதியிடம் நான் வேண்டுவதெல்லாம் இதுதான் - இரா.முருகன் தான் வேண்டாம். மாலன், ஹரி, ராகவன், வெங்கடேஷ், என்று எத்தனை படைப்பாளிகள் உங்களின் ஈழத் தமிழ் இலக்கியத் தாகத்தை உணர்ந்து பாராட்டி, நேரில் சந்திக்காவிட்டாலும், படைப்பாளர் - வாசகர் என்ற வேற்றுமை எதுவும் இன்றி நட்பு பாராட்டி வந்திருக்கிறார்கள். இவர்களில்
> யாரையாவது ஒருவரையாவது கலந்தாலோசித்து இப்படிப் பட்ட போட்டிகளை வடிவமைக்கவும், எல்லாரையும் பெருமைப்படுத்தி அழைக்கவும் முயன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மதிக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் என்பதை அறிவேன். என்றாலும் ..."

கடைசியில் மாற்றப்பட்ட போட்டி அறிவிப்பும் படைப்பாளிக்குப் பெருமை தருவதாக இல்லை என்று சொல்லும் திரு.இரா.மு. "'பெரிய பத்திரிகைகள் அளவு சன்மானம் தருவதால் ஒரு மாசம் வேறே எங்கேயும் போடக்கூடாது' என்பது இப்போதைய மினி POTA. காசு
நிறையக் கொடுக்கறோமில்லே, வந்து ஊதுய்யா; அப்புறம் காலண்டரைப் பாத்துக்கிட்டு ஒரு மாசம் பொறுமையாக் காத்துட்டு எங்க வீட்டு வாசல்லே தேவுடு காத்துக்கிட. ' என்று காருகுறிச்சி அருணாசலத்தையோ, புல்லாங்குழல் மாலியையோ மிரட்டுவது போல் இருக்கிறது."

நடந்தது என்ன? - 5

4.
அடுத்த அரைமணி நேரத்தில் திரு.இரா.மு.விடம் இருந்து பதில் வந்திருந்தது.

அச்சுப் பத்திரிகளையும் இணைய உலகையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்த திரு.இரா.மு., நாமெல்லோரும் இணையம் வழியாக தமிழை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வதில் மாற்றுக்கருத்து இல்லாதவர்கள் என்றார். தானும் திரு.பா.ராகவனும் கிளப்பிலும் மரத்தடியிலும் வெளிவந்த விஷயங்களைத் தொகுத்து ஒரு தொகுப்பு கொண்டுவர இருப்பதாகத் தெரிவித்தார். பிகேஎஸ்'ஸ¤க்கோ, மற்றவர்களுக்கோ கிளப் ஓனர்/மட்டுறுத்துனர்கள் யாரிடமாவது ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதையெல்லாம் ஒதுக்கித்தள்ளுமாறு சொன்னார். தேவைப்பட்டால் கிளப் தம்மால் மட்டுமே ரெப்ரசெண்ட் பண்ணப்படும் என்றார்.

கட்டுரையைப் பொறுத்தவரை ஐம்பது உத்வேகமான கட்டுரையாளர்கள் இணையத்தில் இருப்பதாகவும் அவர்களை உற்சாகப் படுத்தவேண்டாமா என்றும் கேட்டவர், இன்னொரு சாமிநாத சர்மாவோ, தோழர் ஜீவாவோ, மு.மு.இஸ்மாயிலோ இந்தத் தலைமுறையில் இருந்து வரவேண்டாமா என்றார்

"விதிமுறைகள் உதவிகரமாக இருக்க வகுக்கப் பட்டவையே. அவை நம்மை constrain செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது" என்று சொன்னார் அவர். இது அவருக்கு ஒரு எழுத்தாளராக அல்லாமல் "seasoned project management professional" ஆகத் தெரியும் எனக்குறிப்பிட்டார் அவர்.

5.
ஐந்தாம் மடல் திரு.இரா.மு.விடம் இருந்து எனக்கு தனிமடலாக வந்தது. தான் திண்ணை அறிவிப்பைப் பார்த்ததாகவும். அவரைக் கலந்தாலோசித்து முடிவெடுத்திருக்கலாம் என்ற அவர், "நான் உசிரோட தானே இருக்கேன்?" என்றார்.

தொடர்ந்த அவர், "அது என்ன புதுக்கவிதை - புதுசு, மரபு எதுவானாலும் கவிதை கவிதைதானே" என்றார்.

நான் முன்னே சொன்னதுபோல பரிசு பெற்ற படைப்புகள் மரத்தடி மட்டுறுத்துனர் என்ற முறையில் என்னிடம் தெரிவிக்கப் பட்டுவிட்டு மற்ற இடங்களில் வெளியிடலாம் என்று சொல்லி இருந்தோம். அதைக்குறிப்பிட்ட திரு.இரா.மு., "பரிசு வாங்கின அப்புறம் எதுக்கு மதியோட அனுமதி வேறெங்கேயாவது பிரசுரிக்க? அது என்ன மதி அனுமதிப்பாங்களாம் இல்லை என்றால் மறுப்பார்களாம். படைப்பாளிக்கு கௌரவம் கொடுப்பதுபோல இல்லையே என்ற அவர், படைப்பாளி புத்தகம் போட நினைத்தால் காப்பி ரைட் இல்லையா" என்றார்.

விதிமுறைகளை ·பார்ம் பண்ணும்போது அனுபவஸ்தர்களைக் கேட்டிருக்கலாம் என்றவர், "நான் என்ன செத்.. வேணாம் விடுங்க.." என்றும் வாழ்த்துகள் என்றும் எழுதி இருந்தார்

6. நடுவர்களான திருமதி. காஞ்சனா தாமோதரன், திரு. கோபால் ராஜாராம் ஆகியோருக்கும் எனக்கும் அவருடைய தொலைபேசி (Land & mobile) எண்களைத் தந்து அழைக்குமாறு திரு.இரா.மு. எழுதி இருந்தார்


16.01.2004 (வெள்ளி)

7.

வெள்ளிக்கிழமை காலையில் மேலே சொன்ன ஆறு கடிதங்களையும் ஒன்றாகப் படித்தேன் நான். போட்டியை நடாத்த ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்த தெம்பில் என்பாட்டில் இருந்திருந்தேன் நான்.

பாயிண்ட வடிவத்தில் அதுவரை எழுப்பப் பட்டிருந்த ஐயங்களுக்கு விடையளித்தேன் நான்.


அன்புள்ள இரா.மு அண்ணா,

வணக்கம்!

Just came in braving -45 degree celcius temperature. I
cannot not call you until i go home. :( I am sorry
Era.Mu aNNa.


மரத்தடி குளிர் காலப்போட்டி குறித்த உங்கள் மடல்களையும், பிகேஎஸ்ஸின்
மடல்களையும் படித்தேன். மரத்தடியின் மட்டுறுத்துனர் என்ற முறையில் சில
வார்த்தைகள்.

1. இந்தப்போட்டி மரத்தடி உறுப்பினர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.

2. பரிசுத்தொகை எதிர்பாராத விதத்தில் கூட்டப்பட்டபின்னர்தான்,
மரத்தடிக்கு வெளியிலும் போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட முடிவு
செய்தோம். ஆனாலும், போட்டி மரத்தடி உறுப்பினர்களுக்கு மட்டுமே. கலந்து
கொள்ள விரும்புபவர்கள் மரத்தடியில் உறுப்பினராக வேண்டும்.

3. நாங்கள் முதன்முதலில் நடத்தும்போட்டி என்பதாலும், இதற்கு முன்பு
இம்மாதிரியான போட்டிகளை நடத்திய அனுபவம் இல்லாததாலும், இரண்டு
பிரிவுகளில் மட்டுமே போட்டி நடத்தப்படுகிறது. போட்டி நல்லபடியாக நடந்து
முடிந்தால், மறுபடியும் நடத்தலாம் என்ற தைரியம் வந்தால், அப்போது
உபயதாரரிடம் பேசி மரத்தடி மட்டுறுத்துனர்கள் முடிவெடுப்பார்கள். இதைத்தான்
நேற்றும் பேசிக்கொண்டோம்.

4. அகலக்கால் வைக்க நாங்கள் விரும்பவில்லை, இரா.மு அண்ணா. மரத்தடி
உறுப்பினர்களுக்கிடையேயான இந்தப்போட்டிக்கு வந்த கதைகளும் வெற்றி பெற்ற
கதை/கவிதைகளும் மரத்தடி இணையத்தளத்தில் உரிய அறிவிப்போடு வரும்.
வெற்றி பெற்ற கதைகள் மரத்தடி இணையத்தளத்தில் மட்டுமே இருக்கவேண்டும் என்று
விரும்புகிறேன் நான். போட்டிக்கு வந்த கதைகளை வேறெங்கும் அனுப்ப முதல்
என்னுடைய அனுமதி பெறவேண்டும் என்ற குறிப்பும் போட்டி விதிகளில்
இருக்கிறது.

5. புதிதாக எழுதுபவர்கள் அடங்கிய சிறிய குழுவான நாங்கள், சிறிய
அளவிலேயே இப்போட்டியை நடத்த விரும்புகிறோம். இந்தப்போட்டியில்
கிடைக்கும் அனுபவங்களை வைத்தே அடுத்த போட்டி பற்றிய முடிவுக்கு வர
இருக்கிறோம்.

6. நீங்கள் சொன்னபடி நடுவராக பத்மநாப ஐயர் அவர்களையும், மாலன்
அவர்களையும் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களையும் அடுத்த போட்டி
நடத்துவதாயிருந்தால் கேட்க எண்ணம்.

7. நீங்கள் சொன்னபடி, பெரிய அளவில் போட்டியை கிளப்பில், இலக்கிய
இதழ்கள் துணையோடும், கமர்ஷியல் ஸ்பார்சர்ஷிப்போடும் நடத்தினால் என்ன?
அம்மாதிரியான போட்டியில் உறுப்பினர், அல்லாதார், இணையம் சார்ந்தவர்,
சாராதவர் அனைவரும் பங்கு பெறலாம். என்ன நினைக்கிறீர்கள்.
அம்மாதிரியான போட்டியில் மரத்தடி உறுப்பினர்களும், நானும் கலந்து,
எங்களால் ஆன உதவியையும், போட்டிகளில் பங்களிப்பையும் தர ஆர்வமாக
இருக்கிறோம்.

அன்புடன்,
தங்கை
மதி

நடந்தது என்ன? - 4

கடிதங்கள்

1.
முதலாவது கடிதத்தில் அவரைத் தொலைபேசியில் அழைக்குமாறு கூடி தொலைபேசி எண்களைக் கொடுத்தார். போட்டி அறிவிப்பை ராயர்காப்பி கிளப்பிலும் அறிவிக்குமாறு சொன்ன அவர், போட்டியில் அனைவரையும் கலந்துகொள்ள அனுமதித்தது நல்ல யோசனையா என்றார். தொடர்ந்து கட்டுரைப் போட்டி வைக்கலாம் என்ற அவர் அதற்குத் தான் பரிசு கொடுப்பதாகவும் திரு.பத்மநாப ஐயரை நடுவராகத் அழைக்கலாம் என்றார். ஐயரால் முடியவில்லை என்றால் திரு.மாலன், திரு. பிரக்ஞை ரவிஷங்கர், திரு. பி.ஏ.கே. ஆகியோரைக் கேட்கலாம் என்றார். தான் அன்றிரவு திரு.மாலன், திரு.பி.ஏ.கே. மற்றும் தமிழிணையத்தில் நமக்குத் தெரிந்த நால்வரோடு இரவு விருந்துண்ணப்போவதாகச் சொல்லி முடித்திருந்தார். (இந்தக் கடிதம் மரத்தடி மட்டுறுத்துனர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் பிகேஎஸ்'ஸ¤க்கும் திரு. இரா.மு.வால் அனுப்பட்டிருந்தது)


2.
இரண்டாம் மடலிலும் கட்டுரைப் பிரிவையும் சேர்க்கலாம் என்றும் திரு.பத்மநாப ஐயரை நடுவராக இருக்கும்படி கேட்கலாம் என்றார். பரிசுத்தொகையைத் தான் வழங்குவதாகக் கூறிய அவர், ஐயரவர்களால் முடியவில்லை என்றால் திரு.பிரக்ஞானி ரவிஷங்கரைக் கேட்கலாம் என்று சொன்னார்.

3.
போட்டி ஒருங்கிணைப்பாளர் பிகேஎஸ்'ஸின் மடல் அடுத்து இருந்தது.



--- pk sivakumar wrote:
> Date: Thu, 15 Jan 2004 17:19:32 -0800 (PST)
> From: pk sivakumar
> Subject: Re: why not katturai too ?
> To: murugan ramasami ,
> mathygrps@y...,
> Maraththadi-owner@yahoogroups.com
>
> Dear Era.Mu,
>
> Vanakam. Nalam. Naduvathum Athuvey. Thanks for your
> email.
>
> Happy Pongal to you and your family.
>
> We are open for Katturai, other categories and even
> for some more puthumais in the next competitions. We
> are just starting it and so we wanted to start small
> and do it well and then grow gradually to include
> more
> categories. So, to put "one step at a time forward"
> we
> started with Sirukathai and Puthukavithai. We did
> not
> have any intentions of leaving out katurai or other
> categoris. I have mentioned the same in my
> introductory note abt the competitions.
>
> We aspire to conduct it as professionally as
> possible
> with flexibility and features to include everyone
> and
> everything. However, we regret that we could not do
> categories like Katturai this time. As we know
> punctuality and deadlines bring lots of credibility
> to
> competitions like this, we would like to conduct and
> complete whatever we have announced so far to the
> best
> of our abilities on time.
>
> So, please bear with us for this time and we value
> all
> the inputs and will try our best to include as much
> as
> possible in the future competitions.
>
> A "Big thank you" for announcing about the
> competition
> to the RKK members. Appreciate it.
>
> I do agree Praknai Ravishankar and Iyer are very
> good
> candidates to serve as future judges and in fact I
> have mentioned Iyer's name to Mathy when she becomes
> a
> sponsor. I have hesitated mentioning Ravishankar's
> name because I know for sure how busy he is with his
> PhD and related matters and also dont want others
> feel
> that I recommend only my friends.
>
> Regarding having an alliance with "organizations
> that
> bring printed magazines", Maraththadi moderators
> have
> to discuss it and give it a deep thought before
> making
> a decision that will serve the best interests of
> Maraththadi. The objective of this competition is
> non-commercial, non-profit and non-reputation
> generating to any commercial institutions and being
> very non-political and not branded as part of any
> Tamil literary groups. Like this, I have some
> concerns
> in having an alliance. However, multiple brains are
> better than one brain and so, when the this first
> competition is done and finished, Maraththadi
> moderators will sit and have a detailed discussion
> about the suggestions and possibilities you have
> mentioned.
>
> I am only an organizer for this particular event and
> so Maraththadi moderators are the best ones to take
> a
> final decision about future competitions. And I am
> sure they will do a good job, once this competition
> is
> completed bcos by then we would have learned our
> lessons about how to "value add" to the process.
>
> Please feel free to give your inputs and I can
> assure
> you that we will try our best to study and consider
> all the suggestions whether we could follow it or
> not
> due to the circumstances.
>
> With best wishes and warm regards,
> PK Sivakumar
>
> --- murugan ramasami wrote:
> > Sivakumar,
> >
> > I wrote to Mathy -
> >
> > Dear Mathy,
> >
> > It would be appropriate to include katturai too. I
> > am ready to
> > sponsor the competition. Iyer should be the ideal
> > candidate for
> > judge. If he does not have the required bandwidth
> in
> > terms of time,
> > we can ask Pragjani Ravishankar (US).
> >
> > Pongal vAzhththukkaL.
> >
> > Rgds,
> > era.mu
> >
> >

நடந்தது என்ன? - 3

14.01.2004 (புதன்)

நடுவர்கள் யார் யார் என்ற தகவலோடு, பரிசுத்தொகை விவரமும் பிகேஎஸ்'ஸால் மரத்தடியில் கொடுக்கப்பட்டது.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/10391

பிகேஎஸ் அனுப்பிய மடலை (மேலே கொடுத்திருக்கிறேன்) பார்த்த நடுவர் காஞ்சனா தாமோதரன் பரிசுத்தொகையைக் கூட்டுமாறு சொல்லி தாம் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அத்தோடு, வருடத்தில் நான்கு முறை வரும் போட்டிகளுக்கான செலவையும் அவர் தனியாகவோ, ஒருங்கிணைப்பாளராக முன்வரும் மரத்தடி உறுப்பினருடனோ ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். அதுகுறித்த பிகேஎஸ்'ஸின் மடல் - http://groups.yahoo.com/group/Maraththadi/message/10392




15.01.2004 (வியாழன்)

திண்ணையிலும், பதிவுகளிலும் போட்டி அறிவிப்பு வெளியாகியது.

(குறிப்பு: பொதுவாக இணையத்தில் ஒரு படைப்பு பல இடங்களில் பகிர்ந்துகொள்ளப் படுவதால், போட்டியில் வென்ற படைப்புகளை படைப்பாளி வேறெங்கும் அனுப்புவதற்கு முன்பு மரத்தடியின் மட்டுறுத்துனர் என்ற முறையில் என்னுடைய முன்-அனுமதி பெற வேண்டும் என்று எழுதி இருந்தோம்.)

(தனிப்பட்ட குறிப்பு: போட்டி சம்பந்தப் பட்ட மடல் பதிவுகளிலும் திண்ணையிலும் வந்திருப்பதைப் பார்த்துவிட்டுச் சென்ற நான் அதற்குப் பிறகு ஏறக்குறைய 24 மணி நேரம் கழித்தே இணையப் பக்கம் வந்தேன்)


போட்டி குறித்து திரு.இரா.மு ராயர்காப்பி கிளப்பில் அனுப்பிய மடல்


அந்த மடலைத் தொடர்ந்து என்னுடைய மடல் பெட்டியில் ஏறக்குறைய நான்கு மடல்கள் அவரிடமிருந்து வந்திருந்தது.

(குறிப்பு: திரு.இரா.முருகன் மரத்தடியில் இருந்து டிசம்பர் 30ஆம் திகதி விலகினார். காரணம் - உகதியின் மடல். பல மாதங்களுக்குப் பிறகு வந்த உகதி, மரத்தடியில் எத்தனை புதுமுகங்கள் என்று வியந்து, என்ன இருந்தாலும் முன்பிருந்ததுபோல ஒரு சிலரே தொடர்ந்து எழுதி வருகிறார்கள் என்று எழுதினார்.

quote உகதி


ஆஹா எத்தனை புதுமுகங்கள் இப்போது மரத்தடியில் (புதுமுகங்களாகத் தெரிவது எனக்கு மட்டும் தான் -- தற்போதைக்கு
நான் தான் அவர்களுக்குப் புதுமுகம்). முன்னைப் போலவே இப்போதும் ஒருசிலர் மட்டுமே தீவிரப் பங்களிப்பைச்
செய்கின்றனர். ஆஸாத், நாகூர் ரூமி, புள்ளி ராஜா ச்சே KVராஜா, சுந்தர், ஐகாரஸ் பிரகாஷ், பாஸ்டன் பாலாஜி, வக்கீல் பிரபு, இராமு, பாரா, ஜெயஸ்ரீ, அணு அண்ட அறிவியலார் ரமேஷ், ஹரி கிருஷ்ணன், பிரசன்னா, உஷா, குமார், மதி, பிரியா மற்றும் ஷைலஜா ஆகியோர் இதில் முக்கியமானோர்.


unquote உகதி

இம்மடலைப்படித்ததும் திரு.இரா.மு. மரத்தடியை விட்டு விலகினார். மரததடியில் இருந்து விலகுபவர்களுக்கு ஒரு மடல் செல்லும். அம்மடலில் அவர்கள் விலகுவதற்கு ஏதேனும் பிரத்தியேக காரணங்கள் இருக்கிறதா என்று கேட்டிருப்போம். அந்த மடலை எனக்கு முன்னிட்டு இரா.மு அவர்கள் இம்மாதிரியான impecile களுடன் இருப்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சொல்லி, தான் பத்து புத்தகங்கள் வெளி
யிட்ட எழுத்தாளர் என்பது தெரியாதவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லி வெளியேறிவிட்டார்.

நான் பிரபுவுடன் தொடர்புகொண்டு, பூனாவில் இருக்கும் உகதியுடன் ஏற்கனவே தொடர்பு வைத்திருந்ததால் அவருடன் பேசி இரா.மு அவர்களைப் பற்றிச் சொல்லச் சொன்னேன். பிரபு அதற்கு, தனக்கே குழுவிற்கு வந்த பிறகுதான் இரா.மு. பற்றித்தெரி
யும். உகதி ஏதும் தவறாக எழுதவில்லையே என்றால். சரி விடுங்கள். நீங்கள் உகதியிடம் இரா.மு கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் என்று சொல்லுங்கள் என்றேன். என்னுடைய வேண்டுகோளாஇயும், பிரபுவின் வேண்டுகோளையும் ஏற்று உகதி இரா.மு அவர்களிடன் ஒரு மன்னிப்பு மடல் எழுதினார். தனக்கு இலக்கிய சம்பந்தம் குறைச்சல் என்றெல்லாம் உகதி எழுதினார்.

impecile என்பதற்கு அர்த்தத்தையும் இங்கே இடுகிறேன்.

A stupid or silly person; a dolt.
A person whose mental acumen is well below par.

A person of moderate to severe mental retardation having a mental age
of from three to seven years and generally being capable of some
degree of communication and performance of simple tasks under
supervision. The term belongs to a classification system no longer in
use and is now considered offensive.

நடந்தது என்ன? - 2

முதலில் பொங்கல் போட்டி என்று ஆரம்பித்த விஷயம் கடைசியில் பருவநிலைகளை வைத்து நடாத்தலாம் என்றாயிற்று. முதல் போட்டிக்கு பிகேஎஸ் ஒருங்கிணைப்பாளராக இருக்கலாம் என்றும் அடுத்தடுத்த போட்டிகளுக்கு மற்றவர்கள் இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்த போட்டிக்கு தான் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன் என்று அப்போதே கே.வி.ராஜா முன்வந்தார்.



--- pksivakumar@a... wrote:
> Dear Mathy,
>
> Its upto Maraththadi moderators to decide the
> frequency of conducting such
> events. My take is we should conduct it once in 3
> months atleast so that we
> have 4 in a year.. We can call the potis in the
> name of the 4 seasons to
> avoid any religional or festival names to it so that
> no one feels bad that we
> did not do it for Easter or Ramadaan.
>
> Again, Is it a yes or no?
>
> Looks like, I could get a decision from US President
> and not from Maraththadi
> on time :P I wanted all ur decision yesterday ;-)
>
> I have not written the rules and conditions and so u
> r jumping guns on that
> now. Becos I dont want to do it, before getting
> approval. Else, if i dont get
> approval such an effort will go waste. If it was
> approved by moderators, I
> will write detailed rules and conditions which will
> include all and will make
> everyone to feel happy about it... If i omit
> anything this time in rules and
> conditions, we will learn it through this experience
> and add it to next time..
>
> If u keep on worrying about what will be the rules
> and conditions, we may
> never be able to do it :-)
>
> My idea is to announce it today and deadline for
> articles is Jan 31st and
> results will be announced on or before Feb 15th.
>
> Sorry for sounding like a task master. Thats what I
> am when I put myself into
> things I like :-)
>
> Thanks and regards, PK Sivakumar




dear pks,

dont know if the other moderators r online.

pls GO AHEAD!

GREEN SIGNAL.

lets name the potti by season - goes well with our
NAME too.

pls start penning the rules.

anpudan,
mathy


> Mathy Kandasamy wrote:
> pks,
>
> what is the limit?
>
> Can one send more than one kavithai/kathai?
>
> anpudan,
> Mathy
>




> Limit is important. I dont know whether pks
> mentioned about the limit in
> his rules. If not, i ask him to mention there.
>
> We have to continue this. But it should continue in
> a proper way. Before the dead line, we have
> to publish the result.
> If ubayathaarar feels that not even single story or
> kavithai is upto the
> mark, it is his/her duty to say "this month nothing
> is good". We should not
> select bad one among the worst ones.
>
> Prasanna




-- Kumaresan Veeramani
wrote:
> Subject: Re: kulirkaala ilakkiya pOtti
> To: vhprasanna@y...
> CC: maraththadi-owner@yahoogroups.com, Mathy
> Kandasamy ,
> pksivakumar@a...
> From: Kumaresan Veeramani
> Date: Wed, 14 Jan 2004 10:16:08 +0000
>
>
>
>
>
> Limit has been already mentioned.
> As prasanna said,we need to continue this for all
> the 4 seasons ;-)
> lets see how we are going to do this.
>
> PKS
> Kudos to your idea and thanks for being the "first
> ubayathaarar"
>
>
> Thanks & Regards,
>
> V.Kumaresan




-- "K.V.Raja" wrote:
> From: "K.V.Raja"
> To: "Kumaresan Veeramani" ,
>
> CC: ,
> "Mathy Kandasamy" ,
>
> Subject: Re: kulirkaala ilakkiya pOtti
> Date: Wed, 14 Jan 2004 13:20:07 +0300
>
> rendaavathu ubayaththaara naanum kumsum :-P, enna
> thala, okva??



போட்டியில் மட்டுறுத்துனர்களும் பங்கெடுக்கலாம். போட்டி சம்பந்தப் பட்ட அனைத்து விடயங்களையும் ஒருங்கிணைப்பாளர் கவனித்துக்கொள்வார் என்றும் முடிவெடுக்கப்பட்டது. போட்டி மரத்தடி உறுப்பினர்களுக்கு மட்டுமே என்பதினால் யாரேனும் குழுமத்தில் சேர வந்தால் அவர்களுக்கான உதவிகளை மட்டுறுத்துனர்களும் ஒருங்கிணைப்பாளரும் செய்யவேண்டும் என்றும் தீர்மானித்தோம்.

இரவுக்குள் போட்டி விதிமுறைகளை அனைவரும் விவாதித்து முடிவெடுத்தோம். அறிவிப்புகளைத் தயார் செய்து பிரதி வியாழன் வெளியாகும் 'திண்ணை' இணைய இதழிலும், 'பதிவுகள்' இணைய இதழிலும் போட்டி அறிவிப்பு வெளிவரும்படி மடல்களை அனுப்பினேன்.



13.01.2004 (செவ்வாய்)

பிற்பகல் மரத்தடியில் 'குளிர்காலப்போட்டி 2004' ஒருங்கிணைப்பாளரான பிகேஎஸ் அதுபற்றிய அறிவிப்பை மரத்தடியில் வெளியிட்டார்.

http://groups.yahoo.com/group/Maraththadi/message/10328


பிரசன்னா நடுவர்கள் யார் யார் என்று தெரிவிக்காவிட்டால் தான் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று செல்ல மிரட்டல் விடுத்தார். எம்.கே.குமார் போட்டிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்று கேட்டார்.


நடந்தது என்ன? - 1

12.01.2004 (திங்கள்)

காலையில் - பி.கே.சிவகுமாரிடமிருந்து மரத்தடி மட்டுறுத்துனர்களுக்கு பொங்கல் தினச் சிறப்பு நிகழ்ச்சியாக கதை, கவிதைப் போட்டி நடாத்தினால் என்ன என்று ஒரு மடல் வந்தது.


--- pksivakumar@a... wrote:
> Dear Maraththadi Owner and Moderators,
>
> Vanakam.
>
> On the occasion of Pongal, I would like to announce
> and conduct "Tamil Short
> story and Puthu Kavithai Poti" In Maraththadi. We
> will invite short stories
> and puthu kavithaikal from Maraththadi Members. I
> will set detailed rules if
> you agree to the proposal. I will also try to find
> some outside judges to
> select one or two short stories and kavithaikal and
> give some token prizes
> from my pocket.
>
> The conditions include the article should be
> published first only in
> Maraththadi and should not have been published
> anywhere before. Once we
> announce the Poti Mudivukal the writers can publish
> it anywhere else too.
>
> I can ask some of my good friends who are veteran
> writers but very quiet to
> be the judges.
>
> Its like we have to do this kind of poti for the
> occasion and for the first
> time I am being the Ubayathaarar. I conduct it, set
> the rules, get the judges
> and give the prizes. Next time, someone else can
> volunteer.
>
> We will ask all participants to post their articles
> in Maraththadi in public
> with a note "poti kathai" or "poti kavithai" and I
> will compile and give it
> to the judges I select.
>
> Please let me know if this is ok to you and if so, I
> will announce about it
> in Maraththadi along with all the rules and
> conditions. If its not ok to you,
> please atleast reply that you dont want to do it. U
> need not tell me the
> reasons though.
>
> Thanks and regards, PK Sivakumar




Dear PKS,

My points

1. This is indeed a very good idea.

2. When i read that you would shoulder the ubayatharar
duty, i hesitated a little. But, we could do this
again may be for Easter (?), not just confining to
hindu festivals. Even though tamil new year is coming
up.

3. How about katturai?

4. Is there any restriction for moderators from
joining the fray?

5. Having outside judges is a really good idea.


note: fwding this mail to Prasanna, even though he is
not a moderator.

anpudan,
Mathy


மட்டுறுத்துனர்களும் இன்னும் சில மரத்தடி உறுப்பினர்களும் இது குறித்து தங்களுக்குள் கருத்துப் பரிமாறிக்கொண்டனர். அவற்றில் சில கட்டுரைப் போட்டி பற்றியது. மரத்தடியில் சிலர் மரபுக் கவிதையில் நாட்டமுடையவர்களாதலால் மரபுக் கவிதைக்குப் போட்டி வைப்பது என்றெல்லாம் பேசினோம். கட்டுரை, மரபுக்கவிதைப் பிரிவுகளைச் சேர்ப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.



--- pksivakumar@a... wrote:
> Dear Mathy,
>
>
> Thanks for your response. Appreciate it.
>
> 1. Thanks for agreeing its a good idea. Maraththadi
> normally silently
> receives good ideas and then send to trash can :-)
> hope that accident wont
> happen to this idea.
>
> 2. I meant ubayatharar bcos it involves lots or
> organizational and money
> spending duties. We can have it every month every
> month if u want. So i have
> no problems for someone sponsoring it for Easter and
> Ramadan.
>
> 3.. Not only Katturai, I even thuoght of Marabu
> Kavithai and then dropped. We
> cant reach the stars when we start. Its only a trial
> and error and starting
> something new and so, I stoped with Kathai and
> Kavithai. The next
> ubayatharar, may add more categories. I am
> comfortable with Kathai and
> kavithai only for various reasons. Will discuss them
> with u. For example, If
> we say katurai, we have to find a common topic which
> will take more time and
> announce the title. else, makkal pulli rajala
> irunthu serious ilakiya katurai
> varai ezuthuvanga. Katurai should have a domain
> specified. So, to start with
> I want to do kathai and katurai.
>
> 4. Moderators can join the fray. Only ubayatharar
> and his immediate family
> cant join :-)
>
> 5. If moderators like it, I want to announce it
> today... pls let me know.
>
> Regards.




dear pks,

I like it.

I did not think abt the complications involved when i
suggested katturai (naanum pOttila kalanthukkathaan :D
vera enna :D ).

and i agree with you abt the complications.


maybe for now we can restrict to important occasions
OR

We can make this a bi-monthly affair or quarterly.

monthly is not a good idea i think - for 1. lack of
time for the participants and judges.

2. ubayathaarar kedaikirathu kashtam.

3. kungumapoo, cashew nut maathiri sparing'a use
panninaaththaan, arumai puriyum. :D

anpudan,
Mathy


Sunday, March 21, 2004

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......



நாம் தினசரி பலரைச் சந்திக்கிறோம். பழகுகிறோம். போகிறோம். வருகிறோம்.

சரியோ தவறோ நாம், மற்றவர்களை நல்லவர்களா கெட்டவர்களா என்று அளப்பதற்கு ஒரு அளவுகோல் வைத்திருக்கிறோம். வைத்திருப்பதற்கு நாம் தகுதியானவர்களா இல்லையா என்ற பிரச்சினையே இல்லாத படி எல்லாரும் வைத்திருக்கிறோம். எல்லாரையும் அளக்கிறோம். அதுலயும் நம்ம அளக்கிற விதம் சரியா தப்பா'னு நிறைய இருக்கு. அதெல்லாம் விட்டுவிடுவோம்.

என்னைப்போட்டுக் குடாயும் சந்தேகம் என்ன என்றால்...

நாம் அளக்குறோம் இல்லையா அவர்கள் சாதாரணர்களாக இல்லாமல் ஏதோ ஒரு விதத்தில் புகழ்பெற்றவர்களாய் இருந்தால், கலைஞர்களாய் இருந்தால், திரைப்பட நடிகர்களாய் இருந்தால், எழுத்தாளர்களாய் இருந்தால், தலைவர்களாய் இருந்தால் நான் என்ன செய்வது?

தருமரின் தேர் எப்போது அரை இஞ்ச் உயரத்தில் பறப்பதுபோல, சாதாரணர் அல்லாதார் எல்லோரும் கொஞ்சம் மேலே என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

நாம் சந்திக்கும் சாதாரணன் ஏதேனும் தவறிழைத்தால் அல்லது நம்மை இடைஞ்சல் செய்தால், நமக்கு ஏதேனும் கெடுதல் செய்தால் அல்லது முயற்சித்தால் சும்மா இருப்போமா? அளவுகோலால் அளக்காமல் விடுவோமா? சாதாரணர் அல்லாதார் ஏதேனும் மேலே சொன்னதுபோல செய்தால் நாம் என்ன செய்வது?



Tuesday, March 09, 2004

blé d'Inde




ble d'inde பிரெஞ்சில் மக்காச்சோளத்தை இந்தியக் கோதுமை என்று சொல்கிறார்கள். காரணம் கிரிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவிற்கு செல்கிறோம் என்று நினைத்துக்கொண்டு அமெரிக்காவில் வந்திறங்கியபோது அவ்வாறு அழைத்ததுதான். மேலும் அவருக்கு 'Chica' எனப்படும் சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபானத்தைக் கொடுத்து உபசரித்த கதை நமக்கு இப்போது தேவையில்லாதது.



தென் அமெரிக்காவில் மட்டுமல்லாது வட அமெரிக்காவிலும் சோளம் பயிரிடப்பட்டதாம். கனடாவில் அபரிதமாகப் பயிரிடப்பட்ட இந்தப் பயிர் பக்கத்து நாட்டில் அவ்வளவு பிரபலமாகவில்லை. பத்தொன்பதான் நூற்றாண்டிலேயே அமெரிக்க நாட்டில் சோளத்துக்கு மவுசு வந்ததாம்.

கனடியப் பழங்குடியினரே கியூபெக் மாகாணத்தில் வந்தேறிகளான பிரெஞ்சுக்காரருக்கு திறந்த வெளிகளில் சமைத்து உண்பது பற்றியும் அதன் சௌகரியங்களையும் காட்டிக்கொடுத்தனர். குளிர்காலத்தில் அல்ல. நல்ல தட்பவெட்ப சூழ்நிலை நாட்களில்தான். ;) அந்த நாட்களில் இப்படி திறந்தவெளிகளில் சமைத்து சாப்பிடுவது பிரான்சு நாட்டில் கேள்விப்படாத விஷயம்.

corn.gif

அறுவடை செய்யப்பட்ட சோளத்தை நீரில் வேகவைத்து லேசாக உப்பும் பட்டரும் தடவி அப்படியே உண்பது இங்கே இன்னமும் நடக்கும் விஷயம். இதை கற்றுக்கொடுத்தவர்கள் கனடியப் பழங்குடியின மக்கள். அதற்கு பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்து பெரிதாகக் கொண்டாடுகிறார்கள் - L'epluchette de ble d'inde (Corn Husking Party!). பெயர்தான் பிரெஞ்சுக்காரர்களுடையதே தவிர மற்றதெல்லாம் மண்ணின் மைந்தர்களுடையதே. இப்போதும் கியூபெக் மாகாண சமையலில் சோளம் பெரும் பங்கு வகிக்கிறது.

Monday, March 08, 2004

'ஆட்டோகிரா·ப்' படத்தில் ஒரு நல்ல பாட்டு



இன்று சேரனின் 'ஆட்டோகிரா·ப்' படத்தில் ஒரு நல்ல பாட்டு காதில் விழுந்தது. 'பாரதி கண்ணம்மா' தான் சேரனின் படங்களுள் முதலாவது என்றாலும், அவருடைய இன்னொரு படமான 'பாண்டவர் பூனி'தான் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழ்படங்களுக்கே முரணாக இயல்பான நடிப்பும் நல்ல கதையமைப்பையும் கொண்ட படம் அது. ஆனால் பாண்டவர் பூமியில் எந்தப்பாடலும் பெரிதாக *என்* கவனத்தை ஈர்க்கவில்லை. இந்தப் பாடலே, படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. பார்க்கலாம்! வரும் நாட்களில் பார்த்துவிட வேண்டியதுதான்.




Sunday, March 07, 2004

வலைப்பதிவில் இயங்குஎழுத்துரு

ஒரு யூனிகோடு வலைப்பதிவில் இயங்குஎழுத்துரு தேவையா இல்லையா? என்று சில மாதங்களுக்கு முன்பு கூட லேசாகப் பேச்சு வந்தது. இப்போ முத்து, வெங்கட் ஆகியோர் இதுபற்றிப் பேசி இருக்கிறார்கள். நான் என்னுடைய வலைப்பதிவுகள் அனைத்திலும் யூனிகோடு எழுத்துருவையே பாவிக்கிறேன். நான் உதவி செய்யும் நண்பர்களிடமும் அதையே சொல்கிறேன். எனக்குத் தெரிந்து மயிலை, பாமினி, திஸ்கி எழுத்துருக்களில் எழுதுபவர்களை யூனிகோடிற்கு மாற்றி வலைபதியச் சொல்லிக்கொடுத்திருக்கிறேன்.

ஆனால் எனக்கே இதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. Win 98 கணினியில் யூனிகோடு எழுத்துரு சரியாகத் தெரிவதில்லை. ஆரம்பத்தில் என்னுடைய வலைப்பதிவில் எனக்கே எழுத்துகள் தனித்தனியாகத் தெரிந்தன. என் வலைப்பதிவைப் படிப்பவர்களிடமிருந்தும் படிக்கமுடியவில்லை என்று மடல்கள் வந்தன. இயங்கு எழுத்துருவை நிர்மாணித்தபிறகே பிரச்சினை நீங்கியது.

குமுதம், விகடன் என்று வெவ்வேறு எழுத்துருக்களைப் பயன்படுத்தி இயங்கு எழுத்துரு பயன்படுத்துவதற்கும் யூனிகோடில் இயங்கு எழுத்துருப் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே சொல்வேன். பலருக்கு அலுவலகத்தில் எழுத்துருக்களை நிர்மாணிக்க இயலாத சூழ்நிலை, என் நண்பர்களில் சிலர் இணையத்தை உலாவுவது கணினி மையங்களிலேயே. அவர்கள் ஒவ்வொரு முறையும் எழுத்துருக்களை இறக்கிக் கொள்ள முடியாது.

சமீபத்தில் தொடங்கிய பெண்கள் கூட்டு வலைப்பதிவிலும் பலருக்கு யூனிகோடு எழுத்துருவில் எழுதுமாறு சொல்லி, எப்படி அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு எழுத்துருக்களில் இருந்து சுரதாவின் பொங்குதமிழ் செயலியைப் பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்னைப்போன்றே பல நண்பர்களும் புதிதாக வலைபதிபவர்களை யூனிகோடிலேயே வலைபதியுமாறு ஊக்குவிக்கிறார்கள். சிலர் பஞ்சிப்பட்டாலும், யூனிகோடிலேயே வலைபதிகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் நான்/நாங்கள் சொல்லும் எல்லோராலும் படிக்க முடியும் என்ற காரணமும், தேடியந்திரங்களில் தேடலாம் என்பதுவுந்தான். இந்த இரண்டு காரணங்களும் இச்சிறு துளிகளைப் பெரு வெள்ளமாக்கும் என்று நம்புகிறேன்.

தளையறு செயல்திறன் இல்லையென்றாலும், தமிழில் வலைப்பதிவுகள் அதிகமாவதற்கு இந்த இயங்கு எழுத்துருவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

Monday, March 01, 2004

Free Movable Type blogs

இப்போது வலைபதிந்து கொண்டிருக்கும் நண்பர்கள் யாராவது மூவபிள் டைப் ரக
வலைப்பதிவு வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?


சுரதா அவர்கள் இப்போது அந்த வசதியை தமது http://blog.yarl.net தளத்தின் மூலம் ஏற்படுத்தித்
தருகிறார்.